search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களியக்காவிளை"

    • தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மற்றும் மானிய மண்எண்ணை கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • போலீசார் களியக்காவிளை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர்.

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் களியக்காவிளை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலசிங்கம் என்பதும், ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வதும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து காரையும், ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

    ரேசன்அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், கடத்தல் வாகனத்தை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

    • களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை
    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அடுத்த மீனச்சல் பகுதியில் உள்ள ஒருவரின் போலி முகவரியை கொடுத்து மர்ம நபர்கள் ஆன்லைனில் 3 விலை உயர்ந்த செல்போன் மற்றும் கேமராவை ஆர்டர் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஆர்டர் செய்த கேமரா மற்றும் செல்போன்கள் ஆகியவை மார்த்தாண்டத்தில் உள்ள கொரியர் நிறுவனத்திற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து கொரியர் நிறுவன ஊழியர் அஜித் ஆன்லைனில் ஆர்டர் செய்த 2 வாலிபர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த பொருட்களுடன் அவர்களது முகவரிக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு இருந்த வாலிபர்கள் அஜித்திடம் பேசி கொண்டு இருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் கொரியர் நிறுவன பார்சலை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியுள்ளார்.

    இதையடுத்து இன்னொரு வாலிபரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அஜித் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட 2 வாலிபர்களும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருவிக்கரை பகுதியை சேர்ந்த அகில் கிருஷ்ணா மற்றும் அமித் குமார் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் கேரளாவிற்கு சென்று அகில் கிருஷ்ணா மற்றும் அமித் குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    அவர்கள் 2 பேரும் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 3 செல்போன்களை விற்பனை செய்துள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணம் மற்றும் கேமராவை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டம்,
    • களியக்காவிளை போலீசார் பி.பி.எம். சந்திப்பு பகுதியில் வாகன சோதனை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான லாரிகளில் அதிக பாரத்துடன் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு, பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை களியக்காவிளை போலீசார் பி.பி.எம். சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 3 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார் அதனை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதன் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவு

    கன்னியாகுமரி:

    பளுகல் அருகே கருமானூர் பகுதியை சேர்ந்த வர் ராஜிவ் (வயது 37). கூலிவேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஷைனி. இவர்களுக்கு 10 வயதில் ஒருமகள் உள்ளார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி கணவரை பிரிந்து கேரளா வில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    கடந்த 6 மாத காலமாக அங்கேயே தங்கி உள்ளார். நேற்று ஷைனி தனது உறவினரான கிறிஸ்டி என்பவரது இருசக்கர வாகனத்தில் கணவர் வீட்டில் நடக்கும் சுய உதவி குழுவில் பணம் வாங்குவதற்காக வந்துள்ளார்.

    இதை அறிந்த ஷைனியின் கணவர் ராஜிவ் அங்கு சென்றார். ஷைனியை தன்னுடன் சேர்ந்து வாழ மறுக்கும் நீ இங்கு எதற்கு வந்தாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஷைனியின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஷைனி வலி தாங்காமுடியாமல் அலறியுள்ளார். மேலும் படுகாயமடைந்த ஷைனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாறசாலை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவ னந்த புரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இது குறித்து ஷைனியின் உறவினர் கிறிஸ்டி பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அந்த புகாரின் அடிப்படையில் பளுகல் போலீசார் ராஜிவ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிர மாக தேடி வருகின்றனர். கணவரே மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் மடிச்சல் பகுதியில் ரோந்து
    • பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும் வருவாய் துறையினரும் தீவிர நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும் வருவாய் துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து தடுத்து வருகின்றனர்.

    இதைதொடர்ந்து களியக்கா விளை சப்-இன்ஸ்பெக் டர் முத்துக்கும ரன் தலைமை யில்போலீசார் மடிச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டியும் கார் நிறுத்தாமல் சென்றுவிட்டது. தொடர்ந்து போலீசார் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று அதங் கோடு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். காரை ஓட்டிவந்த டிரைவர் தப்பி யோடிவிட்டார்.

