search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்சரிக்கை"

    • 5 மாவட்டங்களில் கரையோர வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
    • வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 65.16 அடியாக உள்ளது. நீர்வரத்து 1697 கனஅடி, திறப்பு 1869 கனஅடி, இருப்பு 4666 மி.கனஅடி.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் கடந்த மாதம் 9-ந்தேதி அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியது.

    இதனையடுத்து கடந்த மாதம் 29-ந்தேதி முதல் டிசம்பர் 8-ந்தேதி வரை ராமநாதபுரம், சிவகங்கை , மதுரை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசன பகுதிகளுக்கு வைகையாற்றில் இருந்து 15 நாட்களுக்கு மொத்தம் 2466 மி.கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து மீண்டும் டிசம்பர் 11-ந்தேதிசிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனபகுதி 2-க்கு வைகையாற்றில் இருந்து விநாடிக்கு 1200 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    வருகிற 4-ந்தேதி வரை 4 நாட்களுக்கு மொத்தம் 413 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். இதனையடுத்து டிசம்பர் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 5 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதி 3-க்கு 1304 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். டிசம்பர் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5 நாட்களுக்கு மதுரை மாவட்ட பூர்வீக பாசனபகுதி 1-க்கு மொத்தம் 229 மி.கனஅடி நீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்கு அணையிலிருந்து வைகையாற்றில் நேற்றுமுதல் வருகிற 13-ந்தேதி வரை விநாடிக்கு 2000 கனஅடியும், 14-ந்தேதி விநாடிக்கு 1180 கனஅடிவீதமும் தண்ணீர் திறந்துவிடப்படும். ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்கு வருகிற 16-ந்தேதி விநாடிக்கு 3000 கனஅடியும், 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை விநாடிக்கு 2300 கனஅடிவீதமும், டிசம்பர் 20-ந்தேதி விநாடிக்கு 1120 கனஅடிவீதமும், தண்ணீர் திறக்கப்படும்.

    மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக 22-ந்தேதி விநாடிக்கு 600 கனஅடியும், 23-ந்தேதி விநாடிக்கு 565 கனஅடியும், 24 மற்றும் 25-ந்தேதிகளில் விநாடிக்கு 500 கனஅடியும், 26-ந்தேதி விநாடிக்கு 400 கனஅடிவீதமும் தண்ணீர் திறக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 65.16 அடியாக உள்ளது. நீர்வரத்து 1697 கனஅடி, திறப்பு 1869 கனஅடி, இருப்பு 4666 மி.கனஅடி.

    முல்லைபெரியாறு அணையின்நீர்மட்டம் 136.15 அடியாக உள்ளது. வரத்து 1248 கனஅடி, திறப்பு 1500 கனஅடி, இருப்பு 6156 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியதால் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் சோத்துப்பாறை அணையின்நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் மழையளவு குறைந்தபோதிலும் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று 40-வது நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

    • மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • அணையில் இருந்து 407.25 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இன்று காலை வரை அதிகபட்சமாக அம்பையில் 49 மில்லி மீட்டரும், கருப்பா நதி பகுதியில் 35 மில்லி மீட்டரும், ஆய்க்குடியில் 32 மில்லி மீட்டரும், கடம்பூரில் 40 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

    இதே போல் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, நாங்குநேரி, கடனாநதி பகுதி, ராமநதி பகுதி குண்டாறு பகுதி, கொடு முடியாறு பகுதி, அடவி நயினார் அணைக்கட்டு, சங்கரன்கோவில், சிவகிரி, தூத்துக்குடி, கயத்தாறு, கழுகுமலை, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் வைப்பாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    ஏற்கனவே பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தாமிர பரணி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப் படுகிறது.

    இந்நிலையில் முக்கூடல், அரியநாயகிபுரம் அணைக்கட்டை கடந்து தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 5,400 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவை குண்டம் அணை கட்டு பகுதிகள் கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிர பரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் நெல்லை மாவட்ட தாமிரபரணி பகுதிகளை கடந்து தண்ணீர் செல்வதால் நெல்லை மாவட்டத்திலும் தாமிர பரணி ஆற்றுக்கு செல்வோர் கவனமாக இருக்குமாறும், முடிந்த அளவு கரையோரம் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 120.70 அடியாக உள்ளது. அணைக்கு 870.509 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 407.25 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதே போல் மணி முத்தாறு அணையின் நீர்மட்டம் 86.30 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 133.89 கன அடியாகவும் உள்ளது. இதே போல் தென்காசி மாவட்ட அணைகளை பொறுத்த வரையில் குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36.10 அடியை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. அடவி நயினார் அணை நீர்மட்டம் 113.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 69.88 அடியாகவும், ராமநதி அணை 82 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 2 அடியே உள்ளது. கடனா நதி அணை 81.40 அடியாக உள்ளது.

    • சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.
    • கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிச்சாங் புயலாக உருவானது.

    சென்னைக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிச்சாங் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

    மிச்சாங் புயல் நெருங்கி வருவதன் எதிரொலியாக சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், பொது மக்கள் யாரும் புயல் கரையை கடக்கும் வரை கடற்கரை பகுதிக்கோ, தேவை இல்லாமல் வெளியேவோ செல்ல வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவித்திருந்தது.

    இந்நிலையில், மிச்சாங் புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக பொது மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்ணை துறை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    அதன்படி, அந்த குறுஞ்செய்தியில், " மிச்சாங் புயலால் கனமழையுடன் 60- 70 கி.மீ., பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

    பொது மக்கள் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம். மரங்கள், மின்கம்பங்கள் சாலைகள் பாதிக்கும்- தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும்" என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளது.

    • அமலாக்கத்துறை தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
    • அதிகாரியே லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு டாக்டரை வழக்கிலிருந்து விடுவிக்க ரூபாய் 3 கோடி பேரம் பேசி ரூபாய் 20 லட்சம் லஞ்சப் பணம் பெற்று காரில் தப்ப முயன்ற மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் 25 கி.மீ. தூரம் விரட்டி சென்று பலவந்தமாக மடக்கி கைது செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஊழலை ஒழிக்க வந்த புனிதர்கள் போல் வேடம் தரித்து வந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரியே லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அமலாக்கத்துறை தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

    அமலாக்கத்துறையோடு நெருங்கிய உறவு வைத்திருக்கிற அண்ணாமலை அதற்கான ஆதாரங்களை பெற்று குற்றச்சாட்டுகளை கூற தயாராக இருக்கிறாரா? அப்படி தயாராக இல்லையெனில் தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என கூறுவதோடு, பொது மன்னிப்பை அவர் கேட்க வேண்டும். இல்லையெனில் அவரது குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரமற்ற அவதூறான கருத்து தான் என்ற முடிவுக்கு வர வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் இனியும் தொடருமேயானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    அதே போல தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்கிறது.

    குறிப்பாக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் நேற்று முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    ஒரு சில நேரங்களில் கனமழையும் கொட்டியது. நேற்றிரவு ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சிறிது நேரமே அந்த மழை நீடித்தது. ஆனால் நள்ளிரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியது. காற்று, இடி-மின்னல் எதுவும் இல்லாமல் வெளுத்து வாங்கியது.

    சென்னையை ஒட்டிய மாவட்டங்களிலும் ஆர்ப்பரிப்பு இல்லாமல் மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஆனால் பெரும்பாலான இடங்களில் உடனே வடிந்துவிட்டது.

    இந்நிலையில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் மேலும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். நாளை (22-ந் தேதி) மற்றும் 23-ந் தேதியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் இன்று முதல் 24-ந் தேதி வரை பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில் இன்றும் நாளையும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    வடகிழக்கு பருவமழை இயல்பைவிட கடந்த வாரம் வரை 13 சதவீதம் குறைவாக பதிவாகி இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் பற்றாக்குறை குறைந்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 6செ.மீ., எண்ணூர் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

    • இரவு நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உலா வருகின்றன.
    • பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம்.

    வால்பாறை:

    கேரளா மாநிலத்தில் இருந்து ஆண்டுதோறும் நவம்பர் மாதங்களில் காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக வால்பாறை வனப்பகுதிக்கு திரண்டு வருவது வழக்கம்.

    இங்கு அவை 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்கும். மேலும் கேரளாவில் இருந்து காட்டு யானைகளின் இடப்பெயர்வு தொடர்ந்து 3 மாதம்வரை நீடிக்கும்.

    இந்நிலையில் கேரளாவில் இருந்து காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக வால்பாறைக்கு வந்தபடி உள்ளன. அவை தற்போது கேரள மாநில வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள சின்கோனா, மூடிஸ், நல்லமுடி, ஷேக்கல்முடி எஸ்டேட்டுகள் வழியாக வால்பாறைக்கு வந்து கொண்டு உள்ளன.

    இதன் ஒரு பகுதியாக கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்து உள்ள 20 காட்டு யானைகள் தற்போது வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ளன. அவை இரவு நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உலா வருகின்றன. மேலும் அங்குள்ள விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன.

    வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் தேயிலை எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக முகாமிட்டு நிற்பதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம், அப்படியே வெளியில் செல்வதாக இருந்தால் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • இணையவழி சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஏப்ரல் 10-ந் தேதி ஒப்புதல் அளித்தார்.
    • மீண்டும் தவறு செய்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை ஒழுங்குபடுத்துதல் சட்டம் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை கடந்த மார்ச் 6-ந் தேதி தமிழக அரசுக்கு கவர்னர் திருப்பி அனுப்பினார். கடந்த மார்ச் 23-ந் தேதி சட்டப்பேரவையில் மசோதா மீண்டும் நிறை வேற்றப்பட்டு மறுநாளே கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இணையவழி சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஏப்ரல் 10-ந் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.

