search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே கேரளாவிற்கு காரில் கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை படத்தில் காணலாம்.

    களியக்காவிளை அருகே கேரளாவிற்கு காரில் கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • போலீசார் மடிச்சல் பகுதியில் ரோந்து
    • பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும் வருவாய் துறையினரும் தீவிர நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும் வருவாய் துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து தடுத்து வருகின்றனர்.

    இதைதொடர்ந்து களியக்கா விளை சப்-இன்ஸ்பெக் டர் முத்துக்கும ரன் தலைமை யில்போலீசார் மடிச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டியும் கார் நிறுத்தாமல் சென்றுவிட்டது. தொடர்ந்து போலீசார் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று அதங் கோடு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். காரை ஓட்டிவந்த டிரைவர் தப்பி யோடிவிட்டார்.

    மேலும் காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 1 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்க பட்டது. இந்த ரேசன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    மேலும் பறிமுதல் செய்த காரையும் ரேசன் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் காரில் இருந்து பறிமுதல் செய்த அரிசியை காப்பிக் காடு அரசு நுகர்வோர் வாணிபக் கிடங்கில் ஒப்ப டைத்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×