    மேலும் காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 1 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்க பட்டது. இந்த ரேசன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    மேலும் பறிமுதல் செய்த காரையும் ரேசன் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் காரில் இருந்து பறிமுதல் செய்த அரிசியை காப்பிக் காடு அரசு நுகர்வோர் வாணிபக் கிடங்கில் ஒப்ப டைத்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகன் ஒரு கொலைவழக்கில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் வெளியே வந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு
    • அவரிடம் உறவினர்கள் யாரும் பேசுவதில்லை என்பதால் மன வேதனை

    கன்னியாகுமரி:

    குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.

    இவர் வீட்டின் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தலைவராக உள்ளார். இவருக்கு மனைவியும் மகள், மகனும் உள்ளனர். மகள் திருமணமாகி வேறு ஊரில் வசித்துவருகிறார்.மகன் திருமணம் முடிந்து ராஜேந்திரனுடன் உள்ளார்.

    சில வருடங்களுக்கு முன்பு ராஜேந்திரனின் மகன் ஒரு கொலைவழக்கில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கில் ராஜேந்திரனுக்கு ஏராளமான பணம் செலவானதாக கூறப்படுகிறது.

    மேலும் அவரிடம் உறவி னர்கள் யாரும் பேசுவதில்லை என்றும் தெரிகிறது. இதனால் ராஜேந்திரனுக்கும் அவரது மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ராஜேந்திரன் மன வேதனையில் இருந்தார். நேற்று இரவு அவர் வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு அறையில் சென்று தூங்கி உள்ளார்.காலையில் வெகு நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்காததால் சந்தேகமடைந்த மனைவி அறைக்குள் சென்று பார்த்தார்.

    அப்போது கணவர் விஷம் குடித்து இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து களியக்கா விளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், வியாபாரிகள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை குப்பை இல்லா பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றும் விதமாக குப்பை இல்லா குமரி எனும் விழிப்புணர்வு நடைபயணம் இன்று களியக்காவிளையில் தொடங்கியது.

    அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி, நடைபயணத்தை தொடங்கி வைத்து கலந்து கொண்டார். இதில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், வியாபாரிகள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    முன்னதாக அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு 95 சதவீதம் நடைபெற்றுள்ளது. அதனை 100 சதவீதமாக மாற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

    அதில் பங்களித்த அரசு அதிகாரிகள், பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இப்போது அதன் 2-ம் கட்டமாக குப்பை இல்லா குமரி எனும் திட்டத்தை அறிவித்து அதனை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என செயல்படுத்தி வருகிறோம். மக்கள் பங்களிப்பு இருந்தால் தான் வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும் என்பதற்காக கல்லூரி மாணவர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், இளைஞர்கள் அழைத்து வாக்கத்தான் நிகழ்வை தொடங்கி உள்ளோம். தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இது நடைபெற இருக்கிறது.

    பிளாஸ்டிக் ஒழிப்பில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளோம். மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பொதுமக்கள் தாங்களாக பிரித்து வழங்கி வருகிறார்கள்.

    உறிஞ்சி குழி அமைத்து சுமார் 60 சதவீதம் வீடுகளில் கழிவுகள் வெளியில் விடவில்லை. குமரி மாவட்டமானது சுமார் 6 மாதத்திற்குள் குப்பையில்லா மாவட்டமாக மாறும் சூழல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழிப்புணர்வு நடைபய ணத்திற்கு மார்த்தாண்டம் லிஸ்டர் சந்திப்பில் லிஸ்டர் ஹார்ட் மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

    மேலும் நடந்து வந்தவர்களுக்கு குளிர்பா னம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இயக்குநர் டாக்டர் அரவிந்த் மற்றும் லிஸ்டர் குழந்தையின்மை சிகிச்சை மைய நிபுணர் டாக்டர் ஆனந்தி விஜயன் ஆகியோர் அமைச்சர் மனோதங்கராஜிக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த விழிப்புணர்வு நடை பயணமானது குழித்துறை வரை சென்றது.

    • கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மாந்தறை பகுதியை சேர்ந்தவர் சஜித் (வயது 39), மீன் பிடி தொழிலாளி.

    இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சுதீர். 2 பேரும் ஒன்றாக தான் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள். இவர்க ளுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.

    நேற்று 2 பேரும் கட லுக்கு சென்று திரும்பி யதும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது 2 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஆத்திர மடைந்த சுதீர், தான் மறைத்து வைத்திருந்த வெட்டு கத்தியை எடுத்து நண்பர் என்றும் கூட பார்க்காமல் சஜீத்தை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது 2 கைகளின் மணிக்கட்டு பகுதிகளும் துண்டானது. சஜீத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    அவர்களை பார்த்ததும் சுதீர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சஜீத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மாந்தறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருவ னந்தபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அயரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுதீர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மது தகராறில் நண்பரின் 2 கைகளையும் வாலிபர் வெட்டி துண்டாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெண் படுகாயம்
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று அதிகாலை ஒரு கார் புறப்பட்டது.

    அந்த காரை கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சார்ந்த முகமது சாபி ஓட்டி வந்தார். காரின் பின் சீட்டில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜினா அமர்ந்திருந்தார்.

    களியக்காவிளை அருகே திருத்தோபுரம் பகுதி யில் கார் வந்த போது எதிர்பா ராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையில் வைத்திருந்த தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரின் பின்இருக்கையில் அமர்ந்தி ருந்த அஜினா படுகாயம் அடைந்தார்.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பி னார்.

    இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேர் படுகாயம் அடைந்தனர்
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே ஆர்சி தெரு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 48). அவருடைய நண்பர் அதே பகுதியை சார்ந்த பாஸ்கர்.

    இவர்கள் 2 பேரும் மார்த்தாண்டம் மார்க்கெட் டில் சுமை தூக்கும் தொழி லாளிகளாக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அதிகாலையிலே வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று அதிகாலை நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

    இரு சக்கர வாகனம் திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்தது.பேருந்து திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நண்பர்கள் இருவரும் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் 2 பேரும் சாலை யில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் படுகா யமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் 2 பேரும் விபத்தில் சிக்கி படுகாய மடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைப்பு
    • கடத்தல் வாகனத்தை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைப்பு

    கன்னியாகுமரி:

    தமிழக கேரள எல்லைப்பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் கல்லுக்கட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக 2 லாரிகள் வந்துகொண்டிருந்தன. லாரிகளை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். அந்த லாரிகள் நிற்காமல் சென்று விட்டன. உடனடியாக போலீசார் தொடர்ந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று திருத்தோபுரம் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர்.

    டிரைவர்கள் லாரிகளை சாலையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். போலீசார் லாரிகளை சோதனை செய்த போது அதில் சுமார் 26 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் வாகனத்தையும், அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், கடத்தல் வாகனத்தை தாசில்தார் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து தப்பியோடிய ஓட்டுநர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கூட்டப்புளி கிழங்குவிளையைச் சேர்ந்தவர் பிஜு (வயது 38) இவர் படந்தாலுமூட்டில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

    இங்கு திருமணமான 20 வயது இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். அவரை மிரட்டி அருகே நின்று, பிஜு போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்ப்ப மாக இருந்ததால், இளம் பெண் பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த பிஜு, இளம்பெண்ணுடன் தான் இருக்குமாறு எடுத்த போட்டோக்களை அவரது கணவர் மொபைல் போனுக்கு அனுப்ப போவ தாக மிரட்டி உள்ளார். மேலும் மற்றொரு மொபைல் போனிலிருந்து அந்தப் போட்டோக்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பி உள்ளார். இதனால் பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாயார் வீட்டுக்கு வந்த பெண் எறும்பு பொடி(விஷம்) யை தண்ணீரில் கலக்கி குடித்து உள்ளார்.

    இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து களியக்கா விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கு மார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து பிஜூவை தேடி வருகின்றனர்.

    ×