search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபரிமலை விவகாரம்"

    கேரள சட்டசபையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார். #KeralaAssemblySession #SabarimalaTempleIssue
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதனால் சபரிமலை உள்பட கேரளா முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இவற்றை கட்டுப்படுத்த சபரிமலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பக்தர்களிடமும் கடும் கெடுபிடி காட்டப்பட்டது. இதற்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

    இந்த நிலையில் கேரள சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் சபரிமலை தொடர்பாக பி.சி.ஜார்ஜ் எம்.எல்.ஏ. ஒரு நபர் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்தார்.

    இன்று 2-வது நாள் கூட்டம் தொடங்கியது. நிகழ்ச்சிகள் ஆரம்பமானதும் சபைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபரிமலை விவகாரம் தொடர்பான பேனர்களையும், கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியபடி அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் சபையில் கடும் அமளி நிலவியது.



    காங்கிரஸ் எம்.எல்.ஏ,க்களை சபாநாயகர் அமைதிபடுத்த முயன்றார். அப்போது கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் சில கருத்துக்களை கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோ‌ஷமிட்டனர்.

    அவர்களை இருக்கையில் அமரும்படி சபாநாயகர் கூறினார். ஆனால் அதை கேட்க மறுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோ‌ஷமிட்டபடி இருந்தனர்.

    மேலும் கேள்வி நேரம் தொடங்கியதும் மீண்டும் காங்கிரசார் கோ‌ஷமிட்டனர். இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார்.  #KeralaAssemblySession #SabarimalaTempleIssue

    சபரிமலையில் கேரள அரசு 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைக் கண்டித்து கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். #KeralaAssemblySession #SabarimalaTempleIssue
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு கேரளாவில் தொடர் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. சபரிமலை நடை திறந்தபோது இந்து அமைப்புகள் தீவிரபோராட்டம் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது. அதன்பின்னர் சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், கேரள சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் சபரிமலை விவகாரம் எதிரொலித்தது.

    இந்நிலையில்  சட்டசபை இன்று காலை வழக்கம்போல் கூடியது. அப்போது சபரிமலை விவகாரத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பினர். எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பேனர்களையும் ஏந்தியிருந்தனர்.



    வெள்ள பாதிப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் பேசினார். அவரை பேச விடாமல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முழக்கமிட்டு இடையூறு செய்தனர். அவர்களை இருக்கைகளில் அமரும்படி சபாநாயகர் கூறினார். ஆனாலும் உறுப்பினர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். ஒரு கட்டத்தில் அவையின் மையப்பகுதிக்கே வந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

    பாஜக எம்எல்ஏ ராஜகோபால், ஐயப்ப பக்தர்கள் அணியும் கருப்பு உடை அணிந்து சபைக்கு வந்திருந்தார். இதேபோல் காங்கிரஸ் எம்எல்ஏ பிசி ஜார்ஜும், கருப்பு உடை அணிந்து வந்திருந்தார். #KeralaAssemblySession #KeralaCongressMLAsProtest  #SabarimalaTempleIssue
    சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கண்டித்து நாளை புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்த பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது. #SabarimalaIssue #BJP #Bandh
    புதுச்சேரி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளா மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசு அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்கு கேரளாவில் பா.ஜனதா, காங்கிரஸ், இந்து அமைப்புகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சபரிமலையை சுற்றி உள்ள பகுதிகள் போராட்டக்களமாக மாறி உள்ளது.



    இந்த நிலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்ல கேரளா போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். இதனால் ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்வது வழக்கத்தை விட குறைந்துள்ளது.

    சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும், பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை கண்டித்தும் 26-ந்தேதி புதுவையில் முழு அடைப்பு போராட்டம் (பந்த்) நடத்தப்படும் என பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த போராட்டத்திற்கு இந்து முன்னணி, விசுவ இந்து பரி‌ஷத், ஐயப்ப சேவா சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ள பந்த் போராட்டம் உள்நோக்கம் கொண்டது, தேவையற்றது என்றும், புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பந்த் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். பந்த் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியும் புதுவையில் பந்த் போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை. கேரளா மாநிலத்தில்தான் இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்.

    இந்த பந்த் போராட்டத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். மேலும் சட்ட ஒழுங்கில் பாதிப்பு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதனிடையே பா.ஜனதா கட்சியினர் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நேற்று மாலை பெரியார் சிலை அருகில் இருந்து பந்த் போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஊர்வலம் சென்றனர்.

    அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் கொடுத்தபடி நகர பகுதி முழுவதும் சுற்றி வலம் வந்தனர்.

