search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க சமாதான கூட்டத்தில் முடிவு
    X

    15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க சமாதான கூட்டத்தில் முடிவு

    • சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    சிவகங்கை

    மானாமதுரை அருகே உள்ள அன்னியனேந்தல் என்ற இடத்தில் மானாமதுரை பிரதான கண்மாய்க்கு ரீச் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மூலம் மானாமதுரை, கால்பிரவு, கிருங்காங்கோட்டை, கீழமேல்குடி, நாட்டர் கால்வாய் மூலம் 16 கிராமங்கள் பயன்பெறுவதற்காக வைகை தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    கடந்த 15-ந் தேதி பொதுப்பணித் துறை அதிகாரிகள் ரீச் கால்வாய் அடைப்பை ஜே.சி.பி. மூலம் அகற்றும்போது மிளகனூர் கிராமத்தினர் பணிகளை நிறுத்த கூறியதால் அதிகாரிகளும் நிறுத்தினர். பின்னர் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகு நேற்று காலை மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் மானாமதுரை கண்மாய்க்கு செல்லும் ரீச் கால்வாய் அடைப்பை நீக்குவதற்கு வந்தனர். மிளகனூர் கிராமத்தினர் அடைப்பை உடைக்கக்கூடாது என்று மீண்டும் கூறியதால் அதிகாரிகள் இதுகுறித்து மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் சமாதானம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

    கோட்டாட்சியர் சுகிதா, தாசில்தார் சாந்தி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மோகன் குமார், செந்தில் குமார், பூமிநாதன், மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதலில் மிளகனூர் கிராமத்தினரிடம் அதிகாரிகள் பேசினர். பின்னர் மானாமதுரை, கீழமேல்குடி, கால்பிரிவு, கிருங்காக்கோட்டை உட்பட கிராமத்தின் விவசாயிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் அடுத்த மாதம் டிசம்பர் 5-ந் தேதி மேற்கண்ட கிராமங்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதிகாரிகளின் நடவடிக்கைகளால் பல ஆண்டுகள் தண்ணீர் இல்லாமால் இருந்த விவசாய நிலங்கள் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×