கேலி, கிண்டலை கண்டித்த தம்பதி மீது தாக்குதல்

கேலி, கிண்டலை கண்டித்த தம்பதி மீது தாக்குதல் நடந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவியை தாக்கிய அழகுராஜாவை கைது செய்தனர்.
கேலி, கிண்டலை கண்டித்த தம்பதி மீது தாக்குதல்
Published on

விருதுநகர்

விருதுநகர் அருகேயுள்ள கோட்டைநத்தம் கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 32). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 10 நாட்களுக்கு ஒருமுறை தனது சொந்த ஊருக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்தி–ருந்தார். அதன்படி நேற்று ஊருக்கு கணவர் வந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த அழகுராஜா, தன்னை கேலி, கிண்டல் செய்துவருவதாக புகார் கூறினார். இதையடுத்து கணவன், மனைவி இருவரும் அவரிடம் நியாயம் கேட்க சென்றனர்.

இதில் ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவி இருவரை–யும் அழகுராஜா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் அரசு மருத்துவம–னையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவியை தாக்கிய அழகுராஜாவை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com