search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக நீதி"

    • அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கிய போது அவரை நிற்க வைத்து பிரதமர் மோடி அமர்ந்தபடி உள்ளார்.
    • பழங்குடியின பெண் என்பதால் குடியரசு தலைவருக்கு பா.ஜ.க. அரசு தொடர்ந்து அவமதிப்பு செய்து வருகிறது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து கொடைக்கானலில் நடிகை ரோகினி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக மக்கள் நலனுக்காக தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம் ஆகியவை காலம் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். இது போன்ற திட்டங்கள் தமிழகத்தை கடந்தும் பல்வேறு மாநிலங்களில் போற்றப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் பெண்களுக்கான கல்வி 27 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு சமூக நீதி திட்டங்களால் பெண் கல்வி உயர்ந்து வருகிறது. பழங்குடியின பெண் என்பதால் குடியரசு தலைவருக்கு பா.ஜ.க. அரசு தொடர்ந்து அவமதிப்பு செய்து வருகிறது. நாடாளுமன்ற திறப்பு விழாவில் அவருக்கு அழைப்பு இல்லை. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கிய போது அவரை நிற்க வைத்து பிரதமர் மோடி அமர்ந்தபடி உள்ளார். இதுதான் அவர்கள் பெண்களுக்கு அளிக்கும் மரியாதை.

    கோவிலின் கருவறைக்குள் கூட பெண்கள் வரக்கூடாது. கோவிலை நாங்கள்தான் திறப்போம் என்று பா.ஜ.க. கூறுவது எந்த விதத்தில் நியாயம். மல்யுத்த வீரர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் போது நம் நாட்டுக்காக பதக்கம் பெற்றுத் தந்த வீரர், வீராங்கனைகள் நடுரோட்டில் போராட்டம் நடத்தினர்.

    ஆனால் அவர்களது கோரிக்கைக்கு பிரதமர் மோடி செவி சாய்க்கவில்லை. பா.ஜ.க. அரசின் அடக்குமுறைகளை வெளிக் கொண்டு வருபவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். பிரபல மருந்து நிறுவனங்கள் மீது புகார் எழுந்த நிலையில் தரச்சான்று வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது பா.ஜ.க. அரசுக்கு ரூ.பல கோடி மதிப்பில் அந்த நிறுவனம் தேர்தல் பத்திரம் வாங்கியதால் அந்த நிறுவனத்துக்கு உடனடியாக தரச்சான்று வழங்கப்பட்டது. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை தீவிரவாதிகள் போல் நடத்தியது மத்திய பா.ஜ.க. அரசு. எனவே இது போன்ற அரசை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை தமிழகம் முழுவதும் வெற்றிபெற வைப்பதன் மூலம் நாம் மத்திய அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும்.
    • வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சமூகநீதி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி ஏற்றுக்கொள்வாரா? அதற்கான உத்தரவாதத்தை நரேந்திர மோடியிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறதா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வினா எழுப்பியிருக்கிறார்.

    2004-ம் ஆண்டில் சமூகநீதிக் கொள்கையில் பாட்டாளி மக்கள் கட்சி எந்த அளவு உறுதியுடன் இருந்ததோ, அதே உறுதியுடன் தான் இப்போதும் உள்ளது. பாராளுமன்றத்தில் அப்போதிருந்த அளவுக்கு வலிமையை இப்போதும் பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கொள்கை வலிமையையும், அதிகார வலிமையையும் பயன்படுத்தி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்ய பா.ம.க.வால் முடியும்.

    பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நீதிபதி ரோகிணி ஆணையத்தை அமைத்து, அதன் அறிக்கையை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி இக்கோரிக்கையையும் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.

    இது ஒருபுறம் இருக்க, சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக அளித்த உத்தரவாதத்தை இரு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றினோமா? என்பதை நேர்மையுடனும், மனசாட்சியுடனும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் வன்னியர்களுக்கு எப்போதோ இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், பிற சமூகங்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கேட்டு நிறைவேற்றும் மு.க. ஸ்டாலினுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ஆனால், மேடைகளில் மட்டும் சமூகநீதியில் அக்கறைக் கொண்டவர் போல நடிக்கிறார். மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி விட்டு, அதன்பிறகு சமூகநீதி பற்றி பேச வேண்டும்.

    ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்... சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர். அதை தி.மு.க. விரைவில் உணரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சமமான வாய்ப்புகளை உறுதி செய்ய இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது
    • இவ்வருட கருப்பொருள் "இடைவெளிகளை நிரப்புதல், கூட்டணிகளை உருவாக்குதல்" ஆகும்

    1995ல் ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் சமூக வளர்ச்சிக்கான உச்சி மாநாடு (Summit for Social Development) நடைபெற்றது.

    இந்த உச்சி மாநாட்டின் முடிவில் "கோபன்ஹேகன் பிரகடனம்" (Copenhagen Declaration) மற்றும் செயல் திட்டம் (Programme of Action) உருவானது. இது வறுமை, வேலையின்மை மற்றும் பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுத்தது.

    பிறகு 2007ல், "உலக சமூக நீதிக்கான தினம்" (World Day of Social Justice) முதன்முதலில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் அறிவிக்கப்பட்டது. 


    ஆண்டுதோறும் பிப்ரவரி 20 அன்று "உலக சமூக நீதிக்கான தினம்" அனுசரிக்கப்படுகிறது.

    இந்த நாள், சமூக நீதியை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும் அவர்களின் விருப்பம் போல் லட்சியங்களை அடைய வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    இந்த தினம், சமூக நீதிக்கான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அலசவும், எஞ்சியிருக்கும் சவால்களை அடையாளம் காணவும், சமூக அமைதியை நிலைநாட்ட தேவைப்படும் கூட்டு முயற்சிகள் குறித்து மறுபரிசீலனை செய்வதற்கும் சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைவருக்கும் ஒரு வாய்ப்பாகும்.


    2024 வருடத்திற்கான உலக சமூக நீதி தின கருப்பொருள் (theme) "இடைவெளிகளை நிரப்புதல், கூட்டணிகளை உருவாக்குதல்" (Bridging Gaps, Building Alliances) என்பதாகும்." உலகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.

    சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும், பாகுபாடுகளையும், சமத்துவமின்மையையும் எதிர்த்து போராடவும் இந்த நாளில் நாம் உறுதியேற்போம்.

    அனைவருக்கும் நியாயமான உலகத்தை உருவாக்க இது ஒரு வாய்ப்பாகும்.

    • நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
    • பட்ஜெட்டில் 7 முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

    நாளை(பிப் 20) தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.Tamil Nadu government announcement that big 7 Tamil dreams will be included in the budget

    நாளை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில், "சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், நீ அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

    • சமூக நீதியின் சரித்திரப் பாதை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
    • 11 ஆயிரத்து 500 மருத்துவ கல்லூரி இடங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்து வக் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற, தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்பு ரை நிகழ்ச்சியில், ஊடக வியலாளர் குணசேகரன் சமூக நீதியின் சரித்திரப் பாதை என்ற தலைப்பில் பேசினார்.

    பின்னர் அவர் கூறியதா வது:-

    உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக் கை இந்திய அளவில் 27 விழுக்காடாக இருக்கும் போது தமிழ்நாட்டில் அது 52 விழுக்காடாக இருக்கிறது என்றும், ஒட்டுமொத்த சமூக விழிப்புணர்வு அனை வருக்கும் கல்வி, அனைத்து சமூகத்தினருக்கான விழிப் புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் இந்த வெற்றி பெறப் பட்டது. அந்தக் காலத்தி லேயே தோள் சீலைப் போராட்டம் குறித்து கூறி அதற்கான வரலாற்று நிகழ்வுகளை மாணவர் களுக்கு எடுத்துரைத்தார்.பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மாவட்டத் திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நிலை உருவாவதற்கு அரசு பெரும் முயற்சி எடுத்து இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருவதாக கூறினார். ஏறத்தாழ 11 ஆயிரத்து 500 மருத்துவ கல்லூரி இடங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளன.பள்ளித் தேர்வுகளில் எப்போதுமே விருதுநகர் மாவட்டம், முதல் இடத்தில் இருக்கிறது என்றால் அதற்கு கல்விக்கு இங்கு கொடுக்கப் படுகின்ற முக்கியத்துவம் தான் காரணம். அதுபோல இன்று நமக்கு கிடைத்திருக்கக் கூடிய சமூக நீதி என்பது கடந்த ஒரு நூற்றாண்டாக பல்வேறு தலைவர்களால் கிடைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, தமிழ்நாட்டில் குக்கிராமங்களிலும் படிப்பு அறிவை வழங்கியதன் மூலம் கிராமத்தில் இருந்து இளைஞர்கள் படித்து பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். ஒரு சமூகம் முன்னேற வேண்டுமென்றால் கல்வி, சுகாதாரம், மனிதவள குறியீடு ஆகியவற்றில் முன்னோடியாக இருந்தால் மட்டும்தான் முன்னிலை அடைய முடியும்.

