search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "census"

    • மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுக்கப்பட்டது.
    • 2014-ம் ஆண்டில் கல்லூரியில் பட்டாம்பூச்சி பூங்கா நிறுவப்பட்டு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அமெரிக்கன் கல்லூரி நெரிசலான நகர்புறத்தில் காணப்பட்டாலும் பலவகை பட்டாம்பூச்சிகளுக்கு புகலிடமாக உள்ளது. இங்கு அரிய வகை செடி, கொடிகள் காணப்படுகின்றன. இங்கு வண்ணத்துபூச்சிகளுக்கு தேவையான தட்பவெப்ப சூழல் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விலங்கியல் இளங்கலைத்துறைத்தலைவர் ஜாய் ஷர்மிளா தலைமையில் கல்லூரி வளாகத்தில் வண்ணத்துப்பூச்சிகளின் கணக்கெடுப்பு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியர் டேலியா ரூபா செய்திருந்தார். ஆராய்ச்சி மாணவி அர்ச்சனா சுற்றுசூழலில் வண்ணத்துப்பூச்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் செயல்பாடுகள் போன்றவற்றை விளக்கி பேசினார்.

    அமெரிக்கன் கல்லூரியின் வளாகத்தில் 26 வகையான பட்டாம்பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு அழகிகள், வெள்ளையன்கள், வரியன்கள், நீலன்கள் போன்ற பல வகையான பட்டாம்பூச்சிகள் காணப்பட்டன. இதில் வரியன் வகை பட்டாம்பூச்சிகள் அதிக அளவில் காணப்பட்டன. கல்லூரியில் மஞ்சள் புலி, வரி புலி, நீலப்புலி, ராஜவண்ணத்தி, ரோஜா அழகி, கருவேப்பிலை அழகி, அரளி விரும்பி, எலுமிச்சை நீலன், கொள்ளை வெள்ளையன், சின்னபுல் நீலன், புங்க நீலன், எலுமிச்சை வசீகரன் போன்ற பட்டாம்பூச்சி வகைகள் பதிவு செய்ய பட்டன. இதில் மிகவும் மனதை கவரும் வண்ணத்துப்பூச்சி நீல சங்கழகன் ஆகும். இந்தியாவின் 2-ம் பெரிய வகை பட்டாம்பூச்சி கருநீலவண்ணன் ஆகும். அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், அவர்களின் முயற்சியால் 2014-ம் ஆண்டில் கல்லூரியில் பட்டாம்பூச்சி பூங்கா நிறுவப்பட்டு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    • சாலையோர வியாபாரிகள் 5 பயனாளிகளுக்கு கடனுதவி பெறுவதற்கு அனுமதி வழங்கும் கடிதத்தினை வழங்கினார்.
    • இத்திட்டத்தின் மூலம் பெறும் கடன் தொ கையினை முறையாக தவணை தவறாமல் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    பட்டுக்கோட்டை நகராட்சியில், சாலையோர வியாபாரிகளுக்கு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் புதிய சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி 2022-23 திட்டத்தின்கீழ் வங்கிகள் மூலம் பிரதி புதன்கிழமை தோறும் சாலையோர வியாபாரிகள் தினத்தில் கடனுதவி வழங்கும் முகாம் நாடிமுத்து நகர் ஆர்ச் சாலை பகுதியில் நடைபெற்றது.

    மேற்படி சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி துவக்க விழா மற்றும் கடனுதவி வழங்கும் முகாமிற்கு, நகராட்சி தலைவர். சண்முகப்பிரியா செந்தில்குமார் தலைமை ஏற்று இத்திட்டம் குறித்து விளக்கினார். சுரேஷ், நகராட்சி துணைத் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலையில் சாலையோர வியாபாரிகள் 5 பயனாளிகளுக்கு கடனுதவி பெறுவதற்கு அனுமதி வழங்கும் கடிதத்தினை வழங்கினார்.

    சாலையோர வியாபாரி களின் கணக்கெடுப்பு பணி துவக்க விழாவில் இத்திட்டத்தின் நன்மைகள் குறித்து சாலையோர வியாபாரிகளுக்கு எடுத்து கூறினர். மேலும் ஒவ்வொரு கடைக்கும் நேரில் சென்று புதிய கணக்கெடுப்பு பணியினை துவக்கி வைத்தனர். சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பின் போது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களை வழங்கிட கேட்டுக்கொள்ளப்பட்டது.

    மேலும் இத்திட்டத்தின் மூலம் பெறும் கடன் தொ கையினை முறையாக தவணை தவறாமல் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. விழாவில் சுகாதார அலுவலர் நெடுமாறன், நகரமைப்பு ஆய்வாளர் கருப்பையன், வருவாய் ஆய்வாளர்கள் முருகேசன், குப்புசாமி, சண்முகம், நகர்மன்ற உறுப்பினர்கள் பொண்மணி ராஜேந்திரன் மகா லெட்சுமி உலகநாதன், சுரேஷ், கலையசி, சமுதாய அமைப்பாளர்கள் பிரவீனா, சரண்யா, ராஜப்பிரியா, சமூக ஆர்வலர் மணிமுத்து. சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

    முடிவில் நகரமைப்பு ஆய்வாளர் கருப்பையன் நன்றி கூறினார்.

    • வேளாண்மை கணக்கெடுப்பு பணி 1970-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • நீர்ப்பாசன வசதிகள் மற்றும் இடு பொருட்களின் பயன்பாடு போன்றவற்றின் விவரங்கள் சேரிக்கப்ப டவுள்ளது.

