search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gas cemetery"

    • அவிநாசி பழைய பஸ் நிலையம் பின், பேரூராட்சி எரிவாயு மயானம் செயல்பட்டு வருகிறது.
    • எரிவாயு மயான கட்டடம் முழுவதும் புதிதாக பெயின்ட் அடிக்கும் பணிகள் நடக்கிறது.

    அவிநாசி :

    அவிநாசி பழைய பஸ் நிலையம் பின், பேரூராட்சி எரிவாயு மயானம் செயல்பட்டு வருகிறது. எரிவாயு மயானத்தில் உள்ள புளோயர், புகை போக்கி, மின்மோட்டார், அமரர் படுக்கை மற்றும் பெயின்ட் அடிப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தற்காலிகமாக எரிவாயு மயான பணிகள் நிறுத்தப்படுகின்றது.

    இது குறித்து பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி கூறுகையில், பேரூராட்சி எரிவாயு மயானத்தில் புகை போக்கி, புளோயர், மின் மோட்டார் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எரிவாயு மயான கட்டடம் முழுவதும் புதிதாக பெயின்ட் அடிக்கும் பணிகள் நடக்கிறது. பிப்ரவரி 3ந் தேதி முதல் மயானம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார். 

    • பல்லடம் நகரில் சுமாா் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா்.
    • இக்கட்டான சூழ்நிலைகளில் பல்லடத்திலிருந்து திருப்பூா், கொடுவாய், சூலூா் போன்ற இடங்களுக்கு சுமாா் 20 கி.மீ.க்கு மேல் செல்ல வேண்டி உள்ளது.

    பல்லடம்:

    பல்லடத்தில் எரிவாயு மயானம் அமைக்க பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சங்கத் தலைவா் ஆனந்தா செல்வராஜ், செயலாளா் விமல் பழனிசாமி, பொருளாளா் காணியப்பா பரமசிவம், துணைத் தலைவா் பானு பழனிசாமி, துணைச் செயலாளா் தங்கலட்சுமி நடராஜன், ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா் ஆகியோா் பல்லடம் நகா்மன்றத் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் நகரில் சுமாா் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். மேலும், பல்லடம் நகரம் பல முக்கிய நகரங்களுக்கு செல்லும் சாலைகளின் சந்திப்பாக உள்ளது. தமிழக அரசின் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் பல்லடம் நகரில், நகராட்சி மூலம் எரிவாயு மயானம் அமைக்க உள்ளதாக அறிகின்றோம். இக்கட்டான சூழ்நிலைகளில் பல்லடத்திலிருந்து திருப்பூா், கொடுவாய், சூலூா் போன்ற இடங்களுக்கு சுமாா் 20 கி.மீ.க்கு மேல் செல்ல வேண்டி உள்ளது.

    இந்த எரிவாயு மயானம் அமைந்தால் பல்லடம் நகர மக்கள் பெரிதும் பயனடைவாா்கள். இதனால் மக்களுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் எந்தவிதமான தீங்கும் ஏற்படாது என அறிகின்றோம். இந்த எரிவாயு மயானத்தால் மக்களுக்கு பொருள் செலவும், காலச்செலவும் மிச்சமாகும். எனவே பல்லடம் நகரில் பொதுமக்களின் ஆதரவு, நகா்மன்றத் தலைவா் மற்றும் அதிகாரிகளின் அனுமதியுடன் அமையும் எரிவாயு மயானம் அமைக்கும் திட்டத்திற்கு எங்களின் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

    ×