என் மலர்

  நீங்கள் தேடியது "water opening"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கர்நாடக அணைகளில் இருந்து இன்று 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
  • கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆறு வழியாக தமிழகத்தை அடைகிறது.

  மேட்டூர்:

  கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததால் கர்நாடகத்தில் உள்ள கபினி அணை மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் நீர்வரத்து பலமடங்கு அதிகரித்தது. இதனால் அந்த அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

  இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 24,286 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று திறக்கப்பட்டது. கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கடந்த 1ம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது
  • இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 600 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது

  கூடலூர்:

  பருவமழை தாமதமாகி வரும் நிலையில் முல்லை ப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி நெல்சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர் மட்டம் சீராக குறைந்து இன்று காலை நிலவரப்படி 129.75 அடியாக உள்ளது.

  சாரல் மழை மட்டும் பெய்து வருவதால் குறைந்த அளவே நீர் வரத்து உள்ளது. மழை ஏமாற்றி வருவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தி யுள்ளது. வழக்கமாக ஜூன், ஜூலை மாதத்தில் பெய்யும் பருவ மழையால் கேரளாவில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும்.

  இதனால் முல்லைப்பெரி யாறு அணை நீர் மட்டம் உயர்ந்து நீர் திறப்பும் அதிகரிக்கும். தற்போது மழை குறைந்த நிலையிலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று 500 கன அடியாக இருந்த நீர் திறப்பு இன்று காலை முதல் 600 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பாசனத்துக்கு 500 கன அடியும், குடிநீருக்காக 100 கன அடியுமாக பிரிக்கப்பட்டுள்ளது.

  வைகை அணையின் நீர் மட்டம் 54.99 அடியாக குறைந்துள்ளது. 356 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.40 அடியாக உள்ளது. 76 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 84.45 அடியாக உள்ளது. 9 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

  பெரியாறு 4.8, தேக்கடி 4.4, சோத்துப்பாறை 2, பெரியாறு 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கல்லணையில் இருந்து பாசனத்துக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் பிரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
  • கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே மே மாதத்தில் அணை திறக்கப்பட்டது. அதாவது கடந்த மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

  இந்த தண்ணீர் கல்லணையை 27-ந்தேதி வந்தடைந்ததையடுத்து கல்லணையில் இருந்து பாசனத்துக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் பிரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

  ஆனால், கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கல்லணை கால்வாயில் மறு சீரமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு பாலப்பணிகள் நடைபெற்றதால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 12 நாட்கள் ஆகியும், கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் நாற்று கூட விடாமல் தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

  இந்தநிலையில் கல்லணை திறக்கப்பட்டு 9 நாட்களுக்குப்பிறகு நேற்று கல்லணை கால்வயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணையிலிருந்து கல்லணை கால்வாயில் நேற்று காலை முதல் வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

  பின்னர், மாலையில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 250 கன அடி வீதமாக உயர்த்தப்பட்டது. உயர்த்தப்படும் மேலும் கல்லணைக் கால்வாயில் விடப்படும் தண்ணீர் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என நீர் வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

  கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை முதல் ஏரிக்கு 190 கன அடி அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
  ஸ்ரீமுஷ்ணம்:

  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது.

  இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். தற்போது ஏரியில் 45.45 அடியில் தண்ணீர் உள்ளது. சென்னைக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 41 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.  இதற்கிடையே கோடையின் காரணமாக சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வீராணம் ஏரியில் போதிய அளவில் தண்ணீரை சேமித்து வைத்து வருகிறது.

  வீராணம் ஏரியில் 39 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இதன் காரணமாக நீர்மட்டம் அதற்கு கீழே குறையாமல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

  நீர்மட்டம் தற்போது வேகமாக குறைந்து வருவதால், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை ஏரிக்கு 190 கன அடி அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

  இதனால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து ஏரி நிரம்பும் வரையில் தண்ணீர் வரத்து இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
  கூடலூர்:

  வடகிழக்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் முல்லைப் பெரியாறு உள்பட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி 170 கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது பெரியாறு அணையின் நீர் மட்டம் 113.95 அடியாக குறைந்துள்ளது.

  மேலும் நீர் பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்து விட்டதால் அணைக்கு 32 கன அடி நீரே வருகிறது. இதனால் தண்ணீரை சேமிக்கும் பொருட்டு இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

  இந்த நீர் தேனி மாவட்ட குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் திறப்பு குறைக்கப் பட்டதால் உத்தமபாளையம் பகுதியில் முல்லைப் பெரியாறு வறண்டு காணப்படுகிறது.

  வைகை அணை நீர் மட்டம் 45.12 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 34.05 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 96.26 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிருஷ்ணா நதி கால்வாயில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.
  ஊத்துக்கோட்டை:

  தமிழகத்தில் கடந்த ஆண்டு எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இதனால் ஏரி, குளங்களில் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து உள்ளது.

  இதே போல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளிலும் நீர் இருப்பு குறைந்து வேகமாக வறண்டு வருகின்றன.

  இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஆனால் தற்போது வெறும் 949 மி.கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு இன்னும் ஒரு மாதத்துக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியும்.

  இதையடுத்து மாற்று வழியில் தண்ணீரை பெறும் நடவடிக்கையை குடிநீர் வாரிய அதிகாரிகள் செயல்படுத்தி வருகிறார்கள்.

  கடந்த மாதம் 9-ந் தேதி ஜதராபாத்தில் நடந்த கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக பொதுப் பணித்துறையை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

  இதே போல் தண்ணீர் இன்றி கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்படி ஆந்திர விவசாயிகளும், ஆந்திர அரசுக்குக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

  இந்த கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு நேற்று காலை கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட்டது. முதலில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்தவிடப்பட்டது. இந்த தண்ணீர் கிருஷ்ணா கால்வாயில் பூண்டி ஏரியை நோக்கி பாய்ந்து வருகிறது.

  இன்று காலை 6 மணிக்கு கூடுதலாக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

  தற்போது கிருஷ்ணா நதி கால்வாயில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

  ஆந்திர விவசாயிகள் சாகுபடி செய்ய தண்ணீர் எடுத்த பின்னர் தமிழக எல்லைக்கு கிருஷ்ணா தண்ணீர் வர உள்ளது. கூடுதலாக திறக்கப்பட்டு உள்ளதால் இன்னும் 3 நாட்களில் தமிழக எல்லையை கிருஷ்ணா தண்ணீர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்லும்.

  கிருஷ்ணா தண்ணீர் திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விவசாய தேவைக்கு தண்ணீர் தேவைப்படாத நிலை இருப்பதால் வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. #VeeranamLake
  ஸ்ரீ முஷ்ணம்:

  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடி ஆகும்.

  இந்த ஏரிமூலம் அந்த பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் வீராணம் ஏரி பூர்த்திசெய்கிறது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது.

  வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு தண்ணீர் தேவைப்படும்போது மீண்டும் வடவாறு வழியாக தண்ணீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

  வீராணம் ஏரி பாசன பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. விவசாய தேவைக்கு தண்ணீர் தேவைப்படாத நிலை இருக்கிறது. இதனால் தற்போது வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

  வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக தொடர்ந்து 74 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. #VeeranamLake
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் லேசான மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #MetturDam
  சேலம்:

  கடந்த 23-ந் தேதி 71 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்து 131 கன அடியானது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 254 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

  அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 1,250 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

  நேற்று 71.70 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 71.71 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
   
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாத்தனூர் அணையில் 2-ம் போக சாகுபாடிக்கு தண்ணீர் இன்று முதல் 40 நாட்களுக்கு 350 கன அடி வீதம் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 10 ஆயிரத்து 43 ஏக்கர் 2-ம் போக சாகுபடி பாசன வசதி பெறும். #SathanurDam
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணை யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணை 119 அடி கொண்டதாகும்.

  தற்போது அணையில் 96.20 அடி தண்ணீர் உள்ளது. அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய்களில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. கலெக்டர் கந்தசாமி திறந்து வைத்து மலர்தூவி தண்ணீரை வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, செங்கம் எம்.எல்.ஏ. மு.பெ.கிரி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், சாத்தனூர் ஆணை உதவி செயற்பொறியாளர்கள் அறிவழகன், செல்வராஜீ மற்றும் மதுசூதனன், ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  இன்று முதல் 40 நாட்களுக்கு 350 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

  இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு தாலுகா திருவண்ணாமலை தாலுகாவில் உள்ள 34 ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படும் 2 ஆயிரத்து 230 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

  விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் தாலுகா, சங்கராபுரம் தாலுகாவில் 54 ஏரிகள் பாசன வசதிபெறும். இதன் மூலம் 10 ஆயிரத்து 43 ஏக்கர் 2-ம் போக சாகுபடி பாசன வசதி பெறும்.

  பாசன நீரை சிக்கனமாகவும் துறை பணியாளர்களின் அறிவுரைப்படியும் சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு பாசன ஆயக்கட்டுதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  அறிவிக்கப்பட்ட தேதிக்கு மேலும் எக்காரணத்தைக் கொண்டும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் தேதியை நீட்டிக்கப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.  #SathanurDam

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 1,250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 1000 கன அடியாக குறைக்கப்பட்டது. #MetturDam
  சேலம்:

  காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 69 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 70 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

  அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 1,250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 1000 கன அடியாக குறைக்கப்பட்டது.

  அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

  நேற்று 71.91 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 71.80 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 1,250 கன அடியாக குறைக்கப்பட்டது. #MetturDam
  மேட்டூர்:

  காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

  18-ந்தேதி 134 கன அடியாக இருந்த நீர்வரத்து 19-ந்தேதி 72 கன அடியாக குறைந்தது. நேற்று 81 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 121 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

  அணையில் இருந்து பாசனத்திற்காக 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 1,250 கன அடியாக குறைக்கப்பட்டது.

  அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

  நேற்று 72.18 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 72.04 அடியாக சரிந்தது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.  #MetturDam
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin