search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
    X

    அணை நீர் திறப்பு விழாவில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மானிய விலையில் குளிர்சாதன பெட்டி பொருத்திய இருசக்கர வாகனங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். அருகில் கலெக்டர் மேகநாதரெட்டி உள்ளார்.

    பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

    • வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
    • இதனை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தி லுள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு, அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்று பாசனத்திற்காக தண்ணீரை மலர் தூவி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பாசனத்திற்காக பிளவக்கல் பெரியாறு அணையின் மூலம் நேற்று முதல் 9 நாட்களுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதமும், நேரடி கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 3 கனஅடி வீதம் 28.2.2023 வரையிலும் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

    பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் திறப்பினால் மீதமுள்ள கண்மா ய்களுக்கு அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து பாசனத்திற்காகவும், பெரியாறு பிரதான கால்வாய் மூலம் நேரடி பாசனத்திற்காகவும் தண்ணீர் வழங்கப்பட உள்ளது.

    இந்த தண்ணீர் திறப்பினால் பிளவக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 40 கண்மாய்களின் 7219 ஏக்கர் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதான கால்வாய் நேரடி பாசனத்தின் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடைய உள்ளன. இதன் மூலம் கொடிக்குளம், கான்சாபுரம், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, வத்திரா யிருப்பு, கூமாபட்டி, சுந்தர பாண்டியம், நத்தம்பட்டி, மூவரைவென்றான், மங்கலம், செம்மாண்டி கரிசல்குளம், பாட்டக்குளம் சல்லிபட்டி, விழுப்பனூர், தச்சகுடி, கிருஷ்ணபேரி, நெடுங்குளம், குன்னூர் ஆகிய 17 வருவாய் கிராமங்கள் பயன்பெறும்.

    இதேபோல் அணை நீர் இருப்பினை கருத்தில் கொண்டு பாசன பருவ காலம் வரை தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கப்படும். விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×