    முழு அடைப்பு குறித்து சாமிநாதன் கூறியதாவது:-

    இந்த போராட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும். போராட்டத்திற்காக வணிகர் சங்கங்கள், மார்க்கெட் வியாபாரிகள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர், மீனவர்கள், தொழிலாளர்கள், தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் என அனைத்து தரப்பினரையும் நேரில் சந்தித்தும், கடிதம் மூலமாகவும் ஆதரவு கேட்டுள்ளோம். பெரும்பாலானவர்கள் ஆதரவு தருவதாக உறுதியளித்தனர்.

    இதனால் பஸ்கள், டெம்போ, ஆட்டோக்கள் இயங்காது. தனியார் பள்ளி கல்லூரிகள் இயங்காது. இதற்கு முன் புதுவையில் ஆளும் கட்சி தரப்பிலும், பிற கட்சிகள் சார்பிலும் தேவையற்ற வி‌ஷயங்களுக்குக்கூட பந்த் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    இது, பெரும்பான்மை மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் போராட்டம். இதனால் பந்த் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaIssue #BJP #Bandh

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் விளம்பரத்துக்காக பெண்கள் செல்வதாக குற்றம்சாட்டி அவர்களை அனுமதிக்கக் கூடாது என இந்து மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #SabarimalaTemple
    சென்னை:

    கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.  இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்புக்கு பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சபரிமலைக்குள் செல்ல முயலும் பெண்களை வழிமறைத்து போராட்டக்காரகள் மற்றும் பக்தர்கள் சிலர் கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுக்கின்றனர்.



    இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பெண்கள் சபரிமலைக்கு செல்வதை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கண்களில் கருப்புத்துணிகளை கட்டியபடி, ‘10 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்ல வேண்டாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெண்கள் விளம்பரத்துக்காக சபரிமலைக்கு செல்வதாகவும், அவர்கள் பக்தர்கள் இல்லை எனவும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். மேலும், அவர்கள் தூய்மையாக இல்லை எனவும், அவர்கள் கோவிலுக்குள் சென்றால் ஐயப்பனின் புனிதம் மற்றும் பிரம்மச்சரியம் வீணாகிவிடும் எனவும் இந்து மக்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். #SabarimalaTemple
    சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #DevaswomBoard #SabarimalaVerdict #ReviewPetition
    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர்.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராடிய நிலையில், கேரள அரசுக்கும், தேவசம் போர்டுக்கும் சீராய்வு மனுத்தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில், இன்று தேவசம் போர்டு தலைவர் பத்ம குமார் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சபரிமலை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பத்மகுமார், சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், தேவசம் போர்டின் முடிவுக்கு கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் எனவும், நீதிமன்றத்தை அணுக முடிவு எடுத்துள்ளதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதன் மூலம், போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு, கேரளாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை சற்று குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #Sabarimala #DevaswomBoard #SabarimalaVerdict #ReviewPetition
    சபரிமலைக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்தான விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த வித முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. #Sabarimala #SabarimalaVerdict #SabarimalaProtests #ReviewPetition #KeralaGovt #DevaswomBoard
    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பலரும் ஆதரவும், இந்து அமைப்புகள் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    சமீபத்தில் சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானாது. கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து போராட்டக்காரர்கள் காலில் விழுந்து முறையிட்டு திருப்பி அனுப்பினர். மேலும், பெண் காவலர்கள் அங்கு பணியாற்றவும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



    இந்த போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், சபரிமலை விவகாரத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால் போராட்டத்தை கைவிட தயரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எந்த அரசியல் கட்சிகளுக்கும் பின்னால் தேவசம் போர்டு செல்லவில்லை என்றும் சபரிமலை விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக இருப்பதாகவும், சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து நாளை (வெள்ளிக்கிழமை) முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த வித முடிவும் எடுக்கலாம் என தேவசம் போர்டுக்கு கேரள அரசு முழு அனுமதி அளித்துள்ளது. #Sabarimala #SabarimalaVerdict #SabarimalaProtests #ReviewPetition #KeralaGovt #DevaswomBoard
    சபரிமலைக்கு விதிமுறைகளை மீறி வரும் பெண்களை வெட்ட வேண்டும் என மிரட்டும் தொனியில் பேசிய நடிகர் கொல்லம் துளசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #SabrimalaVerdict #ActorKollamThulasi
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், நேற்று நடந்த போராட்டத்தின்போது சபரிமலை விவகாரம் தொடர்பாக மலையாள குணச்சித்திர நடிகர் கொல்லம் துளசியின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும். ஒரு துண்டை டெல்லிக்கும் மற்றொரு துண்டை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல் மந்திரியின் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அவர் பேசினார்.

    அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவர் மீது காவல்துறை இன்று வழக்கு பதிவு செய்துள்ளது. விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்படலாம் என தெரிகிறது. #SabrimalaVerdict #ActorKollamThulasi

    சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளாவில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை ஐயப்பன் கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று பக்தர்கள் கருத்து தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பந்தளம் ராஜகுடும்பம், கோவில் தந்திரிகள், ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக நேற்று வரை சுப்ரீம் கோர்ட்டில் 10-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் வலியுறுத்தினர்.

