search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Henna"

    • அனுமதியின்றி தயார் செய்யப்படும் அழகு சாதன பொருட்களில் தரம் குறைவாக இருக்கலாம்.
    • போலி மருதாணி கூம்புகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெண்கள் தற்போது அதிகளவில் மருதாணி கூம்புகளை பயன்படுத்தி வருகின்றனர். வீட்டில் நடக்கும் விசேஷங்கள் முதல் விழா காலங்களில் சிறுமிகள் முதல் பெண்கள் வரை அனைவராலும் தவிர்க்க முடியாததாக மருதாணி வைக்கும் பழக்கம் வந்துவிட்டது.

    அந்த காலத்தில் வீட்டில் மருதாணி இலையை அரைத்து மருதாணி வைத்து அலங்கரித்தனர்.

    ஆனால் தற்போது மருதாணி கூம்புகள் அறிமுகமான பிறகு விதவிதமான வகைகளில் மருதாணி கைகளில் வைக்கப்படுகிறது.600-க்கும் மேற்பட்ட மருதாணி வடிவமைப்புகள் கண்டு பிடிக்க ப்பட்டுள்ளன.

    போலியான மருதாணி கூம்பு களால் உடல்ந லத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து ள்ளனர்.***திருப்பதி, ஜன.11-

    மருதாணி( மெஹந்தி)கோன் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. உண்மையான மருதாணி இலையை அரைத்து மட்டுமே இந்த மருதாணி கோன் உற்பத்தி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    ஆனால் அதனை மீறி தெலுங்கானா மாநிலத்தில் மெஹந்தி நிறுவனம் ஒன்று போலியாக மருதாணி கோன்களை தயாரித்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள மெகதி பட்டினத்தில் உள்ள ஒரு மருதாணி கூம்பு தயாரி க்கும் தொழிற்சாலையில் போலியாக மருதாணி கூம்புகள் தயாரிப்பதாக தெலுங்கானா மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் நேற்று அந்த நிறுவனத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்கிருந்த மருதாணி கூம்புகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த மருதாணி கூம்புகள் பிக்ரமிக் அமிலம் என்ற செயற்கை சாயத்தை பயன்படுத்தி போலியாக தயாரிப்பது தெரிய வந்தது. மேலும் இந்த நிறுவனம் உரிமம் இல்லாமல் இயங்கியது கண்டு பிடிக்க பட்டது.

    அந்த நிறுவனத்தில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மருதாணி கூம்புகளை பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெலுங்கானா மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில்

    அனுமதியின்றி தயார் செய்யப்படும் அழகு சாதன பொருட்களில் தரம் குறைவாக இருக்கலாம்.

    இது போன்ற அழகு சாதன பொருட்களில் பொது சுகாதாரத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

    தற்போது பறிமுதல் செய்யப்பட்ட மருதாணி கூம்புகள் பிக்ரமிக் அமிலம் என்ற செயற்கை சாயத்தை பயன்படுத்தி தயாரித்துள்ளனர்.

    இந்த அமிலம் வெடி பொருட்கள் தயாரிப்பதற்கும் மருத்து வத்துறையில் சில மருந்துகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

    இந்த வகை மருதாணி கையில் வைப்பதால் சாப்பிடும் போது உணவில் கலந்து உடலில் கலந்து விடும்.இது உடல் நலத்தை பாதிக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    போலி மருதாணி கூம்புகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முதலில் ஹென்னாவை கலக்கி ஊறவைக்க வேண்டும்.
    • 2 மணிநேரம் முதல் 4 மணிநேரமாவது அப்படியே வைக்க வேண்டும்.

    இப்போதெல்லாம் சிறுவயதிலேயே நரைமுடி வருவது என்பது இயல்பாகி விட்டது. அது வருவதற்கு ஹெரிடிட்டி, டெஃபிஷியன்சி, நிறைய கெமிக்கல் கலந்த பொருட்களை உட்கொள்வது இந்த மாதிரி பல காரணங்களால் இளம்நரை ஏற்படுகிறது.

    இளம் நரையை மறைப்பதற்காக கெமிக்கல் ஹேர் டையை பயன்படுத்தும் போது அது நிறைய பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. ஸ்கின் இரிடேஷன், உடலில் கருப்பு தழும்புகள் ஏற்படுவது, உடல்நிலையை பாதிப்படைய செய்கிறது. அதுமட்டுமல்லாமல் நரைமுடியை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. அதனால் இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு ஹேர் டை செய்யலாம் என்று பார்க்கலாம்.

