search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிங்கப்பூர்"

    • போலி பாஸ்போர்ட் எடுத்து சிங்கப்பூரில் வேலை பார்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • கைதான வாலிபர் மீது ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் வீரகனூர் அருகே உள்ள வடக்கு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 46). இவர் அம்மம்பாளையத்தில் உள்ள ஆவினில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது பெயரில் அவரது உறவினரான தெற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (37) என்பவர் வீரமுத்து பெயரில் போலியாக பாஸ்போர்ட் 2002-ம் ஆண்டு எடுத்து சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

    இது குறித்து வீரமுத்து சேலம் குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். அதன் பேரில் டிஎஸ்பி இளமுருகன் மற்றும் போலீசார், ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ராஜேஷ் நாடு திரும்பும் போது தகவல் கொடுக்குமாறு லுக் அவுட் நோட்டீஸ் விமான நிலையத்துக்கு அனுப்பினர்.

    இதையடுத்து ராஜேஷ் நேற்று திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அங்குள்ள அதிகாரிகள் பிடித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

    அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் எனக்கு 17 வயது என்பதால் பாஸ்போர்ட் எடுக்க முடியாது. எனவே வீரமுத்து ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை திருடி பாஸ்போர்ட் எடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து ராஜேசை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பூச்சி பண்ணைகளை ஏற்படுத்துவதை ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஊக்குவித்து வருகிறது.
    • பூச்சிகளை நேரடியாகவோ, அல்லது எண்னையில் பொரித்தோ சாப்பிட முடியும் என்று அங்குள்ள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கவும் அனுமதி அளிப்பது தொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவன தொழில் துறையிடம் சிங்கப்பூர் அரசு கருத்து கோரியுள்ளது.

    இதற்கு அனுமதி கிடைத்தால் வண்டுகள், அந்துப் பூச்சிகள், தேனிக்கள் போன்ற இனங்களை சிங்கப்பூரில் வசிக்கும் மனிதர்கள் உணவாக உட்கொள்ள முடியும். இந்த பூச்சிகளை நேரடியாகவோ, அல்லது எண்னையில் பொரித்தோ சாப்பிட முடியும் என்று அங்குள்ள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

    பூச்சிகளை உனவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிடம் இருந்து இது தொடர்பான நடைமுறைகளை சிங்கப்பூர் உணவுத்துறை பெற்றுள்ளது.

    முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வை மேற்கொண்டு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உணவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    சமீபகாலமாக மனிதர்கள் உணவாக உட்கொள்வதற்காகவும், கால்நடை தீவனத்துக்காகவும் வணிகரீதியான பூச்சி பண்ணைகளை ஏற்படுத்துவதை ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஊக்குவித்து வருகிறது.

    • கற்றல் - கற்பித்தல் - களப்பணியாற்றல் ஆகிய மூன்று நிலைகளில் இந்த ஒப்பந்தம் செயல்பட வழிவகுத்துள்ளது.
    • புரிந்துணர்வு ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர்குறிஞ்சிவேந்தன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் மாணவர்களை ஆளுமைத்திறன் பயிற்சி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளுக்காக ஆயத்தப்படுத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    சிங்கப்பூரை சேர்ந்த ஏஸ் பன்னாட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தினை விரைவில் செயல்படுத்த உள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தெரிவித்தார்.

    சிங்கப்பூரைச் சேர்ந்த ஏஸ் பன்னாட்டுக் கல்வி மற்றும் பயிற்சிக்கான நிறுவனத்துடனான இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன் மற்றும் ஏஸ் நிறுவன செயல்இயக்குநர் டாக்டர் இராமதாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    கற்றல் - கற்பித்தல் - களப்பணியாற்றல் ஆகிய மூன்று நிலைகளில் இந்த ஒப்பந்தம் செயல்பட வழிவகுத்துள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூரில் பயிலும் மாணவர்களுக்கு நவீனச்சூழலுக்கு ஏற்ப ஆளுமைத்திறன் மற்றும் தலைமைத்துவப்பயிற்சி, மேலாண்மைக் கூறுகளில் பயிலரங்கங்கள் ஆகியவை இதன்வழி நடத்தப்பட உள்ளன.