    மறு சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. மேலும் தசரா பண்டிகை விடுமுறைக்கு பிறகு வழக்கமான வழக்குகளுடன் சேர்த்து சீராய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் என்றும் இதற்காக தீர்ப்பை நிறுத்தி வைக்க இயலாது என்றும் கூறி விட்டது.

    இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கைகளை கேரள அரசு தொடங்கியது. இது ஐயப்ப பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து அவர்கள், மாநிலம் தழுவிய போராட்டத்தில் குதித்தனர்.

    வருகிற 17-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக திறக்கப்பட இருக்கிறது. அப்போது பெண் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைந்து விட வாய்ப்பு இருப்பதாக கருதிய பக்தர்கள் அதனை தடுக்க போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் ஆச்சாரங்களை பாதுகாக்கும் அமைப்பு, அகில பாரத ஐயப்ப பக்தர்கள் சங்கம், ஹைந்தவ சங்கம், நாயர் சொசைட்டி, ஐயப்ப தர்ம சம்ரக்‌ஷனா சமிதி, ஆதிவாசி சம்ரக்‌ஷனா சமிதி, சபரிமலையை பாதுகாப்போம் அமைப்பு என பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டு போராட்டங்கள் நடந்தது.

    இந்த அமைப்புகளுக்கு பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பந்தளம் ராஜகுடும்பம் கோவில் தந்திரிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    சபரிமலையை பாதுகாப்போம் என்ற கோ‌ஷத்துடன் இந்த அமைப்புகள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள், கண்டன பேரணிகளை கடந்த 1-ந்தேதி முதல் நடத்தி வருகிறார்கள். எர்ணாகுளத்தில் இன்று பல்வேறு அமைப்புகள் இணைந்து பேரணி நடத்துகிறார்கள். இதில், 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

    இதுபோல பம்பை, நிலக்கல், திருவனந்தபுரம், பாறசாலை பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தது.

    இதற்கிடையே பா.ஜனதா கட்சி மற்றும் ஐயப்ப தர்ம சம்ரக்‌ஷனா சமிதி உள்பட சில அமைப்புகள் இணைந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நடைபயணம் தொடங்கினர்.

    வருகிற 15-ந்தேதி இந்த பயணம் திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு முடிவடைகிறது. அங்கு சபரிமலையை பாதுகாப்போம் என்ற கோ‌ஷத்துடன் முற்றுகை போராட்டம் நடக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மாநில அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன் மீதான உத்தரவு வரும் வரை பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மாநில அரசிடம் மனு கொடுக்கவும் உள்ளனர்.

    இதற்கிடையே திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு நேற்று பந்தளம் ராஜ குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் வி.எஸ். சிவக்குமார், பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சசிகுமார வர்மா, பந்தளம் சுதாகரன், நடிகரும், எம்.பி.யுமான சுரேஷ்கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநிலத்தின் பெருநகரங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு இணையாக சபரிமலை செல்லும் பிரதான சாலைகளிலும் போராட்டங்கள் நடைபெறுகிறது. பந்தளம், நிலக்கல் பகுதியில் ஆதிவாசி சம்ரக்‌ஷனா சமிதியை சேர்ந்தவர்கள் குடில் அமைத்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

    இப்போராட்டங்கள் பற்றி பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கூறும்போது, இந்த போராட்டங்களை கேரளத்திற்கு வெளியே கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்துள்ளோம். விரைவில் அனைத்து தென்மாநிலங்களிலும் சபரிமலையை பாதுகாப்போம் போராட்டம் நடக்கும் என்றார்.  #Sabarimala

    சபரிமலையில் பாரம்பரியமிக்க புனித தன்மை காக்க வேண்டி சிதம்பரம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.
    சிதம்பரம்:

    சபரிமலையில் பாரம்பரியமிக்க புனிதத்தன்மை காக்கப்பட வேண்டும், பெண்கள் தரிசனம் செய்ய பழைய நடைமுறை நீடிக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சேவா சங்க தலைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். இதில் சபரிமலையில் பழைய நடைமுறை தொடர வேண்டி ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி வேண்டினர். ஐயப்ப பாடல்கள் பாடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    இதேப்போல் மந்தார குப்பத்தில் உள்ள புவனேஷ்வரி அம்மன் கோவிலில் அகில இந்திய பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனைக்கு மந்தார குப்பம் கிளை தலைவர் குருசாமி நாகராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சபரிமலையின் புனிதம், தொன்மை மற்றும் விரதமுறைகள் குறித்து அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் பேசினர். இதில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    சபரிமலை கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை பெண்கள் விளக்கு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Sabarimala
    புதுச்சேரி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுவை கோவிந்தசாலை பாரதிபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை பெண்கள் விளக்கு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். #Sabarimala

    ×