என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

தடையை மீறி ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 3 ஆண்டு ஜெயில்- தமிழக அரசு எச்சரிக்கை

- இணையவழி சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஏப்ரல் 10-ந் தேதி ஒப்புதல் அளித்தார்.
- மீண்டும் தவறு செய்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
சென்னை:
தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை ஒழுங்குபடுத்துதல் சட்டம் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை கடந்த மார்ச் 6-ந் தேதி தமிழக அரசுக்கு கவர்னர் திருப்பி அனுப்பினார். கடந்த மார்ச் 23-ந் தேதி சட்டப்பேரவையில் மசோதா மீண்டும் நிறை வேற்றப்பட்டு மறுநாளே கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இணையவழி சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஏப்ரல் 10-ந் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.
இந்த சட்டத்தின்படி இணைய விளையாட்டில் ஈடுபடுவோருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5,000 அபராதத்துடன் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இணைய வழி விளையாட்டுக்காக விளம்பரம் செய்வோருக்கு ஓராண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இதுபோன்ற விளையாட்டுகளை அளிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இவர்கள் மீண்டும் தவறு செய்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.