search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓவியம்"

    • தென்மேற்கு பருவமழை காலத்தில் அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சீசன் களைகட்டும்.
    • உணவு பாதுகாப்பு அதிகாரி நாக சுப்பிரமணியன் குற்றாலம் அருவிக்கரை பகுதிகளில் திடீரென ஆய்வுகளை மேற்கொண்டார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கிவரும் குற்றாலம் அருவிகளில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினரும் வந்து ஆர்வமுடன் குளித்து மகிழ்வர்.

    இங்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சீசன் களைகட்டும். இருப்பினும் தற்பொழுது அருவிகளில் கொட்டும் நீரில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில் குற்றாலம் பகுதிகளில் உணவு மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகளவில் உள்ளன. அதில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி உண்டு மகிழ்வர். சுற்றுலா பயணிகளுக்கு தரம் இல்லாத உணவு பொருட்களை சிலர் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி நாக சுப்பிரமணியன் குற்றாலம் அருவிக்கரை பகுதிகளில் திடீரென ஆய்வுகளை மேற்கொண்டார்.

    அப்போது கெட்டுப்போன வாழைப்பழ சிப்ஸ் 665 கிலோ மற்றும் பேரிச்சம்பழம் 152 கிலோ, செயற்கை கலர் சேர்க்கப்பட்ட அல்வா 420 கிலோ, தடைசெய்யப்பட்ட 35 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை அங்குள்ள 2 கடைகளில் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பினாயில் ஊற்றி அவை அழிக்கப்பட்டது. சமையலறை பகுதி சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் அதற்கும் அபராதம் ரூ.18 ஆயிரம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

    • அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை தத்ரூபமாக வரைந்துள்ளார்.
    • சந்திரயான்-3 போன்ற பல அரிய ஓவியங்களை ஏற்கனவே வரைந்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் வடதா ராகுல் பட்நாயக் (வயது 35) ஓவியக் கலைஞரான இவர் ஒரு மென்மையான மா இலையில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை தத்ரூபமாக வரைந்துள்ளார்.

    அதில் ஒரு பகுதியில் ராமர் மற்றும் சீதை மறுபுறம் அனுமான் உருவங்கள் உள்ளன.

    இது ஒரு புகைப்படம் போல தத்ரூபமாக காட்சியளிக்கிறது. 4 மணி நேரம் உன்னிப்பாக முயற்சி செய்து இந்த படத்தை வரைந்தார். இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் திறக்கப்படுவதால் தனது பக்தியை வெளிப்படுத்தும் நோக்கமாக இதனை வரைந்ததாக அவர் கூறியுள்ளார்.

    இவர் அரிசி மற்றும் பறவைகளின் இறகுகளில் ஓவியங்கள் வரைந்துள்ளார். சீனிவாசா திருக்கல்யாணம், ராமர் பட்டாபிஷேகம், சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், சந்திரயான்-3 போன்ற பல அரிய ஓவியங்களை ஏற்கனவே வரைந்துள்ளார்.

    • தஞ்சை ஓவியக்கலையில் சத்தமின்றி சாதனை படைத்து வரும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஓவியர்
    • ஓவியக்கலைஞர்களுக்கு அரசு உதவி செய்ய கோரிக்கை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மணவாள அண்ணாநகரை சேர்ந்தவர் சி.காத்தான். இவர் தஞ்சை பெயிண்டிங் போர்டு தயாரிக்கும் பணியில் கடந்த 30 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.

    சத்தமின்றி சாதனை படைத்து வரும் சி.காத்தான் பல கலைஞர்களை உருவாக்குவதே தனது நோக்கம் என கூறுகின்றார்.

    இவரிடம் சென்னை, திருச்சி, செட்டிநாடு, கோயம்புத்தூர், ஹைதராபாத் போன்ற ஊர்களிலிருந்து ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

    இதன் மதிப்பு குறைந்தபட்சம் ரூ.3000லிருந்து பல லட்சம் வரை நீடிக்கிறது. சுத்த தங்கத்தில் தகடு செய்து வைப்பதால் தங்கம் விலை நிர்ணயித்து மதிப்பீடு செய்யப்படுகிறது.

