search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Club"

    • 2 கார்களில் பின் தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் சிவசங்கரன் காரை வழிமறித்தனர்.
    • பலத்த காயமடைந்த சிவசங்கரன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    போரூர்:

    சென்னை நுங்கம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 31). சப் - இன்ஸ்பெக்டரான இவர் மாதவரம் போலீஸ் நிலைய சட்டம்-ஒழுங்கு பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.

    சிவசங்கரன் நேற்று இரவு தனது நண்பர்களுடன் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கிளப் ஒன்றிற்கு சென்றார். பின்னர் மது அருந்திவிட்டு பணம் கட்ட சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் "எனது பில்லுக்கும் சேர்த்து பணத்தை கட்டு" என்று சிவசங்கரனிடம் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    பின்னர் சிவசங்கரன் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அப்போது அவரை 2 கார்களில் பின் தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் சிவசங்கரன் காரை வழிமறித்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய சிவசங்கரனை சரமாரியாக தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதில் பலத்த காயமடைந்த சிவசங்கரன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தப்பி சென்ற கும்பலை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • திருப்பள்ளி முக்கூடல் கிராம பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பான் வழங்கப்பட்டது.
    • சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் மணிமாறன் கலந்து கொண்டு சிறப்பித்தார்

    திருவாருர்:

    திருவாரூரில் விஜயபுரம் ரோட்டரி சங்கத்தின் இரண்டாம் ஆண்டும், 2022-23-ம் ஆண்டின் பொறுப்பாளர்கள் பணி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் தலைவராக அபி பேரீச்சை சுப்பிரமணியன், செயலாளராக செந்தில்குமார், பொருளாளராக வீரக்குமார் ஆகியோர் பணி ஏற்றனர். விழாவில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருப்பள்ளி முக்கூடல் கிராம பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பான் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் என். மணிமாறன் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவில் விஜயபுரம் ரோட்டரி பயிற்றுனர் அண்ணாதுரை, பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், மற்றும் மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
    • 10, 11-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்க பதவியேற்பு விழா மாவட்ட ஆளுநர் முத்து தலைமையில் நடந்தது. தலைவராக அங்குராஜ், செயலாளராக பால்சாமி மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றனர்.

    மாவட்ட செயலாளர் குருசாமி, ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், உதவி ஆளுநர் குமரேசன் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

    10 மற்றும் 11-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    நகராட்சி தூய்மை பணியாளர்கள் 11 பேருக்குபுத்தாடைகள் வழங்கப்பட்டது. 15 பயனாளிகளுக்கு தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை பெற்று தரப்பட்டது.

    ×