search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கம்"

    • பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே நமது மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்ற முடியும்.
    • அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கூட்டுற வுத்துறையின் சார்பில், 69-வது கூட்டுறவு வார விழா மார்த்தாண்டத்தில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் தலை மையில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள், சிறந்த கூட்டுறவு சங்கங்க ளுக்கு கேடயங்கள் மற்றும் பயனானிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

    கன்னியாகுமரி மண்ட லத்தில் 202 கூட்டுறவு சங் கங்களின் வாயிலாகபொது மக்களுக்கு தேவையான கடனுதவிகள் உட்பட பல் வேறு சேவைகள் வழங்கப் பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு தேவை யான பயிர்கடன்கள் விதை, உரங்கள். இடு பொருட்கள் வினியோகம் செய்வதுடன் குறுகியகால மற்றும் மத்தியகால வேளாண் கடன்கள் வழங்கி உணவு உற்பத்தியையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் கும் கூட்டுறவு சங்கங்கள் கிராமங்கள்தோறும் தங்க ளது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறது.

    கடந்த ஆண்டுகளில் நமது மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கியிருந்த நிலை யில் தற்போது அந்த குப்பைகளை படிப்படியாக அகற்றிவருவதோடு, பிளாஸ்டிக் இல்லா மாவட்ட மாக மாற்றுவ தற்கு பல்வேறு முன்னெ டுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொது மக்களாகிய நீங்கள் அனைவரும் முழு ஒத்து ழைப்பு வழங்கி னால் மட்டுமே நமது மாவட் டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்ற முடி யும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளப்படி ஆட்சிப்பொறுப் பேற்ற சில மாதங்களிலே தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து கூட்டுறவுத் துறையின் கீழ் 5 சவரனுக்கு (40 கிராமிற்குட்பட்ட) உட்பட்ட நகைக்கடன் வைத்திருந்த நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்திற்குட் பட்ட 24,321 நபர்களுக்கு ரூ.105 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசுக்கு முழு ஒத்து ழைப்பு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை யில் 9-வது கூட்டுறவு வார விழா உறுதிமொழியினை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், பிரின்ஸ் எம.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர் கள், பொதுமக்கள் உள்ளிட் டோர் ஏற்று கொண்டனர்.

    கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவா ளர் சந்திரசேகரன், மத்திய கூட்டுறவு வங்கி (நாகர்கோ வில் கிளை) மேலாண்மை இயக்குநர் குருசாமி, மத்திய கூட்டுறவு வங்கி (தக்கலை சரகம்) துணைப்பதிவாளர் நரசிம்மன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் நாகராஜன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் முருகே சன், துணைப்பதிவாளர்கள் செந்தில் ஆறுமுகம், குருசாமி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலை வர்கள் பூதலிங்கம் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

    • பல்லடம் நகரில் சுமாா் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா்.
    • இக்கட்டான சூழ்நிலைகளில் பல்லடத்திலிருந்து திருப்பூா், கொடுவாய், சூலூா் போன்ற இடங்களுக்கு சுமாா் 20 கி.மீ.க்கு மேல் செல்ல வேண்டி உள்ளது.

    பல்லடம்:

    பல்லடத்தில் எரிவாயு மயானம் அமைக்க பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சங்கத் தலைவா் ஆனந்தா செல்வராஜ், செயலாளா் விமல் பழனிசாமி, பொருளாளா் காணியப்பா பரமசிவம், துணைத் தலைவா் பானு பழனிசாமி, துணைச் செயலாளா் தங்கலட்சுமி நடராஜன், ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா் ஆகியோா் பல்லடம் நகா்மன்றத் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் நகரில் சுமாா் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். மேலும், பல்லடம் நகரம் பல முக்கிய நகரங்களுக்கு செல்லும் சாலைகளின் சந்திப்பாக உள்ளது. தமிழக அரசின் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் பல்லடம் நகரில், நகராட்சி மூலம் எரிவாயு மயானம் அமைக்க உள்ளதாக அறிகின்றோம். இக்கட்டான சூழ்நிலைகளில் பல்லடத்திலிருந்து திருப்பூா், கொடுவாய், சூலூா் போன்ற இடங்களுக்கு சுமாா் 20 கி.மீ.க்கு மேல் செல்ல வேண்டி உள்ளது.

