search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் முகாம்
    X

    சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கல்.

    சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் முகாம்

    • சாலையோர வியாபாரிகள் 5 பயனாளிகளுக்கு கடனுதவி பெறுவதற்கு அனுமதி வழங்கும் கடிதத்தினை வழங்கினார்.
    • இத்திட்டத்தின் மூலம் பெறும் கடன் தொ கையினை முறையாக தவணை தவறாமல் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    பட்டுக்கோட்டை நகராட்சியில், சாலையோர வியாபாரிகளுக்கு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் புதிய சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி 2022-23 திட்டத்தின்கீழ் வங்கிகள் மூலம் பிரதி புதன்கிழமை தோறும் சாலையோர வியாபாரிகள் தினத்தில் கடனுதவி வழங்கும் முகாம் நாடிமுத்து நகர் ஆர்ச் சாலை பகுதியில் நடைபெற்றது.

    மேற்படி சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி துவக்க விழா மற்றும் கடனுதவி வழங்கும் முகாமிற்கு, நகராட்சி தலைவர். சண்முகப்பிரியா செந்தில்குமார் தலைமை ஏற்று இத்திட்டம் குறித்து விளக்கினார். சுரேஷ், நகராட்சி துணைத் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலையில் சாலையோர வியாபாரிகள் 5 பயனாளிகளுக்கு கடனுதவி பெறுவதற்கு அனுமதி வழங்கும் கடிதத்தினை வழங்கினார்.

    சாலையோர வியாபாரி களின் கணக்கெடுப்பு பணி துவக்க விழாவில் இத்திட்டத்தின் நன்மைகள் குறித்து சாலையோர வியாபாரிகளுக்கு எடுத்து கூறினர். மேலும் ஒவ்வொரு கடைக்கும் நேரில் சென்று புதிய கணக்கெடுப்பு பணியினை துவக்கி வைத்தனர். சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பின் போது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களை வழங்கிட கேட்டுக்கொள்ளப்பட்டது.

    மேலும் இத்திட்டத்தின் மூலம் பெறும் கடன் தொ கையினை முறையாக தவணை தவறாமல் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. விழாவில் சுகாதார அலுவலர் நெடுமாறன், நகரமைப்பு ஆய்வாளர் கருப்பையன், வருவாய் ஆய்வாளர்கள் முருகேசன், குப்புசாமி, சண்முகம், நகர்மன்ற உறுப்பினர்கள் பொண்மணி ராஜேந்திரன் மகா லெட்சுமி உலகநாதன், சுரேஷ், கலையசி, சமுதாய அமைப்பாளர்கள் பிரவீனா, சரண்யா, ராஜப்பிரியா, சமூக ஆர்வலர் மணிமுத்து. சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

    முடிவில் நகரமைப்பு ஆய்வாளர் கருப்பையன் நன்றி கூறினார்.

    Next Story
    ×