search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெஞ்ஞானபுரம்"

    • ஸ்டீபன் ராஜ் சவாரிக்காக பரமன்குறிச்சியில் இருந்து உடன்குடிக்கு சென்றார்.
    • திருச்செந்தூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஸ்டீபன் ராஜை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    திருச்செந்தூர்:

    உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன் விளையை ேசர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் ( வயது 40). இவர் பரமன்குறிச்சியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    நேற்று மாலை இவர் சவாரிக்காக பரமன்குறிச்சியில் இருந்து உடன்குடிக்கு சென்றார். தண்டுபத்து பகுதியில் சென்றபோது நாய் ஒன்று குறுக்கே சாடியது. இதனால் ஸ்டீபன் ராஜ் திடீரென பிரேக் போட்டதும் எதிர் பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் ஸ்டீபன் ராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு திருச்செந்தூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆண்டு விழாவிற்கு சங்க தலைவர் ராஜபிரபு தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் சங்க புதிய கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் ராஜபிரபு தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கவாஸ்கர் நாடார் முன்னிலை வகித்தார்.மெஞ்ஞானபுரம் வியா பாரிகள் சங்கசெயலாளர் செல்வின் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியன் வங்கி மேலாளர் குட்வின்ராய், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் காசிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ், தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் சங்க புதிய கட்டிடம் கட்டுவது எனவும், திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகளுக்கு தகுந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டி கொடுத்தால் அங்கு செல்வார்கள்.அவ்வாறின்றி கடைகளை மாநகராட்சி அகற்றினால் மாவட்டம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    பொருளாளர் பெரிய சாமி நன்றி கூறினார். கூட்டத்தில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    ×