search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனாதன விவகாரம்"

    • இந்து தர்மத்துக்கு தொன்றுதொட்டு வழங்கிவரும் பெயர் சனாதன தர்மம்.
    • தாய், சகோதரி, மனைவி ஆகிய உறவுகள் நிலையானது. இதனை எப்போதும் மாற்ற முடியாது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்து தர்மத்துக்கு தொன்றுதொட்டு வழங்கிவரும் பெயர் சனாதன தர்மம். சனாதன தர்மம் என்பது நிலையானது. தாய், சகோதரி, மனைவி ஆகிய உறவுகள் நிலையானது. இதனை எப்போதும் மாற்ற முடியாது.

    சனாதன இந்து தர்மத்தை இழிவுபடுத்துகிற கும்பல் வேரோடு களையப்பட வேண்டும். பா.ஜ.க.வினர், இந்து அமைப்பினர் அனைவரும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார் மனு அளிக்க வேண்டும்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டு வரப்போகிறோம் என பாரத பிரதமரோ அல்லது வேறு யாருமோ தற்போது தெரிவிக்கவில்லை. பா.ஜ.க.-அ.தி.மு.க. உறவு கணவன்-மனைவி உறவு போன்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் கட்சி எப்போதும் அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது.
    • காங்கிரஸ் கட்சி இத்தகைய கருத்துகளை நம்பவும் இல்லை.

    புதுடெல்லி:

    சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்போல தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசாவும் சனாதன தர்மத்துக்கு எதிராக தீவிரமாக பேசி வருகிறார். சனாதன தர்மத்தை எச்.ஐ.வி. வைரசுடன் ஒப்பிட்டுள்ள அவர், இது சமூக களங்கம் என்றும் கூறியுள்ளார்.

    தி.மு.க. தலைவர்களின் இந்த கருத்துகளுக்கு பா.ஜனதா போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், இந்த விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன? என்பதை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர்களின் இந்த கருத்துகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கூறியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன்கெரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி எப்போதும் அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. அனைத்து மதங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கும் இடம் உண்டு.

    இத்தகைய கருத்துகளை (தி.மு.க. தலைவர்களின் கருத்துகள்) அரசியல்சாசனம் அனுமதிக்கவும் இல்லை, காங்கிரஸ் கட்சி இத்தகைய கருத்துகளை நம்பவும் இல்லை.

    காங்கிரசின் வரலாற்றை நீங்கள் அறிந்திருந்தால், நாங்கள் எப்போதும் இந்த நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறோம் என்பதை அறிவீர்கள்.

    இவ்வாறு பவன் கெரா தெரிவித்தார்.

    சனாதன தர்மம் விவகாரத்தில் தி.மு.க.வை காங்கிரஸ் கண்டிக்காதது ஏன்? என்ற கேள்விக்கு, 'இதுபோன்ற கருத்துகளுடன் நாங்கள் உடன்படவில்லை என்று நான் சொன்னேன்' என பதிலளித்தார்.

    • எங்கள் மீது பா.ஜனதா தாக்குதல் நடத்த இதுபோன்ற கருத்துக்கள் அமையக் கூடாது.
    • மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர். அவரை நாடே உற்று நோக்குகிறது.

    மும்பை:

    சனாதன தர்மம் குறித்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் இதுகுறித்து கூறியதாவது:-

    உதயநிதி ஸ்டாலின் ஒரு அமைச்சர். அவரது அந்த பேச்சை நான் கேள்விப்பட்டேன். யாரும் இதை ஆதரிக்க மாட்டார்கள். இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இது தி.மு.க.வின் பார்வையாகவோ அல்லது அவரது தனிப்பட்ட பார்வையாகவோ இருக்கலாம். சுமார் 90 கோடி இந்துக்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். மற்ற மதத்தினரும் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். அவர்களின் மத உணர்வுகளை புண்படுத்த கூடாது.

    நாட்டின் நிலைமை மோசமடையக் கூடாது. எங்கள் மீது பா.ஜனதா தாக்குதல் நடத்த இதுபோன்ற கருத்துக்கள் அமையக் கூடாது. மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர். அவரை நாடே உற்று நோக்குகிறது. அவர் எங்களுடன் இணைந்து இருக்கிறார். எனவே இதுபோன்று கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் அவருக்கு நெருக்கமானவர்கள் தங்கள் வார்த்தைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

    • சனாதனம் விவகாரத்தில் இந்தியா முழுவதும் பா.ஜ.க.வினர் புகார் அளித்து வருவது குறித்து தொலைக்காட்சியில் தான் பார்த்துகொண்டு இருக்கிறேன்.
    • ஜனாதிபதி திரவுபதி முர்முவை புதிய பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைக்காதது தான் சனாதனத்துக்கான உதாரணம்.

    சென்னை:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசிய கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சனாதனம் விவகாரத்தில் இந்தியா முழுவதும் பா.ஜ.க.வினர் புகார் அளித்து வருவது குறித்து தொலைக்காட்சியில் தான் பார்த்துகொண்டு இருக்கிறேன். 'பாரத்' என பெயரை மாற்றி விட்டார்களா? சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என 100 ஆண்டுகளாக பேசி வருகிறோம். சனாதனத்தை ஒழிக்க நாங்கள் என்ன செய்யாமல் இருக்கிறோம்? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை யார் கொண்டு வந்தார்கள்.

