search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு ஊழியர் சங்கம் பெருந்திரள் முறையீடு போராட்டம்
    X

    சத்துணவு ஊழியர் சங்கம் பெருந்திரள் முறையீடு போராட்டம்

    • சத்துணவு ஊழியர் சங்கம் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது
    • முறையற்ற மாறுதலை ரத்து செய்யக்கோரி

    கரூர்:

    முறையற்ற மாறுதலை ரத்து செய்யக்கோரி க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க க.பரமத்தி ஒன்றிய கிளை சார்பில் ஒன்றியத்தலைவர் கே.பூமாதேவி தலைமையில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் வி.டி.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் சி.இளங்கோவன், மாவட்ட பொருளாளர் எஸ்.செல்வராணி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்மணி, மாவட்ட இணைச் செயலாளர் சிவகாமி ஆகியோர் விளக்க உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் என்.பூங்கொடி வரவேற்றார். ஒன்றியப் பொருளாளர் ஆர்.மல்லிகா நன்றி கூறினார்.முறையீட்டில், விருப்ப மாறுதலில் சென்ற ஒரு வாரத்தில் அமைப்பாளர் லதாமங்கேஷ்கருக்கு சின்னதாராபுரம் மகளிர் பள்ளியிலிருந்து பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மேலும் ஒரு முறையற்ற மாறுதல் செய்யப்பட்டிருப்பதை ரத்து செய்யவேண்டும். 10, 20, 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு வழங்கவேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்கவேண்டும்.கூட்டுறவு நாணய சங்கத்தில் கடன்பெறும் உரிமையை ஒப்புதல் செய்திடவேண்டும். மாற்றுத் திறனாளிக்கு அரசாணைப்படி அலவன்ஸ் வழங்கவேண்டும் ஆகியவை வலியுறுத்தப்பட்டன.

    Next Story
    ×