search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரோட்டா, சிக்கன் வாங்கி வாலிபர் நூதன மோசடி- ஓட்டல் ஊழியரின் செல்போனையும் பறித்து சென்றார்
    X

    பரோட்டா, சிக்கன் வாங்கி வாலிபர் நூதன மோசடி- ஓட்டல் ஊழியரின் செல்போனையும் பறித்து சென்றார்

    • டிப்-டாப் வாலிபர் சிறுவனை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
    • தப்பி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    கே.கே. நகர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் மோகன்ராஜ். இவரது கடைக்கு நேற்று இரவு வந்த "டிப் டாப்" வாலிபர் ஒருவர் ரூ.760-க்கு பரோட்டா, பிரைட் ரைஸ், சிக்கன் உள்ளிட்ட டிபன் வகைகளை பார்சல் வாங்கினார் அப்போது பணத்தை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டதாக கூறிய வாலிபர் கடை ஊழியரை அனுப்பி வைத்தால் பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து மோகன் ராஜ், கடையில் வேலை பார்த்து வரும் சிறுவனை அனுப்பி வைத்தார். டிப்-டாப் வாலிபர் சிறுவனை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    கடையின் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவிற்குள் சென்று ஒரு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய வாலிபர் ஓட்டல் ஊழியரின் செல்போனை கேட்டு வாங்கினார்.

    மேலும் 2-வது தளத்தில் உள்ள நண்பரிடம் கூறி விட்டேன். போய் பணத்தை வாங்கி கொண்டு வா" என்று கூறி அனுப்பி வைத்தார். இதை உண்மை என்று நம்பிய ஓட்டல் ஊழியர் அந்த வீட்டின மேல் தளத்திற்கு சென்றபோது அங்கு யாரும் இல்லை.

    அவர் கீழே இறங்கி வருவதற்குள் டிப்-டாப் வாலிபர் அங்கிருந்து செல்போனுடன் தப்பி சென்றுவிட்டார். சினிமா பாணியில் அவர் ஏமாற்றி டிபன் வாங்கி சென்று இருப்பது தெரிந்தது.

    டிபன் பார்சல் வாங்கிக் கொண்டு நூதனமான முறையில் செல்போனையும் பறித்து தப்பி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×