என் மலர்
நீங்கள் தேடியது "protest protest"
- பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து கோரிக்கை கோஷம் எழுப்பினார்கள்.
கடலூர்:
பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டவை கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பெருமாள், விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆனந்தவேல் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ரங்கேஷ், ஊடகப்பிரிவு செந்தாமரைக் கண்ணன், மாநகராட்சி கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை காற்றினார். இதில் நிர்வாகிகள் குணசேகரன் ராமமூர்த்தி பிரவீன் விஜய் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக தங்கள் கோரிக்கை கோஷம் எழுப்பினார்கள்.
- நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
- படகுகளில் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர்.
ராமேசுவரம்:
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பாம்பன் மீனவர்கள் 25 பேருடன் நான்கு படகுகளை விடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்கள் மற்றும் நான்கு நாட்டுப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் படகுடன் 25 மீனவர்களை மீட்க கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக படகுகளில் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மீனவ சங்கத்தலைவர்கள் எஸ்.பி.ராயப்பன் தலைமை தாங்கி பேசினார். நிர்வாகிகள் சின்னத்தம்பி, கருணாமூர்த்தி, முருகானந்தம், மீனவ சங்க நிர்வாகிகள் அலெக்ஸ், எட்வின்.டேவிட், முடியப்பன், இன்னாசிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பாம்பன், தெற்குவாடி, சின்ன பாலம், நம்புதாளை, நாலுமனை, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
- விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டம்.
- ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சி.
திருப்பூர்:
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கங்களின் சார்பில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் மாநிலத்தலைவர் சண்முகம் தலைமையில் பெண்கள் உட்பட 100 விவசாயிகள் இன்று காலை குமரன் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள், பா.ஜ.க., அரசு விவசாயிகளுக்கு எதிராக அடக்கு முறையை கையாள்கிறது. விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும். வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். எம்.எஸ்.பி. கேட்டு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜெக்ஜித் சிங் டல்லே வாலை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து அங்கிருந்து ரெயில் நிலையம் நோக்கி சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.