    தமிழகம் உயர்கல்வி பயில்வதில் இந்தியாவி லேயே முதன்மை இடத்தில் உள்ளது என்றால், சாதாரண மனிதருக்கும் தரமான கல்வி என்ற சமூக நீதியின் கொள்கையால் வந்தது தான் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணி, தனி துணை கலெக்டர் (சமூக பாது காப்புத்திட்டம்) அனிதா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பிரியதர் ஷினி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்ரா மசுப்பி ரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன், மாவட்ட நூலக அலுவலர் சுப்பிர மணியன், கல்லூரி முதல்வர் குணசேகரன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாண வியர்கள், அரசு அலுவலர் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதி காக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • புள்ளி விவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    கமுதி

    முக்குலத்தோர் புலிப்ப டை கட்சியின் நிறுவனரும், நடிகருமான கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2016 -ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து பலமுறை சட்ட பேரவையில் வலியுறுத்தி வந்துள்ளேன்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 10.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது என முக்குலத்தார் புலிப்படை கட்சி, முக்குலத்தோர் முன்னேற்ற சங்கம் உள்பட 13 மேற்பட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரனையில் 2021 நவம்பரில் உச்சநீதிமன்றம் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்தது. தமிழகத்தில் ஒரு ஜாதிக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போது இன்னொரு ஜாதியினர் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோருகின்றனர். ஆனால் அரசிடம் ஜாதி தொடர்பாக எந்த புள்ளி விபரமும் கிடையாது. எனவே நாங்கள் ஜாதிவாரியாக கணக் கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

    கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் அனைத்து ஜாதியின ருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால் தமிழ கத்தில் ஜாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தி புள்ளி விவரங்களை வெளிக் கொண்டு வந்தால் தான் அனைவருக்குமான சமூக நீதி காக்கப்படும்.

    எனவே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப் பிற்கான ஆணையம் அமைத்து புள்ளி விவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இடஒதுக்கீடு அனைவருக்கும் சம விகிதத்தில் தரப்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் பேச்சு
    • எண்ணற்ற சமூக நீதி திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை வளப்படுத்தி வருவதாக பெருமிதம்

    கனடாவில் நடைபெற்ற சமூக நீதிக்கான பன்னாட்டுப் பெரியார் மனிதநேய மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    எனது திராவிட மாடல் ஆட்சியின் மையக்கொள்கை என்பது மனிதநேயமும் சமூக நீதியும்தான். அனைத்து இடங்களிலும் சமூக நீதியை நிலைநாட்டி வருகிறோம். வகுப்புரிமை எனப்படும் இடஒதுக்கீடு அனைவருக்கும் சம விகிதத்தில் தரப்பட்டு வருகிறது.

    எண்ணற்ற சமூக நீதி திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை வளப்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சியை மேலும் உச்சத்திற்கு கொண்டு வரவே திராவிட மாடல் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கக்கூடிய இயக்கம்தான் திமுக. எங்களின் வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    பெரம்பலூர்

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்கும் வகையில் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' பெறுபவருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர்கள் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள், தங்களது விண்ணப்பம், தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கிய தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    • சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது
    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில்

    கரூர்:

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் "சமூக நீதி நாள் உறுதிமொழி" சமூக இடைவெளியை கடைபிடித்து எடுக்கப்பட்டது.

    பெரியார் பிறந்த நாளையொட்டி கடந்த வாரம் சனிக்கிழமை தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள கால அலுவலகத்தின் அருகில் உறுதிமொழி ஏற்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதுசமயம், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் மற்றும் சமூக நீதியை அடித்தளமாளகக் கொண்டு சமுதாயம் அமைக்கும் நமது பயனாம் தொடர உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

    நிகழ்ச்சியில், பொது மேலாளர் சுரேஷ் (மனிதவளம்), துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், முதுநிலைமேலாளர் சிவக்குமார் (மனிதவளம்) மற்றும் மேலாளர்- மனிதவளம் மணிகண்டன்

    (சட்டம்) ஆகியோர் தலைமையில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு சமூக நீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் சமூக நீதிக்கான பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநார ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்த விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2022-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. சமூக நீதிக்காக பாடுபட்டு, பொது மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள், ஆவணங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிரம், முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2022 ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×