search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடக்க"

    • 28-ந்தேதி நடக்கிறது
    • ஏற்பாடுகளை சந்தையடி ஊர் பொதுமக்கள் மற்றும் அறங்காவலர் குழு வினர் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள சந்தையடியில் அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா, தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மற்றும் கார்த்திகை சிறப்பு திருவிழா ஆகியவை முப்பெரும் விழாவாக வருகிற 28-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை நடக்கிறது.

    28-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு விளக்கு நியமித்து பணிவிடை யும், காலை 7.30 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் அய்யாவைகுண்ட சாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழாவும் நடக்கிறது. 29-ந்தேதி தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. இதை யொட்டி அன்று அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7.30 மணிக்கு மிருத்தியஞ்சய ஹோமமும், 9.30 மணிக்கு பிம்பம் சுத்தம் செய்யும் பூஜையும் நடக்கிறது.

    மாலை 5.30 மணிக்கு பகவதி பூஜையும், 6.30 மணிக்கு சுதர்சன ஹோமமும், சுமங்கலி பூஜையும் நடக்கிறது. 30-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7.30 மணிக்கு அய்யா நிழல் தாங்கலில் இருந்து அபிஷேக தீர்த்தம் ஊர்வல மாக ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு தீபாராத னையும் 12.30 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து 31-ந் தேதி முதல் டிசம்பர் 11-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு ஸ்ரீதேவி முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 41 நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. டிசம்பர் மாதம் 10-ந் தேதி காலை 6 மணிக்கு அய்யாவுக்கு விளக்கு நிய மித்தல் பணிவிடை நடக்கிறது. 11 மணிக்கு அய்யா வுக்கு பணிவிடையும் பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் 1 மணிக்கு பால் தர்மமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் 6.30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் இரவு 7 மணிக்கு அய்யாவுக்கு உகப்ப டிப்பும் 8 மணிக்கு அன்னதர்ம மும் நடக்கிறது.

    மறுநாள் 12-ந்தேதி ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு கொடை விழா நடக்கிறது. இதை யொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றுதலும் 6 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாரதனையும் 6.30 மணிக்கு அம்மன் கடல் நீராடி வருதலும் நடக்கிறது. காலை 8 மணிக்கு நையாண்டி மேளமும் 9 மணிக்கு நாரா யண சுவாமிக்கு சிறப்பு பூஜையும் 10 மணிக்கு ஸ்ரீ தர்மசாஸ்தாவுக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது. 11-45 மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜையும் பகல் 12 மணிக்கு மாரியம்மன், உச்சினி மாகாளியம்மன் முத்தாரம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 1 மணிக்கு சமபந்தி விருந்தும் பிற்பகல் 2-30 மணிக்கு செங்கிடாகாரசாமி, வெள் ளைக்கார சாமி, கருங்கிடகார சாமிகளுக்கு சிறப்பு அலங்காரபூஜைகளும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் 6 மணிக்கு மாசானசாமி மற்றும் சுடலை மாடசாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு இனிப்பு வழங்குதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சந்தையடி ஊர் பொதுமக்கள் மற்றும் அறங்காவலர் குழு வினர் செய்து வருகிறார்கள்.

    • 5000 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
    • ஜனவரி மாதம் வரை, பயிர் கடன், நகை கடன், நீண்ட கால இட்டு வைப்பு உள்ளிட்டவற்றில் சுமார் ரூபாய் 3 கோடியே 52 லட்சம் முறைகேடு செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளரி வெள்ளி ஊராட்சி பகுதியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் அப்பகுதியை சேர்ந்த 5000 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.இதன் தலைவராக அதே பகுதியை சேர்ந்த சத்தியபானு இருந்து வருகிறார்.

    இந்த சங்கத்தில் செயலாளராக இருந்த வேப்பமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் (வயது 55), கடந்த சில மாதங்களுக்கு முன் கூட்டுறவு சங்கத்தில் நிதி முறை கேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இது குறித்து கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் விசாரணையில் சங்க செயலாளர் பொறுப்பில் இருந்த மோகன் கடந்த ஜனவரி மாதம் வரை, பயிர் கடன், நகை கடன், நீண்ட கால இட்டு வைப்பு உள்ளிட்டவற்றில் சுமார் ரூபாய் 3 கோடியே 52 லட்சம் முறைகேடு செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் அவர் மீது தொடர் புகார்கள் எழுந்து வந்து வரும் நிலையில், மோகன் மற்றும் முறைகேட்டில் தொடர்புடைய பிற அலுவலர்கள் குறித்து கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தில் முன் திரண்ட அதன் வாடிக்கையாளர்கள், தங்கள் கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்திருந்த நகை, மற்றும் ஈட்டு வைப்புத் தொகை உள்ளிட்டவற்றை உடனடியாக தங்களுக்கு திருப்பித் தரக் கூறி கூட்டுறவு சங்கத்தின் பிரதான கதவினை பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் சங்கத்தின் பொறுப்பு செயலாளர் மணி மற்றும் பூலாம்பட்டி போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ×