search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கல்லூரி என்.எஸ்.எஸ் சார்பில் தூய்மைபணி முகாம்
    X

    திருத்துறைப்பூண்டி தண்டலச்சேரி அறிவியல் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி சார்பில் தூய்மை பணி முகாம் நடந்தது.

    திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கல்லூரி என்.எஸ்.எஸ் சார்பில் தூய்மைபணி முகாம்

    • திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கல்லூரி சார்பில் தூய்மை பணி செய்யப்பட்டது.
    • வெள்ளம், புயல், தீ விபத்து, போன்ற காலங்களில் இழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 1 சார்பில் மணலியில் நடைப்பெற்று வரும் முகாமின் மூன்றாம் நாள் சிவன் கோயில் தூய்மை பணி செய்யப்பட்டது.

    அப்போது பேரிடரை எதிர் கொள்வோம் என்ற தலைப்பில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் பேசும்போது, எதிர்காலங்களில் காலநிலை மாறுபாடுகளால் பேரிடர் என்பது தவிர்க்க முடியாதததாகிவிட்டது.

    அனைவரும் பேரிடரை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

    வெள்ளம், புயல், தீ விபத்து, போன்ற காலங்களில் இழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    நம்மை மட்டுமல்ல மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும்.

    அனைவரும் பேரிடர், முதலுதவி பயிற்சிகளை பெற வேண்டும்.

    பாதிப்பு ஏற்படும் நேரங்களில் அரசு துறைகளுக்கும், காவல், தீயணைப்பு துறை, மருத்துவ துறைக்கும் தகவல் தெரிவிக்கவேண்டும்.

    ஒவ்வொருவரும் முன்கள மீட்பாளர்களாக தயாராக வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் சுபத்ரா ரவி தலைமை வகித்தார்.

    வர்த்தக சங்க தலைவர் ரவி, மகளிர் குழு செயலாளர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியை என். எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பன்னீர்செ ல்வம், பேராசிரியர் லோகநாதன் ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×