search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே லோன் பெற்றுத்தருவதாக கூறி பெண்களிடம் பணம் மோசடி
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் அருகே லோன் பெற்றுத்தருவதாக கூறி பெண்களிடம் பணம் மோசடி

    • டிப்-டாப் ஆசாமிகள் பெண்களிடம் தாங்கள் மகளிர் சுயஉதவி க்குழுவிற்கு கடனுதவி பெற்றுத் தருவதாகவும், இதுவரை பலருக்கு கடனுதவி வாங்கி தந்துள்ளதாகவும் கூறினர்.
    • பல பெண்கள் ரூ.2400 பணம் கட்டி ஏமாற்றம் அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள பெரியகோம்பை பட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டிப்டாப் ஆசாமிகள் சிலர் காரில் வந்து இறங்கினர். அவர்கள் அங்குள்ள பெண்களிடம் தாங்கள் மகளிர் சுயஉதவி க்குழுவிற்கு கடனுதவி பெற்றுத் தருவதாகவும், இதுவரை பலருக்கு கடனுதவி வாங்கி தந்துள்ளதாகவும் கூறினர்.

    முன்பணமாக ரூ.2400 கட்டினால், ரூ.1 லட்சம் பணம் கிடைக்கும். அதனை சிறுசிறு தொகைகளாக வங்கியில் செலுத்தலாம் என கூறியுள்ளனர். மேலும் திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாக த்தில் தங்கள் அலுவலகம் உள்ளது எனக்கூறி உள்ளனர். டேப்லெட்டில் கூகுள் மேப் வரைபடத்தை காட்டி தங்களது கிளை அலுவலகம் பல இடங்களில் உள்ளதாக அந்த கிராம மக்களை நம்ப வைத்தனர். அதனை நம்பி அந்த கிராமத்தை சேர்ந்த பல பெண்கள் ரூ.2400 பணம் கட்டினர்.

    சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவர்களிடமிருந்து ஆதார் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களையும் பெற்றுக் கொண்டனர். 2 நாட்களில் பணம் கிடைக்கும் என்று நம்பியிருந்த பெண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த ஆசாமிகள் சொன்ன விலாசத்திற்கு வந்து பார்த்த போது அங்கு அப்படி ஒரு அலுவலகமே இல்லையென தெரியவந்தது.

    இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண்கள் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்டாப் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    இதேபோல கடந்த சில நாட்களாக கிராமப்புறங்க ளில் தாங்கள் ஆதரவ ற்றோருக்கு உதவிகள் செய்து வருவதாகக் கூறி உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு சில கும்பல் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகிறது. பணம் மட்டுமின்றி அரிசி, பருப்பு, துணிகள் ஆகியவற்றையும் பெற்றுக் கொண்டு ஆதரவற்றோர் மையத்திற்கு உதவி செய்வதாக கூறி வருகின்றனர். எனவே இதுபோன்ற மோசடி கும்பலை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என போலீசார் எச்சிரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×