search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Caution"

    • அனுமதியின்றி தயார் செய்யப்படும் அழகு சாதன பொருட்களில் தரம் குறைவாக இருக்கலாம்.
    • போலி மருதாணி கூம்புகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெண்கள் தற்போது அதிகளவில் மருதாணி கூம்புகளை பயன்படுத்தி வருகின்றனர். வீட்டில் நடக்கும் விசேஷங்கள் முதல் விழா காலங்களில் சிறுமிகள் முதல் பெண்கள் வரை அனைவராலும் தவிர்க்க முடியாததாக மருதாணி வைக்கும் பழக்கம் வந்துவிட்டது.

    அந்த காலத்தில் வீட்டில் மருதாணி இலையை அரைத்து மருதாணி வைத்து அலங்கரித்தனர்.

    ஆனால் தற்போது மருதாணி கூம்புகள் அறிமுகமான பிறகு விதவிதமான வகைகளில் மருதாணி கைகளில் வைக்கப்படுகிறது.600-க்கும் மேற்பட்ட மருதாணி வடிவமைப்புகள் கண்டு பிடிக்க ப்பட்டுள்ளன.

    போலியான மருதாணி கூம்பு களால் உடல்ந லத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து ள்ளனர்.***திருப்பதி, ஜன.11-

    மருதாணி( மெஹந்தி)கோன் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. உண்மையான மருதாணி இலையை அரைத்து மட்டுமே இந்த மருதாணி கோன் உற்பத்தி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    ஆனால் அதனை மீறி தெலுங்கானா மாநிலத்தில் மெஹந்தி நிறுவனம் ஒன்று போலியாக மருதாணி கோன்களை தயாரித்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள மெகதி பட்டினத்தில் உள்ள ஒரு மருதாணி கூம்பு தயாரி க்கும் தொழிற்சாலையில் போலியாக மருதாணி கூம்புகள் தயாரிப்பதாக தெலுங்கானா மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் நேற்று அந்த நிறுவனத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்கிருந்த மருதாணி கூம்புகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த மருதாணி கூம்புகள் பிக்ரமிக் அமிலம் என்ற செயற்கை சாயத்தை பயன்படுத்தி போலியாக தயாரிப்பது தெரிய வந்தது. மேலும் இந்த நிறுவனம் உரிமம் இல்லாமல் இயங்கியது கண்டு பிடிக்க பட்டது.

    அந்த நிறுவனத்தில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மருதாணி கூம்புகளை பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெலுங்கானா மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில்

    அனுமதியின்றி தயார் செய்யப்படும் அழகு சாதன பொருட்களில் தரம் குறைவாக இருக்கலாம்.

    இது போன்ற அழகு சாதன பொருட்களில் பொது சுகாதாரத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

    தற்போது பறிமுதல் செய்யப்பட்ட மருதாணி கூம்புகள் பிக்ரமிக் அமிலம் என்ற செயற்கை சாயத்தை பயன்படுத்தி தயாரித்துள்ளனர்.

    இந்த அமிலம் வெடி பொருட்கள் தயாரிப்பதற்கும் மருத்து வத்துறையில் சில மருந்துகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

    இந்த வகை மருதாணி கையில் வைப்பதால் சாப்பிடும் போது உணவில் கலந்து உடலில் கலந்து விடும்.இது உடல் நலத்தை பாதிக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    போலி மருதாணி கூம்புகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீடியோ காட்சிகளை பார்த்த அண்ணா நகர் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
    • யானைகள் தண்ணீர் குடிக்க இங்கும் அங்கும் ரோட்டை கடப்பது வாடிக்கையான ஒன்றுதான்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை, காட்டெருமை, கழுதைப்புலி, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் புலி மற்றும் யானை ஒரே நேரத்தில் ரோட்டை கடந்து சென்றது. இதை அந்த வழியாக வந்த வாகன ஒட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார். பின்னர் அவர் அந்த வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோ காட்சிகளை பார்த்த அண்ணா நகர் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பொதுவாக இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பது சகஜம் தான். ஆனால் புலி நடமாட்டம் இருப்பதை கண்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இது குறித்து பவானி சாகர் வனத்துறையினர் கூறும்போது,

    பவானிசாகரில் இருந்து அண்ணாநகர் செல்லும் வழியில் 2 பக்கமும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்பொழுது யானைகள் தண்ணீர் குடிக்க இங்கும் அங்கும் ரோட்டை கடப்பது வாடிக்கையான ஒன்றுதான்.