    மேலும் இருதரப்பு ஆசிரியர்களுக்கான கருத்தரங்கப் பங்கேற்பு வாய்ப்புகள் மற்றும் புத்தொளிப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பெறும் என்று இந்நிகழ்வில் பங்கேற்ற துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தெரிவித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் இரா.குறிஞ்சிவேந்தன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

    • சிங்கப்பூர் அணியை இந்தியா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
    • ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இந்தியா வெற்றி.

     பர்மிங்காம்:

    காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்- சத்தியன் ஞானசேகரன் ஜோடி சிங்கப்பூரை சேர்ந்த ஷாவோ ஃபெங் ஈதன் போ மற்றும் கிளாரன்ஸ் செவ் செ யூ ஜோடியை 11-5, 11-5 என்ற கணக்கில் வீழ்த்தியது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல், சிங்கப்பூர் வீரர் பாங்க் யெவ் என் கோயனை, 11-8, 11-9 11-9 என்ற செட்களில் வீழ்த்தி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன், சிங்கப்பூரின் கிளாரன்ஸ் செவ் சே யூவை 11-7, 11-5, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்திய ஆண்கள் அணி சிங்கப்பூர் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • கழிவு நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புற ஊதாக் கதிர்களால் சுத்திகரிக்கப்படுகிறது.
    • மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக சிறப்பு பீர் தயாரிக்கப்படுகிறது

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து பீர் தயாரிக்கப்பட்டு, 'நியூப்ரூ' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கழிவு நீர் முதலில் சிங்கப்பூர் குடிநீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பம்ப் செய்யப்பட்டு அதன்பின், வடிகட்டப்பட்ட சுத்தமான நீர் ஆகும். இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீரின் பிராண்ட் நியூவாட்டர் (NEWater) எனப்படுகிறது. இந்த குடிநீரை பீர் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றனர்.

    சிங்கப்பூரில் தேசிய நீர் நிறுவனத்துடன் இணைந்து உள்ளூர் மதுபான நிறுவனமான ப்ரூவர்க்ஸ் இந்த சிறப்பு பீரை அறிமுகப்படுத்தியுள்ளது. கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்டதா? என்ற சலசலப்பு இருந்தாலும், சிங்கப்பூர் முழுவதும் இந்த சிறப்பு பீர் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. இந்த பீர் மிகவும் சுவையாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பீருக்கு தற்போது மதுபிரியர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட, அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இது மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாகும்.

    நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கத் தொடங்கியதால், கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் நீர் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை அரசு செயல்படுத்த தொடங்கி உள்ளது. முதலில் கழிவு நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புற ஊதாக் கதிர்களால் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் அது குடிநீராக மாறுவதற்கு முன்பு பல்வேறு சுத்திகரிப்பு நிலைகளில் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே பயன்பாட்டிற்கு வருகிறது.

    வீடு மற்றும் கடையில் வேலை செய்ய இந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை தடை செய்துள்ள சிங்கப்பூர் அரசு, சட்ட ரீதியாகவும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. #Singapore
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் வீடு மற்றும் கடைகளில் வேலையாளாக பணியாற்றுவது இந்தோனேசியர்கள்தான். அங்கு நிலவும் வறுமை காரணமாக சிங்கப்பூரை அவர்கள் நாடி வருகின்றனர். மற்ற நாடுகளை போல இல்லாமல் கடுமையான தொழிலாளர் சட்டங்களை கொண்ட சிங்கப்பூர் அரசு, வேலையாட்களுக்கு தேவையான வசதிகள் மற்ற நாடுகளை விட அதிகமாகவே கிடைக்கும்.

    இந்நிலையில், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று ‘இந்தோனேசிய பணியாளர்கள் விற்பனைக்கு’ என சமீபத்தில் விளம்பரம் செய்துள்ளனர். இது தொடர்பான புகார் அரசுக்கு சென்ற நிலையில், அந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை அரசு தடை செய்துள்ளது.

