search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சனாதனம் பற்றி நான் பேசியது சரிதான் - உதயநிதி ஸ்டாலின் பதிலடி
    X

    சனாதனம் பற்றி நான் பேசியது சரிதான் - உதயநிதி ஸ்டாலின் பதிலடி

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு நாடு முழுக்க கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
    • இந்தியா கூட்டணி வலுப்பெற்று வருவதை திசை திருப்ப பா.ஜ.க. முயற்சி.

    சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணி ஆகும்," என்று தெரிவித்தார்.

    சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு நாடு முழுக்க கடுமையான எதிர்ப்புகள், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தனது கருத்துக்கு எழுந்த எதிர்ப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது தான். பா.ஜ.க.வினர் நான் பேசியதை திரித்து பேசி வருகின்றனர். இந்தியா (I.N.D.I.A.) கூட்டணி வலுப்பெற்று வருவதை திசை திருப்புவதற்காக தான் பாா.ஜ.க.வினர் சனாதனம் குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்."

    "எதுவும் மாறக்கூடாது, எல்லாமே நிலையானது என்பதே சனாதனம் என்று விளக்கம் கொடுக்கிறார்கள். எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். எல்லோருக்கும், எல்லாமே கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். பல ஆண்டுகளுக்கு முன் பெண்கள் படிக்கக்கூடாது என்று கூறினார்கள், பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று கூறினார்கள், கோயில்களுக்குள் செல்லக்கூடாது என்றார்கள். இந்த மூன்றையும் நாம் மாற்றி இருக்கிறோம். இதுதான் திராவிட மாடல். என்ன வழக்குப் போட்டாலும் அதை சந்திக்க தயார்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×