search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளம்பரத்துக்காக சபரிமலை செல்பவர்களுக்கு எதிராக சென்னையில் இந்து மக்கள் கட்சி போராட்டம்
    X

    விளம்பரத்துக்காக சபரிமலை செல்பவர்களுக்கு எதிராக சென்னையில் இந்து மக்கள் கட்சி போராட்டம்

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் விளம்பரத்துக்காக பெண்கள் செல்வதாக குற்றம்சாட்டி அவர்களை அனுமதிக்கக் கூடாது என இந்து மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #SabarimalaTemple
    சென்னை:

    கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.  இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்புக்கு பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சபரிமலைக்குள் செல்ல முயலும் பெண்களை வழிமறைத்து போராட்டக்காரகள் மற்றும் பக்தர்கள் சிலர் கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுக்கின்றனர்.



    இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பெண்கள் சபரிமலைக்கு செல்வதை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கண்களில் கருப்புத்துணிகளை கட்டியபடி, ‘10 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்ல வேண்டாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெண்கள் விளம்பரத்துக்காக சபரிமலைக்கு செல்வதாகவும், அவர்கள் பக்தர்கள் இல்லை எனவும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். மேலும், அவர்கள் தூய்மையாக இல்லை எனவும், அவர்கள் கோவிலுக்குள் சென்றால் ஐயப்பனின் புனிதம் மற்றும் பிரம்மச்சரியம் வீணாகிவிடும் எனவும் இந்து மக்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். #SabarimalaTemple
    Next Story
    ×