search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிண்டல்"

    • கேலி, கிண்டலை கண்டித்த தம்பதி மீது தாக்குதல் நடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவியை தாக்கிய அழகுராஜாவை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகேயுள்ள கோட்டைநத்தம் கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 32). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 10 நாட்களுக்கு ஒருமுறை தனது சொந்த ஊருக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்தி–ருந்தார். அதன்படி நேற்று ஊருக்கு கணவர் வந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த அழகுராஜா, தன்னை கேலி, கிண்டல் செய்துவருவதாக புகார் கூறினார். இதையடுத்து கணவன், மனைவி இருவரும் அவரிடம் நியாயம் கேட்க சென்றனர்.

    இதில் ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவி இருவரை–யும் அழகுராஜா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் அரசு மருத்துவம–னையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவியை தாக்கிய அழகுராஜாவை கைது செய்தனர்.

    • பெண்ணிடம் கிண்டல்; வாலிபரின் தந்தை கைது செய்யப்பட்டார்.
    • திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார்த்திபனை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை தேவி நகரை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி தனபாக்கியம் (35). இவரை அதே பகுதியில் வசிக்கும் பார்த்திபன் (56) என்பவரின் மகன் கிண்டல் செய்து வந்தார். இதுகுறித்து தனபாக்கியம் போலீசில் புகார் செய்தார். ஆத்திரம் அடைந்த பார்த்திபன், அந்த வாலிபரை தாக்கி விட்டு தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார்த்திபனை கைது செய்தனர்.

    சுஷ்மா சுவராஜை சமூக வலைதளங்களில் சிலர் மோசமான வகையில் கிண்டல் செய்து வந்தது தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்த கருத்தும் வெளிவராத நிலையில், அந்த அமைதியை ராஜ்நாத் சிங் உடைத்துள்ளார். #SushmaSwaraj #RajnathSingh
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசத்தில் கணவர் முஸ்லிம் என்பதால் பெண்ணுக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து, அந்த மண்டல பாஸ்போர்ட் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என கூறி அந்த அதிகாரிக்கு ஆதரவாக சுஷ்மா மீது பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

    சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் சுஷ்மாவுக்கு எதிராக மோசமாக விமர்சிக்க, பொங்கி எழுந்த அவர் வெளிப்படையாகவே இது தொடர்பாக ட்வீட் செய்ய தொடங்கினார். பலர் எல்லை மீறி சுஷ்மாவின் கணவரையும் சேர்ந்து விமர்சித்தாலும், பாஜகவிடம் இருந்தோ, மத்திய அரசிடம் இருந்தோ எந்த கண்டிப்பும் வரவில்லை.



    இதற்கிடையே, தனக்கு எதிரான ட்வீட்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். அதில், 57 சதவிகிதம் பேர் இல்லை என பதிலளித்துள்ளனர். காங்கிரஸ், இடதுசாரிகள், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் சுஷ்மா மீதான இந்த சைபர் தாக்குதல்களை கண்டித்தனர்.

    இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு இன்று பதிலளித்த உள்துறை மந்திரி, சுஷ்மா மீதான விமர்சனங்கள் தவறானவை என கூறினார். 
    சமீபத்தில் சிங்கப்பூரில் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நிருபர்கள் கேட்ட கேள்வி வேறு, அந்த கேள்விக்கு மோடி சொன்ன பதில் வேறு என ராகுல் காந்தி ட்விட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
    சிங்கப்பூரில் நான்யங் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவரிடம் சிங்கப்பூர் பத்திரிக்கையாளர்கள் ஏராளமான கேள்விகள் கேட்டனர். அதற்கு பிரதமர் மோடி தன்னிச்சையாக இந்தியில் பதில் அளித்தார்.

    அவரது பதிலை அருகில் இருந்த ஒருவர் மொழி பெயர்த்து நிருபர்களுக்கு விளக்கி கூறினார். ஆனால், இந்த கேள்வி, பதில் உண்மையானதாக நடக்கவில்லை என்றும், பிரதமர் மோடி சில பதில்களை முன்கூட்டியே எழுதி வைத்து அதை நிருபர்களுக்கு தெரிவித்ததாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக, ராகுல் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

    பிரதமர் மோடி சிங்கப்பூரில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை சொல்லவில்லை. அவர் பதில் அளித்ததை அருகில் இருந்த மொழி பெயர்ப்பாளர் அப்படியே சொல்லவில்லை.

    அதற்கு பதில் மொழி பெயர்ப்பாளர் தன்னிடம் இருந்த தாளில் ஏற்கனவே எழுதி வைத்திருந்த பதிலை படித்தார். நிருபர்கள் கேட்ட கேள்வி வேறு, மோடி சொன்ன பதில் வேறு.

    அந்த பேட்டியில் பிரதமர் மோடி உண்மையான பதிலை சொல்லாதது ஒரு வகையில் நல்லதுதான். அவர் உண்மையான பதிலை சொல்லியிருந்தால் நமக்கெல்லாம் தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகி இருக்கும்.

    இவ்வாறு ராகுல் கிண்டல் செய்துள்ளார்.

    அந்த ட்விட்டர் பதிவுடன் பிரதமர் மோடி பேட்டி அளிக்கும் காட்சியையும், அவரது உதவியாளர் ஏற்கனவே பதில் எழுதி வைத்து வாசிக்கும் காட்சியையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.

    ராகுலின் இந்த கிண்டலுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு இரங்கல் தெரிவித்து கூட கருத்து எழுத தெரியாது. செல்போனை பார்த்து எழுதியவர். அவர் பிரதமரை குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

    ராகுல்காந்தி இன்று அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்ப உள்ளார். அப்போது இதற்கு அவர் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×