என் மலர்
உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியையும் அதை கடத்த பயன்படுத்தப்பட்ட காரையும் படத்தில் காணலாம்
களியக்காவிளை அருகே கேரளாவிற்கு காரில் கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்
- தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மற்றும் மானிய மண்எண்ணை கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- போலீசார் களியக்காவிளை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர்.
கன்னியாகுமரி:
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் களியக்காவிளை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலசிங்கம் என்பதும், ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வதும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து காரையும், ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
ரேசன்அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், கடத்தல் வாகனத்தை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.