    ஆனால் புலி நடமாட்டம் மிகவும் அரிதான ஒன்று. எனவே இந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம். அதேபோல் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
    • வடகிழக்கு பருவமழைக்காக மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:-

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று கழிவுநீர், செப்டிங் டேங்க் தூய்மை படுத்துபவர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, வார்டு கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது :-

    தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதனை சிலர் முறையாக பயன்படுத்துவதில்லை. எனவே அவர்கள் உபகரணங்களை பயன்படுத்தி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். பாதாள சாக்கடையை ரோபோ மூலம் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக ஜே.சி.பி. எந்திரங்கள், ஆட்டோ மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு உள்ளிட்ட எந்த பிரச்சினை என்றாலும் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். வடகிழக்கு பருவமழைக்காக மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் 7598016621 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி கடலூர் டவுன்ஹால் எதிரில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையிலும் அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பேரணியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாநகர ஆணையாளர் காந்திராஜ், மாநகர நல அலுவலர் எழில் மதனா, மண்டல குழு தலைவர் சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள் பாபு, சுபாஷ்ணி ராஜா, டாக்டர் காரல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மொட்டை மாடியில் தேவையற்ற பொருட்கள் உள்ளதா? என்பதனை அதிரடியாக சோதனை மேற்கொண்டார்.
    • மாநகர் நல அலுவலர் எழில் மதனா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

     கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாநகராட்சியில் மேயர் சுந்தரி ராஜா உத்தர வின் பேரில் ஆணையாளர் காந்திராஜ் மற்றும் அதி காரிகள் பல்வேறு முன் னெச்சரிக்கை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் தேவனாம் பட்டினம் சின்னத்தம்பி செட்டி தெருவில் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்றார். பின்னர் வீடு வீடாக நேரில் சென்று மொட்டை மாடி போன்ற இடங்களை டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி செய்யும் வகையில் நாள்பட்ட தண்ணீர், மழை நீர் உள்ளதா? வீடுகள் சுகாதாரமாக உள்ளதா? மொட்டை மாடியில் தேவையற்ற பொருட்கள் உள்ளதா? என்பதனை அதிரடியாக சோதனை மேற்கொண்டார்.

    அப்போது ஒரு வீட்டின் மாடியில் மழைநீர் தேங்கி இருந்ததில் ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நாள்பட்ட நீரில் டெங்கு கொசு புழுக்கள் உருவாகும் என்பதால் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். மேலும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் சுற்றுப்புறத்தை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து டெங்கு ஒழிப்பு பணியாளர்களிடம் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று டெங்கு கொசு புழுக்கள் உருவாகாத வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாநகர் நல அலுவலர் எழில் மதனா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • மழைக்காலங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு மக்கள் அவதி அடைந்து வந்தனர்.
    • மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி 2-வது வார்டில் தாழ்வான பகுதியில மழை க்காலங்களில் குடியிருப்பு களை மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு வாசிகள் அவதி அடைந்து வந்தனர். இதனிடையே மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் ரஹமத்நிஷா முபாரக், நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகர னிடம் கோரிக்கை வைத்தார்.

    இதனை அடுத்து நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகர், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் அறிவுறு த்தலின்படி இரணியன் நகர் பகுதியில் வாய்க்கால் ஹிட்டாச்சி இயந்திரம் கொண்டு தூர் வாரும் பணி தொடங்கியது.

    இந்த பணிகள் மேற்கொள்வதன் மூலம் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழாமல் எளிதில் வடியும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நகராட்சி பொறியாளர் குமார், பணி மேற்பா ர்வையாளர் விஜயேந்திரன், நகர்மன்ற உறுப்பினர் ரஹ்மத்நிஷா பாரூக் உடன் இருந்தனர்.

    • பணியாளர்கள் பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றி உதவி செயற்பொறியாளர் சின்னசாமி எடுத்துரைத்தார்.
    • பணிபுரியும்போது எக்காரணம் கொண்டும் செல்போனில் பேசக்கூடாது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்ப்புற கோட்டம் பெருமாள்புரம் பிரிவு அலுவலகத்தில் மின் வினி யோகத்தில் பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றி பாதுகாப்பு வகுப்பு இன்று காலை நடைபெற்றது.