    ஜனாதிபதி திரவுபதி முர்முவை புதிய பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைக்காதது தான் சனாதனத்துக்கான உதாரணம். சனாதனம் விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • திராவிட தமிழர் கட்சியின் சார்பில் இன்று பாளை பஸ் நிலையம் அருகே உத்தர பிரதேச சாமியாரின் உருவ பொம்மையை எரிக்கப் போவதாக தகவல் பரவியது.
    • திருவனந்தபுரம் சாலையில் இருந்து பஸ் நிலையம் நோக்கி வந்த திராவிட தமிழர் கட்சியினர் திடீரென உத்தரபிரதேச சாமியாரின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.

    நெல்லை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் உத்தரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு தருவதாக அறிவித்துள்ளார்.

    இதனை கண்டித்து திராவிட தமிழர் கட்சியின் சார்பில் இன்று பாளை பஸ் நிலையம் அருகே உத்தர பிரதேச சாமியாரின் உருவ பொம்மையை எரிக்கப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து பஸ் நிலைய பகுதியில் பாளை உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கே குவிக்கப்பட்டனர்.

    அப்போது திருவனந்தபுரம் சாலையில் இருந்து பஸ் நிலையம் நோக்கி வந்த திராவிட தமிழர் கட்சியினர் திடீரென உத்தரபிரதேச சாமியாரின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். அங்கே ஓடி வந்து போலீசார் தடுப்பதற்குள் உருவ பொம்மை முழுவதுமாக எரிந்து விட்டது.

    இதையடுத்து போலீசார் திராவிட தமிழர் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கதிரவன், மாவட்ட செயலாளர் திருக்குமரன், மாநில மகளிர் அணி செயலாளர் மீனா மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

    • நாங்கள் கடுமையாக படித்ததால்தான் முன்னேறியுள்ளோம்.
    • ஒழுக்கத்தோடு கூடிய வாழ்வியல் முறைதான் சனாதனம்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது.

    கருணாநிதி சிலையை ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்து பேசினார். அவர் பேசும்போது, திராவிட இயக்கங்களால்தான் கவர்னராக தமிழிசை பதவி வகிக்கிறார் என்று பேசினார். அவர் பேச்சுக்கு கவர்னர் தமிழிசை இன்று பதிலடி கொடுத்தார்.

    புதுவை கடற்கரை சாலையில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் கடுமையாக படித்ததால்தான் முன்னேறியுள்ளோம். மற்றொருவரின் முன்னேற்றத்தில் மற்றவர்களுக்கு பங்கு உள்ளது என கூறுவது அவருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.

    அவர்களை தூக்கிக்கொண்டுபோய் மேலே வைத்தனர். நான் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்தேன். என் முயற்சியால் வெளிநாட்டிற்கு சென்று படித்தேன். சனாதனம் என்றால் தவறான கருத்தை முன்னிறுத்துகின்றனர். ஆ.ராசா எப்போதும் அப்படித்தான் பேசி வருகிறார். தம்பி உதயநிதி அதைப்பற்றி தெரியாமல் பேசக்கூடாது.

    ஒழுக்கத்தோடு கூடிய வாழ்வியல் முறைதான் சனாதனம். சனாதனம் என்றால் சாதி மட்டும்தான் என சொல்கின்றனர். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள். சாதிரீதியாக ஒதுக்கீடு தராதீர்கள், ஏன் தி.மு.க.வில் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஏன் முதலமைச்சர் பதவியை தர மறுக்கிறீர்கள்?

    உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது. உங்கள் கட்சியில் உங்களைப்போல ஒருவர் தலைவராக வர முடியுமா? சனாதனத்தை எதிர்ப்பவர்கள் உங்கள் கட்சியில் உள்ள சர்வாதிகாரத்தை முதலில் எதிருங்கள். உதயநிதியை விட நன்றாக உழைத்தவர்கள் யாருமே தி.மு.க.வில் இல்லையா? ஆனால் அவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது.

    ஆ.ராசா கட்சியின் தலைவராகிவிட முடியுமா? மிகவும் அடிமட்டத்தில் உள்ளவர்களை உங்கள் கட்சியின் தலைவராகவோ? முதலமைச்சராகவோ? ஆக்கிவிட முடியுமா?

    நீங்கள் எதையும் செய்வதில்லை. உலகிற்கு சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம்? தமிழகம் கல்வியில் உயர பெருந்தலைவர் காமராஜர் போட்ட விதை. நீங்களே எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடுவதை ஒப்புக்கொள்ள முடியாது. ஆ.ராசா உங்கள் கட்சியில் நீங்கள் தலைவராக முடியுமா? என முதலில் சொல்லுங்கள். அதன்பின் சனாதனம் பற்றி பேசுங்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சாமியாரின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும், செருப்பால் அடித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் சாமியாருக்கு எதிராக தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பினர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தி.மு.க. இளைஞரணி தலைவரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி தருவதாக அறிவித்த உத்தரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் பேசினார். இதனை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் சாமியார் பரமஹம்ச ஆச்சார்யாவை கண்டித்து அவரது உருவ பொம்மையை எரிக்கும் போராட்டம் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பையர்நத்தம் பஸ் ஸ்டாப் அருகே தி.மு.க. சார்பில் இன்று நடைபெற்றது.