    மருதாணிபொடியும், அவுரி இலைபொடியையும் பயன்படுத்தி இயற்கையான முறையில் முடிக்கு கலரிங் செய்துகொள்ளலாம். அதற்கு முதலில் ஹென்னாவை கலக்கி ஊறவைக்க வேண்டும். அதற்கு இரும்பு பாத்திரமாக இருந்தால் வசதியாக இருக்கும். இதற்கு ஒரு இரும்பு கடாயில் சூடான ஒரு கப் தண்ணீர் ஊற்றவேண்டும். அதில் ஒரு ஸ்பூன் இன்ஸ்டண்ட் காபி பொடியை சேர்க்க வேண்டும். இதில் ஒரு அரை கப் அளவுக்கு ஹென்னா பொடியை சேர்க்க வேண்டும். இது கூடவே ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை பொடி சேர்க்க வேண்டும். கறிவேப்பிலை பொடி முடிவளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் கலரிங்கை இன்னும் கருப்பாக்கி கொடுக்கும்.

    பீட்ருட் எப்போதுமே ஒரு நல்ல நேச்சுரல் கலரிங்கை கொடுக்கும். எனவே ஒரு ஸ்பூன் பீட்ருட் பொடியை சேர்க்க வேண்டும். இது கட்டாயமல்ல, வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ள வேண்டும். பீட்ருட் பொடியை அதிகமாகவும் கலந்துவிடக்கூடாது. இந்த கலவையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி கலக்க வேண்டும். இந்த கலவையை உடனடியாக தலையில் அப்ளை செய்யக்கூடாது. ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும்.

    இந்த கலவையை மறுநாள் காலையில் எடுத்து நன்றாக கலந்துவிட்டு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்துகொள்ளவும். சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் இரண்டு சொட்டு யூக்கலிப்டிஸ் ஆயில் அல்லது டீட்ரீ ஆயில் சேர்த்துக்கொள்ளலாம். இதுவும் முடிவளர்ச்சிக்கு நல்லது.

    இந்த கலவையை எண்ணெய் இல்லாத சுத்தமான முடியில் தான் அப்ளை செய்ய வேண்டும். எண்ணெய் தேய்த்துவிட்டு அப்ளை செய்தால் கலர் ஒட்டாது. கைகளில் கலர் படியாமல் இருக்க கையுறை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தலைமுடியில் மட்டும் படுகிற மாதிரி எல்லா பகுதியிலும் தேய்க்க வேண்டும். நன்றாக எல்லா முடிகளிலும் படுகிறமாதிரி அப்ளை செய்ய வேண்டும். இந்த கலவையை முடிகளில் தேய்த்த பிறகு நல்ல கலரிங் ஆக வேண்டும் என்றால் குறைந்தது 2 மணிநேரம் முதல் 4   மணி நேரமாவது அப்படியே வைக்க வேண்டும். சைனஸ் பிரச்சினை இருந்தால் ஒரு மணிநேரம் வைத்தால் போதுமானது. 4  மணி நேரம் கழித்து நல்ல தண்ணீர் கொண்டு மட்டுமே அலசி எடுத்துக்கொள்ளவேண்டும். சோப்பு, ஷாம்பு, சீயக்காய் வகைகளைபயன்படுத்தக்கூடாது.

    தலைமுடி பிரவுன் கலரில் இருக்கும். தலைமுடி கருப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரண்டாவது கட்டமாக ஒரு பாத்திரத்தில் அரைகப் அளவுக்கு இண்டிகோ பொடியை எடுத்துக்கொள்ளவும் இதனை ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து (உப்பு கட்டாயம் சேர்க்க வேண்டும்) இண்டிகோ பொடியில் கலந்து 10 நிமிடம் மட்டுமே மூடி வைக்கவும். சூடான தண்ணீரில் மட்டும் தான் இண்டிகோ ஆக்டிவேட் ஆகும். இந்த கலவையையும் ஏற்கனவே ஹென்னா தடவி அலசிய முடியில் மறுபடியும் அப்ளை செய்ய வேண்டும்.

    இந்த இண்டிகோ கலவையை நன்றாக முடியில் தடவி ஒன்றரை மணி நேரம் முதல் 3 மணிநேரம் வரை தலையில் ஊற வைத்து வெறும் தண்ணீரில் தான் கழிவ வேண்டும்., ஷாம்பு பயன்படுத்தக்கூடாது. இரண்டும் ஒரேநாளில் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. அடுத்தடுத்த நாள் பயன்படுத்தலாம். ஆனால் இடையில் ஷாம்பு போடுவதோ, தலையில் எண்ணெய் தேய்ப்பதோ கூடாது. வெள்ளைமுடியோ, இளம் நரை பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஹேர் பேக் பயன்படுத்தி நீங்களும் பயன்பெறுங்கள்.

    • தலைமுடிக்கு ஹென்னா கண்டிஷனிங் மிகவும் நல்லது.
    • பொடுகு மறுபடியும் வராமல் தடுக்கிறது.

    மருதாணி (மெஹந்தி) என பிரபலமாக அறியப்படும் ஹென்னா என்பது இயற்கையான மூலிகை தூள் ஆகும். இது முடியின் நிறத்திற்கு மட்டுமல்ல, beauty இதன் பொதுவான முடி பராமரிப்பு திறனுக்காக பொடுகுத்தொல்லை மற்றும் தலைமுடி அரித்தல் போன்ற மற்ற முடி சம்பந்தப்பட்ட சிக்கல்களைத் தடுக்க பயன்படுத்தப்படுகிறது.