    இந்த சட்டத்தின்படி இணைய விளையாட்டில் ஈடுபடுவோருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5,000 அபராதத்துடன் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இணைய வழி விளையாட்டுக்காக விளம்பரம் செய்வோருக்கு ஓராண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

    இதுபோன்ற விளையாட்டுகளை அளிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இவர்கள் மீண்டும் தவறு செய்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    • மொட்டை மாடியில் தேவையற்ற பொருட்கள் உள்ளதா? என்பதனை அதிரடியாக சோதனை மேற்கொண்டார்.
    • மாநகர் நல அலுவலர் எழில் மதனா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

     கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாநகராட்சியில் மேயர் சுந்தரி ராஜா உத்தர வின் பேரில் ஆணையாளர் காந்திராஜ் மற்றும் அதி காரிகள் பல்வேறு முன் னெச்சரிக்கை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் தேவனாம் பட்டினம் சின்னத்தம்பி செட்டி தெருவில் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்றார். பின்னர் வீடு வீடாக நேரில் சென்று மொட்டை மாடி போன்ற இடங்களை டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி செய்யும் வகையில் நாள்பட்ட தண்ணீர், மழை நீர் உள்ளதா? வீடுகள் சுகாதாரமாக உள்ளதா? மொட்டை மாடியில் தேவையற்ற பொருட்கள் உள்ளதா? என்பதனை அதிரடியாக சோதனை மேற்கொண்டார்.

    அப்போது ஒரு வீட்டின் மாடியில் மழைநீர் தேங்கி இருந்ததில் ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நாள்பட்ட நீரில் டெங்கு கொசு புழுக்கள் உருவாகும் என்பதால் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். மேலும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் சுற்றுப்புறத்தை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து டெங்கு ஒழிப்பு பணியாளர்களிடம் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று டெங்கு கொசு புழுக்கள் உருவாகாத வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாநகர் நல அலுவலர் எழில் மதனா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • தீபாவளியை முன்னிட்டு ரெயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக் கூடாது.
    • ரெயில்களில் பெண்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே எஸ்.பி தெரிவித்தார்.

    சென்னை:

    தீபாவளியை முன்னிட்டு ரெயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது, மீறினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, ரெயில்வே எஸ்.பி சுகுணா சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு காவல்துறை மூலமாக பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக எக்காரணம் கொண்டும் பட்டாசுகளை ரெயில் நிலையங்களுக்கு கொண்டு செல்வதையோ, ரெயில் பெட்டிகளில் கொண்டு செல்வதையோ தவிர்க்க வேண்டும். அதனை மீறும் பட்சத்தில் ஆர்.பி.எப் மூலமாக அபராதம் விதிக்கப்படும்.

    பெண்கள், குழந்தைகள் ரெயில்களில் பயணம் செய்யும்போது, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக பெண் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து வகையான ரெயில்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருட்டு சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் கிரைம் போலீசாரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    கடந்த 3 நாட்களில் 25-க்கும் மேற்பட்ட செல்போன்கள் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    • இந்த அணையில் இருந்து 11 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • மேலும், நீர் வரத்து படிப்படியாக குறைந்ததால், நீர் திறந்து விடப்படுவதும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. 46 அடி உயரமுள்ள இந்த அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். உபரி நீரினை விவசாயத்திற்கு திறக்கப்படும். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த அணையில் இருந்து 11 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கல்வராயன்மலை பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதனால் நேற்று மாலை கோமுகி அணைக்கு 3 ஆயிரம் கன அடிநீர் வந்தது. இதையடுத்து நேற்று இரவு கோமுகி அணையில் இருந்து 2500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. மேலும், நீர் வரத்து படிப்படியாக குறைந்ததால், நீர் திறந்து விடப்படுவதும் படிப்படியாக குறைக்கப்பட்டது. இன்று காலை 10 மணி நிலவரப்படி கோமுகி அணைக்கு 800 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் முழுக்கொள்ளளவான 44 அடிக்கு நீர் உள்ளதால், உபரியாக வரும் 800 கன அடி நீர் மட்டும் திறந்து விடப்படுகிறது. இதனால் கோமுகி அணையின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • வணிகர்கள், வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை
    • சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வணிகர்கள், வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அருணா தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட் டது.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அருணா கூட்டத்தில் பேசியதாவது:-

    தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உள்ளது.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக்கால் ஆன பைகள், கப்புகள், டம்ளர்கள், கரண்டிகள், முலாம் பூசிய காகித தட்டுகள், சாப்பாட்டு இலைகள், தோரணம் மற்றும் கொடிகள் உள்ளிட்ட 19 வகையான பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே நீங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆலோசனை கூட்டத்தில் ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாம கேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிகண்டன், வருவாய் கோட்டாட்சி யர்கள் மகராஜ் (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), முகமதுகுதரதுல்லா (கூடலூர்), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, ஊட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் உள்பட அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அன்றைய தினம் சர்வதேச முற்றுகை நடைபெற இருக்கிறது.
    • விமானத்தில் பயணம் செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

    காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டு இருக்கும் புதிய வீடியோவில், நவம்பர் 19-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்போருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் 19-ம் தேதி இந்தியாவில் ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் "நவம்பர் 19-ம் தேதி சீக்கியர்களை ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அன்றைய தினம் சர்வதேச முற்றுகை நடைபெற இருக்கிறது. நவம்பர் 19-ம் தேதி, ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தால், உங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்," என்று தெரிவித்து இருக்கிறார்.

    நவம்பர் 19-ம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, அதன் பெயர் மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

    ×