    பெரும்பாலும் கிருஷ்ணர், விநாயகர்,பெருமாள் படங்கள் தஞ்சை பெயிண்டிங்கில் தயாரிக்கின்றார். மேலும் இவர் தயாரித்துள்ள காமதேனு,நரசிம்மர் ஓவியங்கள் அவரது கலை திறமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. தனது கலை திறமையை அப்பகுதி இளைஞர்களுக்கு சொல்லி தருகின்றார்.

    மேலும் அவருடன் 6 பெண்கள் தொடர்ச்சியாக பயிற்சி பெற்று தயாரிப்பு பணியில் உதவி செய்து வருகின்றனர்.

    இவர் ஓவியங்களை புதுக்கோட்டையை சேர்ந்த ஓவியர் ராஜா பாலசுப்பிரமணியன் போன்றவர்களிடம் பயின்றுள்ளார்.

    ஓவியத்தின் மீது ஆசையால் தனது வாழ்க்கை துணையாக ஓவிய ஆசிரியர் பேபி தமிழரசியை திருமணம் செய்துள்ளார். அவரும் இவருடைய கலை திறமைக்கு உதவியாக உள்ளார். இவரின் தஞ்சை பெயிண்டிங் ஓவியம் திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ளது, புதுக்கோட்டை மக்களுக்கு மதிப்பை கூட்டி தரும் என்பதில் ஐயமில்லை.

    தற்போது உள்ள நவீன உலகில் ஓவிய கலை நலிவடைந்து வரும் வேளையில் காத்தான் போன்ற ஓவியர்கள் தொடர்ந்து ஓவிய கலையை வளர்த்து வருகின்றனர். இதுபோன்றவர்களுக்கு அரசு தன்னால் ஆன உதவி சிறுசிறு உதவிகளை செய்தால் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்க்கின்றனர் ஓவிய கலைஞர்கள்.

    குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு 5 படங்களை தயாரிக்கிறார் காத்தான்.

    தான் வருமானத்திற்காக இக்கலையை செய்ய வில்லை. ஓவிய கலையையில் முன்னணி நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசையில்தான் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தஞ்சை பெயிண்டிங் சி.காத்தான் ஆர்வத்துடன் கூறுகிறார். புதுக்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் நபர்களில் சி.காத்தானும் ஒருவர் என்றால் மிகையல்ல.

    • தஞ்சாவூர் ஓவியம் குறித்த செய்முறை பயிற்சி முகாம் நடந்தது.
    • 50 கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

    தஞ்சாவூர்:

    உலக சுற்றுலா தின விழாவின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் இன்று புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் ஓவியம் குறித்த செய்முறை பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இப்பயிற்சியினை தேசிய விருது பெற்ற தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் சம்பாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அவரது குழுவினர் 50 கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இதில் மரப்பலகை, பருத்தித் துணி, புளியங்கொட்டை பசை கொண்டு பலகை தயாரிக்கும் பணி குறித்தும், தேவையான வரைபடத்தை உருவாக்குதல் எப்படி என்பது குறித்தும், தொடர்ந்து வண்ண கற்கள் பதித்து மாவு வேலைப்பாடு செய்வது குறித்தும், தங்க இதழ் பதித்தல் குறித்தும், நிறைவாக வண்ணம் தீட்டி ஓவியத்தை நிறைவு செய்தல் குறித்தும் படிப்படியாக செய்து காண்பித்தனர்.

    இதில் பங்கேற்றவர்கள் இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் தொடர்ந்து இது போன்ற பயிற்சி முகாம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக இப்பயிற்சியினை இந்திய சுற்றுலா தென் மண்டல உதவி இயக்குனர் பத்மாவதி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சுற்றுலா அலுவலர் நெல்சன், சுற்றுலா ஆலோசகர் ராஜசேகரன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், கணக்கு அலுவலர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அரசு தொடக்கப்பள்ளியில் சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேசவிலாஸ் அரசு தொடக்கப்பள்ளியில் சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் வசந்தா தலைமை தாங்கினார்.

    பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, மாணவ- மாணவிகளுக்கு சர்வதேச கலாச்சார ஒற்றுமை குறித்து எடுத்து கூறப்பட்டது.

    இவைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம் மாணவர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர். மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • ஜி20 உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
    • மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்டுள்ள நடராஜர் சிலை கும்பகோணத்தில் உள்ள ஸ்தபதிகளால் செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    ஜி20 மாநாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த தஞ்சாவூர் ஓவியம் வரையும் கலைஞர் ஒருவர் கலந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டுக்கான தனி அடையாளத்தை பெற்றுத்தந்துள்ளது. இதனை வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சை மண்ணுக்கு கிடைத்த பெருமை என அவர் நெகிழ்ந்து வருகிறார்.

    அதன் பற்றிய விவரம் வருமாறு :-

    ஜி20 உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    மாநாட்டு அரங்கில் கண்காட்சி மற்றும் கலாசார ங்களை பிரதிபலிக்க கூடிய வகையிலான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள பண்பாடு மற்றும் கலாசா ரங்களை போற்ற க்கூடிய விதமான பலவேறு அம்சங்கள் இடம் பெற்றிருப்பது பார்வை யாளர்களை கவர்ந்துள்ளது.

    ஏற்கனவே மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்டுள்ள நடராஜர் சிலை கும்பகோணத்தில் உள்ள ஸ்தபதிகளால் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் முத்தாய்ப்பாக நடராஜர் சிலை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    அந்த வகையில் கும்பகோணம் காமராஜர் நகரை சேர்ந்த ஓவியர் பன்னீர்செல்வம் (வயது 60 ) ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ளது தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கே பெருமையளிப்பதாக உள்ளது.

    தஞ்சாவூர் ஓவியம் வரைவதில் பன்னீர்செல்வம் திறமையானவர். இவர் சக்கரபாணி ஆர்ட்ஸ் என்ற பெயரில் தஞ்சாவூர் ஓவியம் செய்து வருகிறார். வறுமையில் இருக்க கூடிய ஆண்கள் மற்றும் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் வரைய கற்றுத்தந்து வாழ்வாதாரம் ஏற்படுத்தி தருவதுடன் கலை பரவுவதற்கு காரணமாகவும் இருந்து வருகிறார்.

    உலகின் பல நாடுகளுக்கு தஞ்சாவூர் ஓவியத்தின் பெருமையை பறைசாற்றி வரும் பன்னீர்செல்வம், கைவினை கலைஞர்களுக்கான உயரிய விருதான சில்ப் குரு விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் தென் மாநிலங்களில் தமிழகத்தி லிருந்து ஜி20 மாநாட்டுக்காக அழைக்கப் பட்டிருக்கும் ஒரே கைவினை கலைஞர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார் பன்னீர் செல்வம். இதில் நெகிழ்ந்திருக்கும் அவர் இது தஞ்சை மண்ணுக்கு கிடைத்த பெருமை என மகிழ்ச்சியுடன் பேசி வருகிறார்.

    இது குறித்து பன்னீர்செ ல்வம் கூறும்போது ;-

    ``உலகத் தலைவர்கள் பங்கேற்க கூடிய ஜி 20 உச்சி மாநாட்டில் கலைகளுக்கு பெயர் பெற்ற தஞ்சாவூர் மண்ணில் இருந்து, தென்மா நிலங்களில் தமிழகத்திலிருந்து கலந்து கொண்டுள்ள ஒரே கைவினை கலைஞன் நான் என்பது எனக்கு பெருமிதத்தை தருகிறது. இதனை தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.

    இந்நிலையில் உச்சி மாநாட்டிற்காக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை சேர்ந்த சிறந்து விளங்க கூடிய ஏழு கைவினை கலைஞர்கள் அழைக்கப்பட்டனர்.

    தென்இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் இருந்து கைவினை கலைஞரான என்னை அழைத்திருக்கிறார்கள். நானும் உதவிக்காக என மகன் மனோஜும் இதில் கலந்து கொண்டுள்ளோம்.

