சமூக நீதிக்கான பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் சமூக நீதிக்கான பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.
சமூக நீதிக்கான பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநார ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்த விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2022-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. சமூக நீதிக்காக பாடுபட்டு, பொது மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள், ஆவணங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிரம், முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2022 ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com