    மேலும், சட்ட ரீதியான நடவடிக்கையையும் சிங்கப்பூர் அரசு தொடங்கியுள்ளது. 
    சிங்கப்பூரில் பணியாற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் அந்நாட்டு தேசியக்கொடியை அவமதிக்கும் வண்ணம் போட்டோ பதிவிட்டு தனது வேலையை இழந்துள்ளார். #India #Singapore
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி வாலிபரான அவிஜித் தாஸ் பட்நாயக் அங்குள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி இந்திய சுதந்திர தினத்தின் முதல் நாளன்று ‘சிங்கப்பூர் இந்தியர்கள்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் ஒரு போட்டோ பதிவிட்டார்.

    சிங்கப்பூரின் தேசிய கொடியை இரண்டு கைகள் கிழிப்பது போலவும், அதனுள் இந்திய கொடி தெரிவது போலவும் அந்த போட்டோவில் இருந்துள்ளது. மேலும், ‘இன்னும் எந்தன் இதயத்தில்’ என்ற அர்த்தம் தரும் இந்தி பாடல் வரிகளையும் அவிஜித் பதிவிட்டிருந்தார்.

    இதனை பார்த்த சிங்கப்பூர் வாசிகள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பான புகார் போலீசுக்கும் சென்றது. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அவிஜித் பணியாற்றும் வங்கியும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது.

    தனது செயலுக்கு அவிஜித் மன்னிப்பு கோரியிருந்தாலும், அந்நிறுவனம் அவரை பணியிலிருந்து நீக்கியுள்ளது. மேலும், அவர் சட்ட ரீதியிலான விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.
    சிங்கப்பூரில் பணியாற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் அந்நாட்டு தேசியக்கொடியை அவமதிக்கும் வண்ணம் போட்டோ பதிவிட்டு சிக்கலில் மாட்டியுள்ளார். #India #Singapore
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி வாலிபரான அவிஜித் தாஸ் பட்நாயக் அங்குள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி இந்திய சுதந்திர தினத்தின் முதல் நாளன்று ‘சிங்கப்பூர் இந்தியர்கள்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் ஒரு போட்டோ பதிவிட்டார்.

    சிங்கப்பூரின் தேசிய கொடியை இரண்டு கைகள் கிழிப்பது போலவும், அதனுள் இந்திய கொடி தெரிவது போலவும் அந்த போட்டோவில் இருந்துள்ளது. மேலும், ‘இன்னும் எந்தன் இதயத்தில்’ என்ற அர்த்தம் தரும் இந்தி பாடல் வரிகளையும் அவிஜித் பதிவிட்டிருந்தார்.



    இதனை பார்த்த சிங்கப்பூர் வாசிகள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பான புகார் போலீசுக்கும் சென்றது. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அவிஜித் பணியாற்றும் வங்கியும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டால் இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டியது வரும். மேலும், வேலையும் பறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், தனது செயலுக்கு அவிஜித் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
    சமீபத்தில் சிங்கப்பூரில் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நிருபர்கள் கேட்ட கேள்வி வேறு, அந்த கேள்விக்கு மோடி சொன்ன பதில் வேறு என ராகுல் காந்தி ட்விட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
    சிங்கப்பூரில் நான்யங் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவரிடம் சிங்கப்பூர் பத்திரிக்கையாளர்கள் ஏராளமான கேள்விகள் கேட்டனர். அதற்கு பிரதமர் மோடி தன்னிச்சையாக இந்தியில் பதில் அளித்தார்.

    அவரது பதிலை அருகில் இருந்த ஒருவர் மொழி பெயர்த்து நிருபர்களுக்கு விளக்கி கூறினார். ஆனால், இந்த கேள்வி, பதில் உண்மையானதாக நடக்கவில்லை என்றும், பிரதமர் மோடி சில பதில்களை முன்கூட்டியே எழுதி வைத்து அதை நிருபர்களுக்கு தெரிவித்ததாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக, ராகுல் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

    பிரதமர் மோடி சிங்கப்பூரில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை சொல்லவில்லை. அவர் பதில் அளித்ததை அருகில் இருந்த மொழி பெயர்ப்பாளர் அப்படியே சொல்லவில்லை.

    அதற்கு பதில் மொழி பெயர்ப்பாளர் தன்னிடம் இருந்த தாளில் ஏற்கனவே எழுதி வைத்திருந்த பதிலை படித்தார். நிருபர்கள் கேட்ட கேள்வி வேறு, மோடி சொன்ன பதில் வேறு.