    எனக்கு ஒதுக்கபட்டுள்ள அரங்கில் நம் பாரம்பர்யமான தஞ்சாவூர் ஓவியத்தை காட்சிப் படுத்தியிருப்பதுடன் தஞ்சாவூர் ஓவியம் எப்படி உருவாகிறது என உலகில் இருந்து வந்திருக்க கூடிய தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு செய்து காட்டி வருகிறேன். இதை பார்த்தவர்கள் தமிழகத்தையும், தஞ்சாவூர் மண்ணின் பாரம்ப ர்யத்தையும் புகழ்ந்தனர்.

    தென் மாநிலங்களில் இருந்து நான் ஒருவன் மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ளது எனக்கு கிடைத்த பெருமை இல்லை. கலைகளுக்கு பெயர் போன வரலாற்று சிறப்பு கொண்ட தஞ்சாவூர் மண்ணுக்கும் தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெருமை. நம் அரசு பண்பாடு மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் மூலம் கலைகள் வளர்கிறது. நமக்கான அடையாளம் தனித்துடத்துடன் கிடைக்கி றது என்றார்.

    • பல்வேறு போக்குவரத்து காவல்துறை சம்பந்தமான ஓவியங்களை வரைந்தனர்.
    • சிறந்த ஓவியம் வரைந்திருந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    அரசு பள்ளிகளில் சாலை போக்குவரத்து போலீஸ் துறை உள்பட பல்வேறு துறைகள் சார்ந்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.

    அதன்படி தஞ்சை மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று சாலை போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் 60 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு போக்குவரத்து சிக்னல், ஒருவழி சாலை, வேகத்தடை, வாகனம் நிறுத்த அனுமதி இல்லை , போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதி என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து காவல்துறை சம்பந்தமான ஓவியங்களை வரைந்தனர்.

    இந்த ஓவிய போட்டியை தஞ்சை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பார்வையிட்டார்.

    பின்னர் சிறந்த ஓவியம் வரைந்திருந்த மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழங்கி பாராட்டினார்.

    மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சங்கர், போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் , ஓவிய ஆசிரியர் அறிவுச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியானது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • போட்டியன்று படம் வரைவதற்கு பேப்பர் மட்டும் வழங்கப்படும்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நகரங்களின் தூய்மை க்கான மக்கள் இயக்கம் மற்றும் பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் ஓவியப் போட்டி வரும் 12-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற உள்ளது.

    போட்டிகள் பட்டுக்கோட்டை பண்ணை வயல் சாலையில் உள்ள பான் செக்கர்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளியில் நடைபெற உள்ளது.

    ஓவியப் போட்டிகள் 5 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.

    இதில் எல்கேஜி முதல் யு.கே.ஜி வரை மரம் நடுதல் என்ற தலைப்பிலும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு என்ற தலைப்பிலும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நீர்நிலைகள் மேம்படுத்துதல் என்ற தலைப்பிலும், 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்தெடுத்தல் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்ற தலைப்பிலும் ஓவியப் போட்டிகள், நடைபெற உள்ளது.

    இந்த போட்டிகளுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. இந்த போட்டிகளை பொறுத்தவரை பென்சில், கிரேயான்ஸ், ஆயில் பேஸ்டல், வாட்டர் கலர், போஸ்டர் கலர், அக்ரிலிக் கலர் வண்ணங்களில் மட்டும் வரையலாம்.

    போட்டியன்று படம் வரையும் பேப்பர் மட்டும் வழங்கப்படும்.

    மற்ற அனைத்து உபகரணங்களும் போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும்.

    ஒவ்வொரு குரூப்பிற்கும் முதல் மூன்று பரிசுகளும், சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்படும்.

    கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

    நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

    முன்பதிவு செய்ய இன்று 9-ம் தேதி கடைசிநாள்.

    இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பட்டுக்கோட்டை மயில்பாளையம் எல்.ஐ.சி.ஆபீஸ் எதிரில் சிவம் ஓவிய வகுப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சினிமா போஸ்டர்கள் ஒட்டுவதை தவிர்க்க ஓவியங்கள் வரையப்படுகிறது
    • விழிப்புணர்வு ஓவியங்களை ஓவியர்கள் தீவிரமாக வரைந்து வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் உள்ள பூங்காக்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், மாநகராட்சி கட்டிடங்களின் சுற்றுச்சுவர்களில் அரசியல் மற்றும் சினிமா பதாகைகளை ஒட்டுவதை தவிர்க்கவும், பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு வண்ண வண்ண ஓவியங்கள் தீட்டும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. இயற்கை காட்சிகள், மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பெண் கல்வி, புகையிலை ஒழிப்பு, நெகிழி ஒழிப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தும் பணியில் ஓவியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • புத்தக கண்காட்சியை தினமும் ஏராளமானவர்கள் பார்வையிட்டு செல்கின்றனர்
    • வருகிற 2-ந்தேதி பாட்டிலில் ஓவியம் வரைதல்,பல்வேறு கைவினை பொருட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    நெல்லை:

    பாளை வ.உ.சி. மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    பயிற்சி பட்டறை

    தினமும் ஏராளமானவர்கள் புத்தக கண்காட்சியை பார்வை யிட்டு செல்கின்றனர். கடந்த 3 நாட்களாக மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்தும் கொடுத்து நிகழச்சிகள் நடத்தப்பட்டது. அவர்களுக்கு சிறப்பு அரங்குகளும் அமைக்கப் பட்டிருந்தது.

    4-ம் நாளான இன்று பல்வேறு துறைகள் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகளுக்கு மண்பானையில் ஓவியம் வரையும் பயிற்சி வழங்கப்பட்டது.

    கண்ணாடியில் ஓவியம்

    இதில் ஏராளமான பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். வருகிற 2-ந்தேதி பாட்டிலில் ஓவியம் வரைதல், அதனை தொடர்ந்து கண்ணாடியில் ஓவியம் வரைதல், சணல் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கைவினை பொருட்கள் பயிற்சி தினமும் அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே தொடர் வாசிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் இன்று கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்தனர்.

    • போதை பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் பிரமிக்கும் வகையில் இருந்தது.
    • இந்த ஓவியங்களை ஒரு வார காலத்திற்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க போலீசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவிய போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அனுப்பி இருந்தனர்.

    அந்த ஓவியங்கள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் டதி பள்ளியில் உள்ள வகுப்பறையில் மாணவ-மாணவிகள் வரைந்து அனுப்பிய ஓவியங்கள் பொது மக்கள், மற்றும் மாணவ மாணவிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இதனை நெல்லை சரக போலீஸ் டி.ஜ.ஜி. பிரவேஷ்குமார் திறந்து வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் மற்றும் போலீ சார் அந்த ஓவியங்களை பார்வையிட்டனர்.

    இன்று பள்ளி மாணவ, மாணவிகள் அந்த ஓவியங்களை நேரில் சென்று பார்வையிட்ட னர். நாகர்கோவில் நகரில் உள்ள பல்வேறு பள்ளி களில் இருந்து மாணவ-மாணவி கள் இந்த ஓவியத்தை பார்த்து சென்றனர்.

    போதை பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் பிரமிக்கும் வகையில் இருந்தது. இந்த ஓவியங்களை ஒரு வார காலத்திற்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க போலீசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    • ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • மாணவர்கள் ஒன்றிணைந்து 75 நிமிடத்தில் 75 அடி நீளத்தில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.

    உடுமலை :

    உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ஓவியம் வரையும் நிகழ்ச்சி எஸ்.கே.பி., பள்ளியில் நடத்தப்பட்டது.தேஜஸ் ரோட்டரி சங்க பட்டயத்தலைவர் சக்கரபாணி தலைமை வகித்தார். முன்னதாக ஆசிரியர் சதீஷ்குமார், வரவேற்றார். மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

    ஓசோன் பாதுகாப்பு என்ற தலைப்பில் மாணவர்கள் ஒன்றிணைந்து 75 நிமிடத்தில் 75 அடி நீளத்தில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய அறிவியல் அலுவலர் லெனின்தமிழ்க்கோவன், விவேகானந்தா வித்யாலயம் பள்ளி தாளாளர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.பின், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் செய்திருந்தார். அனைத்து சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.முடிவில் என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.

    ×