    இதில் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ். சரவணன் தலைமையில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் பையர் நத்தம் பஸ் நிறுத்தம் அருகில் ஒன்று கூடி சாமியாரின் உருவ பொம்மையை எடுத்து வந்தனர்.

    அப்போது சாமியாரின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும், செருப்பால் அடித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் உருவ பொம்மைக்கு தீவைத்து எரித்தனர்.

    இந்த போராட்டத்தில் சாமியாருக்கு எதிராக தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பினர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதே போன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பரமஹம்சா ஆச்சார்யாவை கண்டித்து அவருடைய உருவ பொம்மையை எரிக்கும் போராட்டம் காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணிக்காக காவேரிப்பட்டணம் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த திடீர் போராட்டத்தால் தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாமியாரின் மிரட்டலுக்கு தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் போட்டி போட்டு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்.

    கோவை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது பற்றி பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க.வினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியார் என்ற சாமியார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு அவரது தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அளிப்பதாக மிரட்டல் விடுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    சாமியாரின் இந்த மிரட்டலுக்கு தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொலைவெறியை தூண்டும் விதமாக மிரட்டல் விடுத்துள்ள சாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் போட்டி போட்டு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்.

    தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்டு உள்ள சுவரொட்டியில் "போலிச்சாமியாரே! 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்" என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

    பா.ஜ.க. சார்பில் ஒட்டப்பட்டு உள்ள சுவரொட்டியில் "சனாதனம் எங்கள் உயிர் மூச்சு" என்ற வாசகங்களுடன் சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது.

    கோவை மாநகரில் டவுன்ஹால், லங்கா கார்னர், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போட்டி போட்டு ஒட்டப்பட்டு உள்ள இந்த சுவரொட்டிகளை பொதுமக்கள் வியப்பாக பார்த்து செல்கின்றனர். இதனால் கோவை மாநகரில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • மௌனம் காத்து வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா, காங்கிரஸ் கருத்து தெரிவித்த பிறகு பேசினார்.
    • தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன்.

    வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் "சனாதன தர்மம்" கருத்துக்கு தனது மறுப்பை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்றும் காங்கிரஸ் ஒரு நுணுக்கமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. காங்கிரஸின் இளம் தலைவர்களான பிரியங்க் கார்கே, கார்த்தி சிதம்பரம் போன்றோர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் காத்து வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா, காங்கிரஸ் கருத்து தெரிவித்த பிறகு பேசினார்.

    அப்போது, உதயநிதி ஸ்டாலினின் சனாதான தர்மம் தொடர்பான கருத்துக்கு எதிர்ப்பு தெவித்தார்.

    இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    உதயநிதி ஸ்டாலினின் கருத்துகளைப் பொறுத்த வரையில், அவர் ஒரு இளையவர். என் தரப்பில் இருந்து, அவர் எதற்காக, எந்த அடிப்படையில் கருத்து வெளியிட்டார் என்பது எனக்கு தெளிவாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மதமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

    தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் இருப்பதால் அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்.

    நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன். வேதங்களில் இருந்து கற்றுக்கொள்கிறோம். எங்களிடம் பல புரோகிதர்கள் உள்ளனர். மாநில அரசு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. நாடு முழுவதும் எங்களிடம் பல கோவில்கள் உள்ளன. நாங்கள் கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்குச் செல்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு நாடு முழுக்க கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
    • இந்தியா கூட்டணி வலுப்பெற்று வருவதை திசை திருப்ப பா.ஜ.க. முயற்சி.

    சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணி ஆகும்," என்று தெரிவித்தார்.

    சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு நாடு முழுக்க கடுமையான எதிர்ப்புகள், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தனது கருத்துக்கு எழுந்த எதிர்ப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது தான். பா.ஜ.க.வினர் நான் பேசியதை திரித்து பேசி வருகின்றனர். இந்தியா (I.N.D.I.A.) கூட்டணி வலுப்பெற்று வருவதை திசை திருப்புவதற்காக தான் பாா.ஜ.க.வினர் சனாதனம் குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்."

    "எதுவும் மாறக்கூடாது, எல்லாமே நிலையானது என்பதே சனாதனம் என்று விளக்கம் கொடுக்கிறார்கள். எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். எல்லோருக்கும், எல்லாமே கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். பல ஆண்டுகளுக்கு முன் பெண்கள் படிக்கக்கூடாது என்று கூறினார்கள், பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று கூறினார்கள், கோயில்களுக்குள் செல்லக்கூடாது என்றார்கள். இந்த மூன்றையும் நாம் மாற்றி இருக்கிறோம். இதுதான் திராவிட மாடல். என்ன வழக்குப் போட்டாலும் அதை சந்திக்க தயார்," என்று தெரிவித்தார். 

    ×