நவம்பர் 19.. ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தால் ஆபத்து.. எச்சரிக்கை விடுத்த பயங்கரவாதி

அன்றைய தினம் சர்வதேச முற்றுகை நடைபெற இருக்கிறது. விமானத்தில் பயணம் செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
நவம்பர் 19.. ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தால் ஆபத்து.. எச்சரிக்கை விடுத்த பயங்கரவாதி
Published on

காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டு இருக்கும் புதிய வீடியோவில், நவம்பர் 19-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்போருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் 19-ம் தேதி இந்தியாவில் ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் "நவம்பர் 19-ம் தேதி சீக்கியர்களை ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அன்றைய தினம் சர்வதேச முற்றுகை நடைபெற இருக்கிறது. நவம்பர் 19-ம் தேதி, ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தால், உங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்," என்று தெரிவித்து இருக்கிறார்.

நவம்பர் 19-ம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, அதன் பெயர் மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com