    அதில் பணியாளர்கள் பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றி உதவி செயற்பொறியாளர் சின்னசாமி எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசுகையில், மின் பாதைகளில் பணிபுரியும் பொழுது மின் விநியோகத்தை நிறுத்தி நில இணைப்பு செய்து அதன் பின்பு பணி புரிவது அவசியம். காற்று திறப்பான்களை திறக்கும் பொழுதும், மூடும் போதும் கையுறையை உபயோகப்படுத்த வேண்டும். பெருமாள் புரம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று சூறை காற்றாக வீசுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக மின் பாதைகளுக்கு அருகில் செல்லும் மரக் கிளைகளை மின்னோட்டத்தை நிறுத்தி அப்புறப்படுத்தி மின் தடங்கல் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும்.

    மின்கம்பங்களிலும், மின்மாற்றிகளிலும் பணிபுரியும்போது எக்காரணம் கொண்டும் செல்போனில் பேசக்கூடாது. அப்படி பேசினால் அதனால் சிந்தனை சிதறல் ஏற்படும். தங்கள் பகுதி மின் நுகர்வோர்களிடம் அந்தந்த பகுதி பணியாளர்கள் தொலைபேசி எண்களையும், மின்னகம் தொலைபேசி எண் 94987 94987 ஆகியவற்றை வழங்கிட உத்தரவிட்டார். இந்த பாதுகாப்பு வகுப்பில் பெருமாள்புரம் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    • தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
    • கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, தங்கள் அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருள் உள்ளது.

    திருப்பூர்:

    தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை கூறி வருகின்றனர்.மோசடி நபர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு ஏமாற்றும் செயலில் ஈடுபடுகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, தங்கள் அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருள் உள்ளது.தடையின்மை சான்று பெற பணம் கட்டவும் என்று சொல்லி மோசடியில் ஈடுபடலாம். நேரில் வருவதாக கூறி, போலீஸ் உதவியை உடனடியாக பொதுமக்கள் நாட வேண்டும்.

    தங்கள் துறை சார்ந்த உயர் அதிகாரி போல் சமூக வலைதளங்களில் தங்களை தொடர்பு கொண்டு, தான் அவசர வேலையாக இருப்பதாக கூறி, கிப்ட் கார்டுவாங்கி அனுப்புமாறு கேட்டு மோசடியில் ஈடுபடலாம்.ஆன்லைனில் ஆர்டர் செய்யாத உணவுகள் தங்களுக்கு வந்திருப்பதாக கூறிஅதை திருப்பி அனுப்ப தங்கள் மொபைல்போனுக்கு வந்த ஓ.டி.பி., கூறுமாறு கேட்டு மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பே லேட்டர் வசதியை பயன்படுத்தி ஆன்லைனில் தங்களது கணக்கில் மற்ற நபர்கள் பொருட்களை வாங்கிவிட்டு அந்த நிறுவனத்தால் பணம் கேட்டு தங்களுக்கு அறிக்கை வரலாம். ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களை மிக கவனமாக கையாள வேண்டும்.ஏ.டி.எம்., மற்றும் கிரெடிட் கார்டு விபரங்களை எந்த வங்கியும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை. வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது.லோன் ஆப் வாயிலாக குறைந்த வட்டிக்கு உடனடியாக பணம் பெறலாம் என விளம்பரப்படுத்தி உங்களது அனைத்து தனிப்பட்ட விபரங்களையும் பெற்று சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டக் கூடும்.

    அங்கீகாரம் இல்லாத லோன் ஆப்களில் கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும்.உங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளூடூத்தை நீங்கள் ஆப் செய்யாமல் இருக்கும்போது, அதை குற்றவாளிகள், அவர்களுக்கு சாதமாக பயன்படுத்தி, உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல் மற்றும் போட்டோக்களை திருடுகின்றனர். தேவையற்ற நேரங்களில் ப்ளூடூத் ஆப் செய்து வைத்தல் நல்லது. பொது இடங்களில் கிடைக்கும் இலவச 'வைபை' வசதியை நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களுக்கு தெரியாமல், உங்களது மொபைல் போனில் உள்ள வங்கி சம்பந்தமான தகவல்களை இணைய வழியாக திருடர்கள் திருட வாய்ப்பு உள்ளது. சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி அதன் வாயிலாக நட்பு அழைப்புகளை அனுப்பி பேசி பழகி ஏமாற்றும் நபர்களிடம், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகம் தெரியாத நட்பு வேண்டாம்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    சைபர் குற்றங்களில் பொதுமக்கள் சிக்கி பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை அழைத்து, தங்களது புகாரை பதிவு செய்யவும். கால தாமதம் இன்றி பதிவு செய்யப்படும் புகார் மீதான நடவடிக்கை விரைவானதாக இருக்கும் என்றனர்.

