search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரியர் ஊழியர்"

    • களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை
    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அடுத்த மீனச்சல் பகுதியில் உள்ள ஒருவரின் போலி முகவரியை கொடுத்து மர்ம நபர்கள் ஆன்லைனில் 3 விலை உயர்ந்த செல்போன் மற்றும் கேமராவை ஆர்டர் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஆர்டர் செய்த கேமரா மற்றும் செல்போன்கள் ஆகியவை மார்த்தாண்டத்தில் உள்ள கொரியர் நிறுவனத்திற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து கொரியர் நிறுவன ஊழியர் அஜித் ஆன்லைனில் ஆர்டர் செய்த 2 வாலிபர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த பொருட்களுடன் அவர்களது முகவரிக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு இருந்த வாலிபர்கள் அஜித்திடம் பேசி கொண்டு இருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் கொரியர் நிறுவன பார்சலை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியுள்ளார்.

    இதையடுத்து இன்னொரு வாலிபரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அஜித் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட 2 வாலிபர்களும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருவிக்கரை பகுதியை சேர்ந்த அகில் கிருஷ்ணா மற்றும் அமித் குமார் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் கேரளாவிற்கு சென்று அகில் கிருஷ்ணா மற்றும் அமித் குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    அவர்கள் 2 பேரும் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 3 செல்போன்களை விற்பனை செய்துள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணம் மற்றும் கேமராவை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×