    அந்த பேட்டியில் பிரதமர் மோடி உண்மையான பதிலை சொல்லாதது ஒரு வகையில் நல்லதுதான். அவர் உண்மையான பதிலை சொல்லியிருந்தால் நமக்கெல்லாம் தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகி இருக்கும்.

    இவ்வாறு ராகுல் கிண்டல் செய்துள்ளார்.

    அந்த ட்விட்டர் பதிவுடன் பிரதமர் மோடி பேட்டி அளிக்கும் காட்சியையும், அவரது உதவியாளர் ஏற்கனவே பதில் எழுதி வைத்து வாசிக்கும் காட்சியையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.

    ராகுலின் இந்த கிண்டலுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு இரங்கல் தெரிவித்து கூட கருத்து எழுத தெரியாது. செல்போனை பார்த்து எழுதியவர். அவர் பிரதமரை குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

    ராகுல்காந்தி இன்று அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்ப உள்ளார். அப்போது இதற்கு அவர் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அழகிய மதுபானி ஓவியத்தை வாங்கி அதற்கான பணத்தை ‘ருபே கார்ட்’ மூலம் செலுத்தினார். #ModiInSingapore
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்திய அன்னியச் செலாவணிக்கு மாற்றான ‘பிம், ருபே, எஸ்.பி.ஐ.’ மொபைல் ஆப்களை கடந்த 31-ம் தேதி சிங்கப்பூர் மக்களிடையே அறிமுகம் செய்து வைத்தார்.



    இந்நிலையில், சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகமாக வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் கேம்ப்பெல் சாலையில் அமைந்துள்ள இந்திய பாரம்பரியக் கலைகள் கண்காட்சி கூடத்துக்கு இன்று சென்ற பிரதமர் மோடி, அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த அழகிய மதுபானி ஓவியத்தை வாங்கி அதற்கான பணத்தை ‘ருபே கார்ட்’ மூலம் செலுத்தினார்.

    நேபாளம் மற்றும் இந்தியாவில் உள்ள மிதிலை நகரில் மதுபானி ஓவியங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. #ModiInSingapore

    மூன்றுநாள் பயணமாக சிங்கப்பூர் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 2-ம் தேதி அங்கு மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைக்கிறார். #PMModi #MahatmaGandhi
    சிங்கப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி மூன்றுநாள் பயணமாக சிங்கப்பூர் நாட்டுக்கு செல்கிறார். இந்தியர்கள், குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதிக்கு செல்லும் மோடி, அங்குள்ள நம் நாட்டவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    இந்தியாவில் உள்ள கைவினை கலைஞர்கள் குறுகிய காலம் சிங்கப்பூருக்கு சென்று தங்களது தொழில் திறமையை அங்குள்ளவர்களுக்கு பயிற்றுவிக்கும் வகையில் புதிய கலைக்கூடத்தை திறந்து வைக்கும் அவர், அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிடுகிறார்.

    சவுத் பிரிட்ஜ் ரோடு பகுதியில் உள்ள நூற்றாண்டு கால பழமை வாய்ந்த இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்யும் பிரதமர் மோடி, மெரினா பே பகுதியில் உள்ள பிரபல கிளிஃபர் பையர் உணவகத்தின் அருகே ஜூன் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைக்கிறார். #PMModi #MahatmaGandhi
    எதிரும் புதிருமாக இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர். #Trump #KimJongUn
    வாஷிங்டன்:

    அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத பரிசோதனை என சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தற்போது தனது சேட்டைகளை மூட்டை கட்டி வைத்து மற்ற நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க விரும்புகிறார்.

    கடந்த மாதம் தென்கொரியா அதிபர் மூன் ஜேஇன் உடன் கிம் நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தை உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    டிரம்ப் - கிம் சந்திப்பு நடத்த பல்வேறு நகரங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில், ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் கிம் ஜாங் அன்னை சந்திக்க உள்ளேன். உலக அமைதிக்கு நாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியின் சிறப்பு மிக்க தருணம் என டிரம்ப் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Trump #KimJongUn
    ×