    சென்னை ஐ.டி. எ.எஸ்., துணை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் தனசேகர் கூறியதாவது:-

    ஸ்பார்ஸ் என்பது தேசிய அளவில் முப்படையின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு சிக்கல்கள் இன்றிஒற்றை சாளரமுறையில் ஓய்வூதியம்செல்வதற்கு உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளம்.இதில் 35 லட்சம் ஓய்வூதியதாரர்களில் 12 முதல் 13 லட்சம் பேரை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ளவர்களையும் இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தங்கள் நாமினியுடன் தற்போதேஇருவரும் இணைந்த வங்கிக்கணக்கு துவக்கிக்கொள்ள வேண்டும்.

    தற்போது அனைத்தும் டிஜிட்டல்மயம் ஆகியுள்ளதால், அதில் நடக்கும் மோசடிகளில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.ஓ.டி.பி., தகவலை, எக்காரணம் கொண்டும் செல்போன் வாயிலாக ஒருவருக்கும் தெரிவிக்கக்கூடாது. செல்போன் வாயிலாக ஒரு போதும் தரக்கூடாது என்றார்.

    • திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கல்லூரி சார்பில் தூய்மை பணி செய்யப்பட்டது.
    • வெள்ளம், புயல், தீ விபத்து, போன்ற காலங்களில் இழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 1 சார்பில் மணலியில் நடைப்பெற்று வரும் முகாமின் மூன்றாம் நாள் சிவன் கோயில் தூய்மை பணி செய்யப்பட்டது.

    அப்போது பேரிடரை எதிர் கொள்வோம் என்ற தலைப்பில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் பேசும்போது, எதிர்காலங்களில் காலநிலை மாறுபாடுகளால் பேரிடர் என்பது தவிர்க்க முடியாதததாகிவிட்டது.

    அனைவரும் பேரிடரை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

    வெள்ளம், புயல், தீ விபத்து, போன்ற காலங்களில் இழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    நம்மை மட்டுமல்ல மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும்.

    அனைவரும் பேரிடர், முதலுதவி பயிற்சிகளை பெற வேண்டும்.

    பாதிப்பு ஏற்படும் நேரங்களில் அரசு துறைகளுக்கும், காவல், தீயணைப்பு துறை, மருத்துவ துறைக்கும் தகவல் தெரிவிக்கவேண்டும்.

    ஒவ்வொருவரும் முன்கள மீட்பாளர்களாக தயாராக வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் சுபத்ரா ரவி தலைமை வகித்தார்.

    வர்த்தக சங்க தலைவர் ரவி, மகளிர் குழு செயலாளர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியை என். எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பன்னீர்செ ல்வம், பேராசிரியர் லோகநாதன் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • அண்டை மாநிலங்களிலிருந்து மருத்துவக் கழிவுகள்,கோழி கழிவுகள் போன்றவற்றை வாகனங்களில் ஏற்றி வரக்கூடாது.
    • கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் மனித உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகள், நெகிழி குப்பைகள், சாயக்கழிவுகள், கோழிக்கழிவுகள் மற்றும் மீன்கழிவுகள் போன்றவை கொட்டப்படுகிறது.

    இதனை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் லாரி, சரக்கு வாகன உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து உட்கோட்ட காவல் துணை சூப்பிரண்டுகள் மற்றும் போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் டி.எஸ்.பி.க்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளதாவது;- கேரளா உள்ளட்ட அண்டை மாநிலங்களிலிருந்து மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கோழி கழிவுகள், மீன் கழிவுகள் போன்றவற்றை வாகனங்களில் ஏற்றி வரக்கூடாது. மேலும் அந்த கழிவுகளை ஏற்றி வந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களிலோ, தனியாருக்கு சொந்தமான இடங்களிலோ கொட்டவோ, குழி தோண்டி புதைக்கவோ கூடாது.