    தலைமுடிக்கு ஹென்னா கண்டிஷனிங் மிகவும் நல்லது. ஹென்னா பவுடருடன் முட்டை கலந்து தலையில் போட்டு தேய்த்து குளித்து வர முடி நன்றாக வளரும்.

    இள வயதிலேயே நரை முடி எட்டிப் பார்க்கும் போது 'டை' அடிக்க முடியாது. எட்டிப்பார்க்கும் ஒன்றிரண்டு வெள்ளை முடிகளை நீக்குவதும் கஷ்டம். இப்படிப்பட்டவர்கள், மருதாணி இலை, கையாந்துரை இலை, செம்பருத்தி இலை ஆகியவற்றை சம அளவில் கலந்து நிழலில் காய வைத்து மெஷினில் பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

    வாரம் ஒருமுறை இந்தப் பொடியை குழைத்து அரைமணி நேரம் ஊற வைத்து குளித்துவர நரைமுடி இருந்த இடம் தெரியாது. இக்கலவை மயிர்க்கால்களுக்கு பலமும் கொடுக்கும். இவற்றுடன் வேப்ப இலை கலந்தால் பொடுகு பிரச்சனையும் போய்விடும். மருதாணி குளிர்ச்சி என நினைப்பவர்கள் இரண்டு சொட்டு நீலகிரித் தைலம் தேய்த்துக் கொண்டால் சளி பிடிக்காது.

    பெரும்பாலும் ஹென்னா பயன்படுத்துவதன் மூலம் மற்ற கெமிக்கல் கண்டிஷனர்களை பயன்படுத்துவதை தவிக்கலாம். இது உங்கள் கூந்தளுக்கு ஊட்டமளிக்கவும், மென்மையாகவும் செய்து அழகூட்டுகிறது. ஹென்னாவை முடிக்கு கண்டிஷனராக பயன்படுத்துவதற்கு ஒரு எளிய வழி, கால் கப் மருதாணி பொடியை அரை கப் தயிருடன் கலந்து ஒரு மென்மையான பசையை தயாரிக்க வேண்டும். ஷாம்பு பயன்படுத்திய பின்னர் உங்கள் முடியில் இந்த கலவை தடவி 20 நிமிடங்களுக்கு அதை உலர விட்டு பின்பு தலை கழுவவும்.

    ஹென்னாவை முடியில் அடிக்கடி பயன்படுத்தும்போது, தலை பொடுகு சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கும். இது பொடுகு மறுபடியும் வராமல் தடுக்கிறது. தலை பொடுகை குணப்படுத்த, ஒரு சில வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் காலையில் அதை அரைக்கவும். இந்த கலவையில் மருதாணி மற்றும் கடுகு எண்ணெய் சேர்க்கவும். இந்த பசையைப் தலையில் தடவி 30 நிமிடங்களுக்கு அதை உலரவிட்டு, பிறகு வழக்கமான ஷாம்பூ கொண்டு முடியை கழுவவும்.

    உங்கள் நரை மூடியை மறைக்கவும், உங்கள் தலைமுடிக்கு ஒரு அழகான பழுப்பு நிற இளஞ்சாயத்தை சேர்க்கவும் ஹென்னாவை பயன்படுத்தலாம். அதற்கு 3 தேக்கரண்டி நெல்லி தூள், ஒரு கப் ஹென்னா(இதற்கு புதிதாக அரைத்த மருதாணி இலையை தான் பயன்படுத்த வேண்டும்) சேர்க்கவும். இந்த கலவையுடன் ஒரு டீஸ்பூன் காபி தூள் சேர்த்து, உறிஞ்சும் தூரிகையை பயன்படுத்தி, தலையில் இக்கரைசலை உபயோகிக்கவும். ஒரு மணி நேரத்திற்கு அதை உலர விட்டு, ஒரு லேசான ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும்.

    • பக்கத்து வீட்டிற்கு சென்று மருதாணி பறித்துவிட்டு காலதாமதமாக வீட்டிற்கு சென்றதால் மகளை தாய் கண்டித்தார்.
    • பூச்சிக்கொல்லி மருந்து குடித்த மாணவியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள மணியங்குடி கிராமத்தை சேர்ந்த, சுதாகர் என்ப வரின் 15 வயது மகள், நன்னிலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சம்பவத்தன்றுபக்க த்து வீட்டிற்கு சென்று, மருதாணி பறித்துவிட்டு, கால தாமதமாக வீட்டிற்கு சென்றதால்,மகளை சுதாக ரின் மனைவி கண்டித்த தாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த மாணவி பூச்சிக்கொ ல்லி மருந்தை குடித்து ள்ளார்உடன் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரு க்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டது ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகு றித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×