    இந்த எரிவாயு மயானம் அமைந்தால் பல்லடம் நகர மக்கள் பெரிதும் பயனடைவாா்கள். இதனால் மக்களுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் எந்தவிதமான தீங்கும் ஏற்படாது என அறிகின்றோம். இந்த எரிவாயு மயானத்தால் மக்களுக்கு பொருள் செலவும், காலச்செலவும் மிச்சமாகும். எனவே பல்லடம் நகரில் பொதுமக்களின் ஆதரவு, நகா்மன்றத் தலைவா் மற்றும் அதிகாரிகளின் அனுமதியுடன் அமையும் எரிவாயு மயானம் அமைக்கும் திட்டத்திற்கு எங்களின் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

    • 5000 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
    • ஜனவரி மாதம் வரை, பயிர் கடன், நகை கடன், நீண்ட கால இட்டு வைப்பு உள்ளிட்டவற்றில் சுமார் ரூபாய் 3 கோடியே 52 லட்சம் முறைகேடு செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளரி வெள்ளி ஊராட்சி பகுதியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் அப்பகுதியை சேர்ந்த 5000 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.இதன் தலைவராக அதே பகுதியை சேர்ந்த சத்தியபானு இருந்து வருகிறார்.

    இந்த சங்கத்தில் செயலாளராக இருந்த வேப்பமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் (வயது 55), கடந்த சில மாதங்களுக்கு முன் கூட்டுறவு சங்கத்தில் நிதி முறை கேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இது குறித்து கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் விசாரணையில் சங்க செயலாளர் பொறுப்பில் இருந்த மோகன் கடந்த ஜனவரி மாதம் வரை, பயிர் கடன், நகை கடன், நீண்ட கால இட்டு வைப்பு உள்ளிட்டவற்றில் சுமார் ரூபாய் 3 கோடியே 52 லட்சம் முறைகேடு செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் அவர் மீது தொடர் புகார்கள் எழுந்து வந்து வரும் நிலையில், மோகன் மற்றும் முறைகேட்டில் தொடர்புடைய பிற அலுவலர்கள் குறித்து கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தில் முன் திரண்ட அதன் வாடிக்கையாளர்கள், தங்கள் கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்திருந்த நகை, மற்றும் ஈட்டு வைப்புத் தொகை உள்ளிட்டவற்றை உடனடியாக தங்களுக்கு திருப்பித் தரக் கூறி கூட்டுறவு சங்கத்தின் பிரதான கதவினை பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் சங்கத்தின் பொறுப்பு செயலாளர் மணி மற்றும் பூலாம்பட்டி போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • திருப்பள்ளி முக்கூடல் கிராம பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பான் வழங்கப்பட்டது.
    • சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் மணிமாறன் கலந்து கொண்டு சிறப்பித்தார்

    திருவாருர்:

    திருவாரூரில் விஜயபுரம் ரோட்டரி சங்கத்தின் இரண்டாம் ஆண்டும், 2022-23-ம் ஆண்டின் பொறுப்பாளர்கள் பணி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் தலைவராக அபி பேரீச்சை சுப்பிரமணியன், செயலாளராக செந்தில்குமார், பொருளாளராக வீரக்குமார் ஆகியோர் பணி ஏற்றனர். விழாவில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருப்பள்ளி முக்கூடல் கிராம பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பான் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் என். மணிமாறன் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவில் விஜயபுரம் ரோட்டரி பயிற்றுனர் அண்ணாதுரை, பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், மற்றும் மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆண்டு விழாவிற்கு சங்க தலைவர் ராஜபிரபு தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் சங்க புதிய கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் ராஜபிரபு தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கவாஸ்கர் நாடார் முன்னிலை வகித்தார்.மெஞ்ஞானபுரம் வியா பாரிகள் சங்கசெயலாளர் செல்வின் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியன் வங்கி மேலாளர் குட்வின்ராய், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் காசிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ், தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் சங்க புதிய கட்டிடம் கட்டுவது எனவும், திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகளுக்கு தகுந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டி கொடுத்தால் அங்கு செல்வார்கள்.அவ்வாறின்றி கடைகளை மாநகராட்சி அகற்றினால் மாவட்டம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    பொருளாளர் பெரிய சாமி நன்றி கூறினார். கூட்டத்தில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    • சத்துணவு ஊழியர் சங்கம் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது
    • முறையற்ற மாறுதலை ரத்து செய்யக்கோரி

    கரூர்:

