search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டன ஆர்ப்பாட்டம்"

    • பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பவானி:

    திருச்சி மாவட்டம் துறை யூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனுக்கு நரசிங்கபுரம் பகுதியில் மணல் கடத்தப்படு வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சம்பவ இடம் சென்றார். அப்போது டிராக்டர் மூலம் சிலர் கிராவல் மண் அனுமதி இன்றி கடத்தப்பட்டது தெரிய வந்தது.

    இது குறித்து அவர்களிடம் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் கேட்டு தடுத்து நிறுத்தினார். அப்போது 4 பேர் அவரை தகாத வார்த்தையால் பேசி அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து துறையூர் போலீசில் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    இந்நிலையில் வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து பவானி தாசில்தார் அலு வலக வளாகத்தின் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பவானி வட்டக் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். செய லாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பறிக்கப்பட வேண்டும். அவர் மீதும் மறறவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். வருவாய் துறை அலுவலர்க ளுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பி னர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர், தாசில்தார் அலுவலக பணி யாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உதவி யாளர் சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

    • புதிதாக சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினார்.

    பவானி:

    ஈரோடு வடக்கு மாவட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பவானி- மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் பவானி உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

    ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் செங்கைரவி, பொருளாளர் வினோத் குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் சுடலை, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கண்டன உரை ஆற்றினர். பவானி-மேட்டூர் மெயின் ரோடு தற்போது அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணி முடிக்கும் போது பவானி அருகில் உள்ள சிங்கம்பேட்டை பகுதியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளதை கண்டித்து இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும் எனவும் கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினார்.

    இதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் பூபாலன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • வருவாய்த்துறை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பரமத்திவேலூர்:

    திருச்சி மாவட்டம், துறையூரில் மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கி காயப்படுத்திய தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டவர்களை கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைக்கக்கோரி பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் பூபாலன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தொடர்ந்து வருவாய்த்துறை ஊழியர்கள் தாக்கப்பட்டு வருவதை தடுக்க கோரியும், இனிவரும் காலங்களில் வருவாய்த்துறை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முத்துசெழியன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து கோரிக்கை கோஷம் எழுப்பினார்கள்.

    கடலூர்:

    பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டவை கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பெருமாள், விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆனந்தவேல் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ரங்கேஷ், ஊடகப்பிரிவு செந்தாமரைக் கண்ணன், மாநகராட்சி கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை காற்றினார். இதில் நிர்வாகிகள் குணசேகரன் ராமமூர்த்தி பிரவீன் விஜய் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக தங்கள் கோரிக்கை கோஷம் எழுப்பினார்கள்.

    • படுகொலை சம்பவத்தில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும்.
    • பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்த மகன் சுபாஷ் மற்றும் கொலையை தடுக்க முயன்ற சுபாஷின் பாட்டி கண்ணம்மாவைவும் வெட்டி ஆணவக் கொலை செய்த கொலையாளி தண்டபாணிக்கு பிணையில் விடாமல் குண்டர் தடுப்பு சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும்.

    இந்த படுகொலை சம்பவத்தில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.

    இது போன்ற ஆணவக் கொலைகளை உடனடியாக விசாரிப்பதற்காக தனி நீதிமன்றத்தை தமிழக அரசு நிறுவ வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விசிக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட.ன ஆர்ப்பாட்டம் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு விசிக கட்சியின் மாநில துணைச் செயலாளர் அசோகன் தலைமையில் 20 -க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • கிருஷ்ணகிரி மாவட்ட எப்.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில், ஓசூரில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஓசூர் ராம் நகர் அண்ணாசிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மாவட்ட குழு உறுப்பினர் மாதையன் தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    ஓசூரில் உள்ள ஆம் ஸ்டீல் என்ற தனியார் தொழிற்சாலை, சட்டப்படி பணி ஓய்வுபெற்றவர்களுக்கு, சட்டவிரோதமாக வேலை வழங்குவதை அதிகாரிகள் அனுமதிப்பதை கண்டித்தும், தமிழக அரசு தலையிட்டு சட்டமீறல்களை தடுத்து தொழிலாளிகளை பாதுகாக்க கோரியும், கிருஷ்ணகிரி மாவட்ட எப்.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில், ஓசூரில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ராம் நகர் அண்ணாசிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மாவட்ட குழு உறுப்பினர் மாதையன் தலைமை தாங்கினார். கண்ணன், மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், மாநில பொதுச்செயலாளர் எஸ்.சுந்தரம் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் வைத்தி, மாவட்ட செயலாளர் ஆசைத்தம்பி உள்பட பலர் பேசினர். இதில், மாவட்ட, மாநகர, தொகுதி நிர்வாகிகள், பல்வேறு நிறுவனங்களின் எப்.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்டக்குழு உறுப்பினர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

    • ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • தி.மு.க. அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

    மதுரை விமான நிலைய உள்வளாகத்தில் இருந்து வெளியே வருவதற்காக சிறிய பஸ்சில் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்தார். அப்போது அதே பஸ்சில் இருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் ராஜேசுவரன், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசி தனது செல்போனில் படம் பிடித்தார்.

    இதனால் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் அவரை தடுத்தனர். அப்போது அங்கு மோதல் ஏற்பட்டது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக இருதரப்பிலும் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அ.ம.மு.க. பிரமுகர் ராஜேசுவரன் அளித்த புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் மீது, அ.தி.மு.க.வினர் கொடுத்த புகாரின்பேரில் ராஜேசுவரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை 11 மணிக்கு மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கருப்புச்சட்டை அணிந்திருந்தனர். அவர்கள் தி.மு.க. அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. மாவட்ட துணை செயலாளர் வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம், நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், அண்ணாதுரை, பைக்காரா கருப்புசாமி, சோலைராஜா, முத்துவேல், கலைச்செல்வம், கே.வி.கே. கண்ணன், பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், பரவை ராஜா, வழக்கறிஞர் ரமேஷ், நிலையூர் முருகன், ராஜேந்திரன், ஓம்.கே. சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க.வினர் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • சமையல் எரிவாயு விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    சேலம்:

    மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமையல் எரிவாயு விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கியாஸ் சிலிண்ட ருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். திரும்பப் பெறாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்த னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.
    • சமூக விரோதிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.

    கடலூர்:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பால.அறவாழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முல்லைமாறன், ராஜேஷ், அன்பரசன், சுபாஷ், காட்டு ராஜா, ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.

    சங்கராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய, நகரம் சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வக்கீல் அணி மாநில செயலாளர் பார்வேந்தன், மாநில துணை பொது செயலாளர் திருமார்பன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    மூங்கில்துறைப்பட்டு பகுதியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடி வன்முறையில் ஈடுபட்ட கும்பலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், சேதப்படுத்திய சொத்துக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், ஆதிதிராவிடர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் நிர்வாகிகள் ராமமூர்த்தி, பாலு, பொன்னிவளவன், அறிவுக்கரசு, திராவிட சந்திரன், தொல்காப்பியன், கிள்ளிவளவன், குமார், வெங்கடேசன், கண்ணன், சக்திவேல், ராதிகா, பழனியம்மாள், காந்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.   தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் சிவக்கொழுந்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை காவலர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பணி செய்பவர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.

    பணியின் போது இறந்த பணியாளர்கள் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்.  இதில் மாநில செயலாளர் டெல்லி அப்பாதுரை, மாவட்ட அமைப்பாளர் தணிகைவேல், மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், மாநில பிரச்சார செயலாளர் அதிதேவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சிராஜுதீன் நன்றி கூறினார்.

    • தமிழக ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆளுநரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    கடலூர்:

    தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்புகளை மீறிய, தமிழக ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூர் அமைப்புக்குழு செயலாளர்மணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தண்டபாணி மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜ்,சிவகாமி வடலூர் நகர அமைப்பாளர் இளங்கோவன், ஒன்றிய குழு அழகுமுத்து,ராஜேஷ் ,விவசாய சங்க செயலாளர், வெங்கடேசன் வாலிபர் சங்க ஒன்றிய துணை செயலாளர் அசோக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×