    கள்ளக்குறிச்சி, செப்.3-

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட புள்ளியியல் துறையின் சார்பில், 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவில் வேளாண்மை மற்றும் விவசா யிகள் நல அமை ச்சகத்தின் மூலம் வேளா ண்மை கணக்கெடுப்பு பணி 1970-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண் கணக்கெடுப்புகள் இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெற்று வந்தது. தற்போது, 5 ஆண்டு களுக்கு ஒருமுறையாக 2021-2022-ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு, 11-வது வேளாண் கணக்கெடுப்புப் பணி நடைபெறவுள்ளது. இந்த கணக்கெடுப்பின் நோக்கம் புள்ளி விவரங்களின் அடிப்படையில் புதிய வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் வகுப்பதற்கும் மதிப்பீடு செய்வதற் கும் பயன்படுகிறது. கணக்கெடுப்பின் மூலம் கைப்பற்றின் வகைகள், கைப்பற்றின் எண்ணிக்கைகள் நிலப் பயன்பாடு, பயிரிடும் வகைகள், நீர்ப்பாசன வசதிகள் மற்றும் இடு பொருட்களின் பயன்பாடு போன்றவற்றின் விவரங்கள் சேரிக்கப்படவுள்ளது.

    அனைத்து வருவாய் கிராமங்களிலும், நில ஆவணப்பதிவேடுகளில் உள்ள விவரங்களின் அடிப்படையில், விவரங்களை மறு அட்டவணைப்படுத்திடும் பொருட்டு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அனைத்து சர்வே, சப் டிவிஷன் எண்களையும் ஆராய்ந்து கைப்பற்றுகளின் எண்ணிக்கை மற்றும் பரப்பு விவரங்களை வகுப்பு வாரியாக சேகரிக்கப்படவுள்ளது. முதல்முறையாக கணினிமயமாக்கப்பட்ட நில ஆவண பதிவேடுகளை அடிப்படையாக கொண்டு, வேளாண் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிக்காக பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்ட மி ன்பொருள் செயலியை பயன்ப டுத்தி, கைப்பேசி மற்றும் கையடக்கக் கணினி, மடிக்கணினி வழியே கணக்கெடுப்புப்பணி நடை பெறவுள்ளது. மிக முக்கியமான பணிகளில் ஒன்றான வேளாண் கணக்கெடுப்புப் பணியினை தொடர்புடைய அலுவலர்கள் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் லதா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகலட்சுமி, தாசில்தா ர்கள், வட்டார புள்ளியில் ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மத்திய, மாநில அரசுகள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
    • தலைமை நிலைய பேச்சாளர் கனல் கண்ணன் சிறப்புரையாற்றினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மத்திய மாநில அரசுகள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கா.அண்ணாதுரை வரவேற்றார்.

    கலைச்செல்வன், பாபு, தமிழரசன்,சுயம்பு கஜேந்திரன், அய்யா மணிக ண்டன், சத்திய மூர்த்தி, அன்பு ஆரோக்கியராஜ், ரமேஷ், மணிமாறன், மாதவன், சைவராஜ் கவிதாசன், ராஜா, சாம்யோஷ்வா, பழனிவேல், சிவக்குமார், முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை நிலைய பேச்சாளர் கனல் கண்ணன் சிறப்புரையாற்றினார். ஆலக்குடி பன்னீர் செல்வம், ஜெயக்குமார் ஆகியோர் பேசினர்.

    இதில்மத்திய மாவட்ட பொறு ப்பாளர்கள்அரவிந்த், சரவணன், நார்முகமது, நியான், உசேன்பாட்சா, நெல்சன், வெங்கடேஷ், கலியமூர்த்தி, குணசேகரன், கல்யானபுரம் கார்த்தி, பிரபு, வெற்றிச்செல்வன், கணேசன், புஷ்பநாத மணிகண்டன்,பாலா, மணிமாறன் புண்ணிய மூர்த்தி, மணி, ராஜா, அப்பு, முருகேசன், சுதாகர், பாக்கியராஜ், கலையரசன், சுந்தரமூர்த்தி, சந்திரசேகர், பாலமுருகன், ஆனந்த், மதியழகன், முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஜெய் பிராகாஷ் நன்றி கூறினார்.

    • பாலம் அமைய உள்ள இடம், நிதி ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்படும்.
    • வடக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

    திருப்பூர்:

    திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க இணைப்பு சாலைகளில் இருந்து வரும் வாகனங்களால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க பி.என்., ரோட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக பி.என்., ரோட்டில் பயணிக்க பல்வேறு ரக வாகனங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

    மேட்டுப்பாளையம் புதிய பஸ் நிலையம் பகுதியில் கணக்கெடுப்பு, ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா கூறியதாவது:-

    கணக்கெடுப்பு பணி முடிந்து, விரிவான அறிக்கை மற்றும் கருத்துரு தயாரித்து நிதி ஒதுக்கீடு கேட்டு அரசுக்கு விபரங்களை சமர்பிக்கப்படும். அதன்பின், பாலம் அமைய உள்ள இடம், நிதி ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்படும்.

    பி.என்., ரோடு மேட்டுப்பாளையம் சிக்னலில் இருந்து பாண்டியன் நகர் வரையுள்ள 5 கி.மீ., தூரத்துக்கு உயர்மட்ட பாலம் அமைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. பாலம் அமையும் போது வடக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×