திமுக அரசை கண்டித்து பாஜக வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து கோரிக்கை கோஷம் எழுப்பினார்கள்.
திமுக அரசை கண்டித்து பாஜக வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

கடலூர்:

பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டவை கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பெருமாள், விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆனந்தவேல் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ரங்கேஷ், ஊடகப்பிரிவு செந்தாமரைக் கண்ணன், மாநகராட்சி கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை காற்றினார். இதில் நிர்வாகிகள் குணசேகரன் ராமமூர்த்தி பிரவீன் விஜய் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக தங்கள் கோரிக்கை கோஷம் எழுப்பினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com