search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கன்"

    • கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக 23 ஆயிரத்து 500 கிலோ சிக்கன் சப்ளை செய்தோம்.
    • புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் செந்தில்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள சிக்கன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருபவர் பாலமுருகன்(வயது39).

    இவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள சிக்கன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறேன்.

    கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு எங்கள் கடைக்கு சென்னை குறுக்குபேட்டையை சேர்ந்த செந்தில்மோகன் என்பவர் வந்தார்.

    அவர் தான் சென்னையில் சிக்கன் கடை வைத்து நடத்தி வருவதாகவும், எனக்கு மொத்தமாக சிக்கன் சப்ளை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். அதற்கான பணத்தை உரிய தவணையில் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தார்.

    இதனை நம்பி நாங்கள் கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக 23 ஆயிரத்து 500 கிலோ சிக்கன் சப்ளை செய்தோம்.

    இதுவரை சப்ளை செய்த சிக்கனுக்கு ரூ.47 லட்சத்து 37 ஆயிரத்து 999 செந்தில்மோகன் தர வேண்டும். ஆனால் அவர் இதுவரை பணத்தை தரவில்லை.

    இதுகுறித்து அவரிடம் கேட்டால் விரைவில் தருகிறேன் என்றார்.

    இந்நிலையில், கடந்த 10 மாதமாக செந்தில்மோகன் சிக்கன் வாங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நான் சென்னைக்கு சென்று அவர் கூறிய இடத்திற்கு சென்றேன்.

    அப்போது அங்கு அவர் சொல்லிய சிக்கன் கடை இல்லை. மேலும் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்கவில்லை. அப்போது தான் அவர் ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.

    எனவே சிக்கன் வாங்கி விட்டு ரூ.47.37 லட்சம் மோசடி செய்த செந்தில்மோகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் செந்தில்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிப்-டாப் வாலிபர் சிறுவனை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
    • தப்பி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    கே.கே. நகர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் மோகன்ராஜ். இவரது கடைக்கு நேற்று இரவு வந்த "டிப் டாப்" வாலிபர் ஒருவர் ரூ.760-க்கு பரோட்டா, பிரைட் ரைஸ், சிக்கன் உள்ளிட்ட டிபன் வகைகளை பார்சல் வாங்கினார் அப்போது பணத்தை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டதாக கூறிய வாலிபர் கடை ஊழியரை அனுப்பி வைத்தால் பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து மோகன் ராஜ், கடையில் வேலை பார்த்து வரும் சிறுவனை அனுப்பி வைத்தார். டிப்-டாப் வாலிபர் சிறுவனை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    கடையின் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவிற்குள் சென்று ஒரு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய வாலிபர் ஓட்டல் ஊழியரின் செல்போனை கேட்டு வாங்கினார்.

    மேலும் 2-வது தளத்தில் உள்ள நண்பரிடம் கூறி விட்டேன். போய் பணத்தை வாங்கி கொண்டு வா" என்று கூறி அனுப்பி வைத்தார். இதை உண்மை என்று நம்பிய ஓட்டல் ஊழியர் அந்த வீட்டின மேல் தளத்திற்கு சென்றபோது அங்கு யாரும் இல்லை.

    அவர் கீழே இறங்கி வருவதற்குள் டிப்-டாப் வாலிபர் அங்கிருந்து செல்போனுடன் தப்பி சென்றுவிட்டார். சினிமா பாணியில் அவர் ஏமாற்றி டிபன் வாங்கி சென்று இருப்பது தெரிந்தது.

    டிபன் பார்சல் வாங்கிக் கொண்டு நூதனமான முறையில் செல்போனையும் பறித்து தப்பி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் நேற்று இரவு சிலர் சிக்கன் சாப்பிட சென்றுள்ளனர்.
    • 30லிருந்து 40 கிலோவிற்கும் அதிகமாக பழைய சிக்கன் குளிர்சாதன பெட்டியில் இருந்ததை கண்டு பிடித்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் நேற்று இரவு சிலர் சிக்கன் சாப்பிட சென்றுள்ளனர்.

    அது சாப்பிட முடியாத நிலையில் துர்நாற்றம் வீசவே,இது பற்றி கடை பணியாளர்களிடம் கேட்க, அவர்கள் மொழி தெரியாமல் எதையும் கண்டுகொள்ளாமல் வேலை செய்து கொண்டிருந்தனர்.

    இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சோதனை செய்ததில் 30லிருந்து 40 கிலோவிற்கும் அதிகமாக பழைய சிக்கன் குளிர்சாதன பெட்டியில் இருந்ததை கண்டு பிடித்தனர்.

    அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது போன்று நகரில் உள்ள அனைத்து சில்லி சிக்கன் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறையிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×