    அவ்வாறு சட்டவிரோதமாக கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தெரிவித்தனர்.
    • மழைக்கால பிரச்சினை தொடர்பாக அலுவலகத்தில் இது சம்பந்தமான அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. தலைவர் சண்முகவடிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் மீனாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தலைவர் பேசுகையில், திருப்பத்தூர் ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கண்மாய் மற்றும் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படாத வண்ணம் மணல் மூடைகளை அடுக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மழைக்கால பிரச்சினை தொடர்பாக அலுவலகத்தில் இது சம்பந்தமான அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    தொடர்ந்து கூட்டத்தில் சாலை வசதி, மின் கம்பத்தை சரி செய்ய வேண்டும், பிராமணபட்டி அங்கன்வாடி மையத்திற்கு மின்இணைப்பு வழங்க வேண்டும், ரணசிங்கபுரம் மின்நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும், கீழநிலை, நெடுமரம், வடக்கு இளையாத்தங்குடி பள்ளிகளை மேம்படுத்த வேண்டும், ஆ. தெக்கூர் அங்கன்வாடி மையத்தில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் ராமசாமி, சகாதேவன், சுமதி, கலைமகள்ராஜீ, கலைமாமணி, பழனியப்பன் ஆகியோர் வலியுறுத்தினர். இதற்கு அரசு பொறியாளர் பதிலளித்தார்.

    வேளாண் அலுவலர் தனலட்சுமி பயிர் காப்பீடு குறித்து எடுத்துரைத்தார். முன்னதாக மேலாளர் செழியன் வரவேற்றார். மண்டல வட்டார வளர்ச்சி துணை அலுவலர் இளையராஜா நன்றி கூறினார்.

    • வெண்ணாறு ஆறுகளின் கரையோர கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்காமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
    • கால்நடைகளை குளிப்பாட்டுவதற்காகவும், மேய்ச்சலுக்காகவும் ஆற்றுப்பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம்.

    திருவையாறு:

    திருவையாறு தாசில்தார் பழனியப்பன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், ஊராட்சி ஒன்றிய் ஆணையர்கள் நந்தினி, கென்னடி, பேரூராட்சி தலைவர் கஸ்தூரி நாகராஜன், மற்றும் செயல் அலுவலர் சோமசுந்தரம் ஆகியோர் மழை, வெள்ளப் பெருக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு கூறியுருப்பதாவது,

    தற்போது கர்நாடக மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் காவிரியில் அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து தமிழக காவிரி ஆற்றில் 1,85,000 கனஅடி அளவு தண்ணீர் திறக்கப்பட்டு கரைபுரண்டு வந்துகொண்டிருக்கிறது.

    இதனால், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டாரத்தில் ஓடுகிற கொள்ளிடம், காவிரி, குடமுருட்டி, வெட்டாறு, மற்றும் வெண்ணாறு ஆகிய ஆறுகளில் அதிகளவு வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.

    எனவே, திருவையாறு பேரூராட்சி எல்லைக்குட்பட்ட ஸ்ரீராம் நகர், 15 மண்டபத்தெரு, புதுஅக்ரஹாரம், புஷ்யம ண்டபத்தெரு, திருமஞ்சனவீதி, செவ்வாய்க்கிழமைத் தெரு, தியாகராஜர் காலனி, மற்றும் அகிலாண்டபுரம் ஆகிய காவிரிக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், திருவையாறு வட்டாரத்தில் கொள்ளிடம், காவிரி, குடமுருட்டி, வெட்டாறு மற்றும் வெண்ணாறு ஆகிய ஆறுகளின் கரையோரங்களைச் சார்ந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களும் ஆற்றில் இறங்காமல் முன்னெச்ச ரிக்கையுடன் இருக்குமாறும்.

    கால்நடைகளை குளிப்பாட்டுவதற்காக ஆற்றில் இறக்க வேண்டாம் என்றும், மேய்ச்சலுக்காக கால்நடைகளைஆற்றுப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும், ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படும்போது மேட்டுப்பாங்கான இடங்களு க்கும், அரசுத்துறையினரின் வழிகாட்டுதலின்படி அருகாமையில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களுக்கும் சென்று பாதுகாத்துக் கொள்ளுமாறும், ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் நேரிட்டால் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஊராட்சி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவும் வேண்டுமாறும் கூறியுள்ளனர்.

    ×