search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுஷ்மாவுக்கு எதிரான விமர்சனங்கள் தவறானவை - பாஜகவின் அமைதியை உடைத்த ராஜ்நாத் சிங்
    X

    சுஷ்மாவுக்கு எதிரான விமர்சனங்கள் தவறானவை - பாஜகவின் அமைதியை உடைத்த ராஜ்நாத் சிங்

    சுஷ்மா சுவராஜை சமூக வலைதளங்களில் சிலர் மோசமான வகையில் கிண்டல் செய்து வந்தது தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்த கருத்தும் வெளிவராத நிலையில், அந்த அமைதியை ராஜ்நாத் சிங் உடைத்துள்ளார். #SushmaSwaraj #RajnathSingh
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசத்தில் கணவர் முஸ்லிம் என்பதால் பெண்ணுக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து, அந்த மண்டல பாஸ்போர்ட் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என கூறி அந்த அதிகாரிக்கு ஆதரவாக சுஷ்மா மீது பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

    சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் சுஷ்மாவுக்கு எதிராக மோசமாக விமர்சிக்க, பொங்கி எழுந்த அவர் வெளிப்படையாகவே இது தொடர்பாக ட்வீட் செய்ய தொடங்கினார். பலர் எல்லை மீறி சுஷ்மாவின் கணவரையும் சேர்ந்து விமர்சித்தாலும், பாஜகவிடம் இருந்தோ, மத்திய அரசிடம் இருந்தோ எந்த கண்டிப்பும் வரவில்லை.



    இதற்கிடையே, தனக்கு எதிரான ட்வீட்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். அதில், 57 சதவிகிதம் பேர் இல்லை என பதிலளித்துள்ளனர். காங்கிரஸ், இடதுசாரிகள், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் சுஷ்மா மீதான இந்த சைபர் தாக்குதல்களை கண்டித்தனர்.

    இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு இன்று பதிலளித்த உள்துறை மந்திரி, சுஷ்மா மீதான விமர்சனங்கள் தவறானவை என கூறினார். 
    Next Story
    ×