    முறையற்ற மாறுதலை ரத்து செய்யக்கோரி க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க க.பரமத்தி ஒன்றிய கிளை சார்பில் ஒன்றியத்தலைவர் கே.பூமாதேவி தலைமையில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் வி.டி.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் சி.இளங்கோவன், மாவட்ட பொருளாளர் எஸ்.செல்வராணி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்மணி, மாவட்ட இணைச் செயலாளர் சிவகாமி ஆகியோர் விளக்க உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் என்.பூங்கொடி வரவேற்றார். ஒன்றியப் பொருளாளர் ஆர்.மல்லிகா நன்றி கூறினார்.முறையீட்டில், விருப்ப மாறுதலில் சென்ற ஒரு வாரத்தில் அமைப்பாளர் லதாமங்கேஷ்கருக்கு சின்னதாராபுரம் மகளிர் பள்ளியிலிருந்து பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மேலும் ஒரு முறையற்ற மாறுதல் செய்யப்பட்டிருப்பதை ரத்து செய்யவேண்டும். 10, 20, 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு வழங்கவேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்கவேண்டும்.கூட்டுறவு நாணய சங்கத்தில் கடன்பெறும் உரிமையை ஒப்புதல் செய்திடவேண்டும். மாற்றுத் திறனாளிக்கு அரசாணைப்படி அலவன்ஸ் வழங்கவேண்டும் ஆகியவை வலியுறுத்தப்பட்டன.

    • கூட்டத்தில் மே 5-ந் தேதி வணிகர் சங்க மாநாட்டில் அறிவித்த 3 தீர்மானங்களை அரசாணையாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.
    • கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அறிமுகப்படுத்தி மாநில தலைவரும், அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் துணைத் தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா விழா பேருரை ஆற்றுகிறார்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டம் தஞ்சை வடக்கு ஆஜாரம் காமராஜர் மார்க்கெட் அருகில் உள்ள ஆமுக நாடார் முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நாளை 28-ந்தேதி மாலை 5.30 மணிக்கு தஞ்சை மாவட்ட தலைவர் அபிராமி எஸ்.எஸ்.பாண்டியன் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில்மே5 வணிகர் சங்க மாநாட்டில் அறிவித்த 3 தீர்மானங்களை அரசாணையாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அறிமுகப்படுத்தி மாநில தலைவரும், அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் துணைத் தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா விழா பேருரை ஆற்றுகிறார்.

    கூட்டத்தில் மாநி துணைத் தலைவர் கே.பி.சுப்பு என்கிற சுப்பிரமணியன் வரவேற்று பேசுகிறார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, மாநிலப் பொருளாளர் ஹாஜி சதக்கத்துல்லா, மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், தஞ்சை மண்டல தலைவர் செந்தில்நாதன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, தொகுதி நிர்வாகிகள் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறுகிறார். மேற்கண்ட தகவலை சிங்கப்பூர் தங்க மாளிகை நிறுவனர் இராம.சந்திரசேகரன் தெரிவித்தார்.

    • டெல்டா மாவட்ட விவசாயிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் எதிா்பாா்க்கிறது.
    • தங்களுடைய கருத்துகளை தயக்கமின்றி அணை கட்டாத அளவில் எதிா்ப்புகளை பதிவு செய்ய வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழக விவசாயிகள் சங்க ( நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் வேலுசாமி நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதாக அண்மையில் திருச்சி வந்திருந்த ஆணையத்தின் தலைவா் தெரிவித்திருந்தாா். டெல்லியில் காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் நிலையில், இக் கூட்டத்தில் அணை கட்டுவதற்கு விவாதிக்கவோ, எவ்வித அனுமதியோ வழங்கக் கூடாது.

    மேகதாது அணை கட்டாமல் தடுப்பதற்கு உண்டான எதிா்ப்பு வாதங்களை தமிழக அரசு சாா்பில் தெரிவிக்க வேண்டும். மூத்த பொறியாளா்கள், அரசுத் துறை உயா் அதிகாரிகள், வழக்குரைஞா்கள் ஆகியோா் தங்களுடைய கருத்துகளை தயக்கமின்றி அணை கட்டாத அளவில் எதிா்ப்புகளை பதிவு செய்ய வேண்டும்.

    டெல்டா மாவட்ட விவசாயிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் எதிா்பாா்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • பவானி நகராட்சி முன்பு ஏ.ஐ.டி.யு.சி உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பவானி:

    பவானி நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் கே.பி.நடராஜ், நகராட்சி சங்க துணை தலைவர் ஆர்.செல்லப்பன் தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் குப்புராஜ், ரங்கநாதன், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உள்ளாட்சி தொழிலாளர்கள் குறைதீர் ஆணையம் அமைத்திட வேண்டும் எனவும், அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களின் அவுட்சோர்சிங், தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் நகராட்சி சங்க தலைவர் மாதேஸ்வரன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் பாலமுருகன், கட்டிட சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×