search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருட்களுக்கு எதிரான ஓவிய கண்காட்சியை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்
    X

    போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியங்களை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

    போதை பொருட்களுக்கு எதிரான ஓவிய கண்காட்சியை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்

    • போதை பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் பிரமிக்கும் வகையில் இருந்தது.
    • இந்த ஓவியங்களை ஒரு வார காலத்திற்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க போலீசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவிய போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அனுப்பி இருந்தனர்.

    அந்த ஓவியங்கள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் டதி பள்ளியில் உள்ள வகுப்பறையில் மாணவ-மாணவிகள் வரைந்து அனுப்பிய ஓவியங்கள் பொது மக்கள், மற்றும் மாணவ மாணவிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இதனை நெல்லை சரக போலீஸ் டி.ஜ.ஜி. பிரவேஷ்குமார் திறந்து வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் மற்றும் போலீ சார் அந்த ஓவியங்களை பார்வையிட்டனர்.

    இன்று பள்ளி மாணவ, மாணவிகள் அந்த ஓவியங்களை நேரில் சென்று பார்வையிட்ட னர். நாகர்கோவில் நகரில் உள்ள பல்வேறு பள்ளி களில் இருந்து மாணவ-மாணவி கள் இந்த ஓவியத்தை பார்த்து சென்றனர்.

    போதை பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் பிரமிக்கும் வகையில் இருந்தது. இந்த ஓவியங்களை ஒரு வார காலத்திற்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க போலீசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    Next Story
    ×