search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delta Irrigation"

    • அணைக்கு தண்ணீர்வரத்து குறைந்து காணப்படுவதாலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    • நீர்வரத்தை விட தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இன்றுடன் 2 மாதம் ஆகிறது.

    டெல்டா பாசனத்துக்கு தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதமாக தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதாலும், அணைக்கு தண்ணீர்வரத்து குறைந்து காணப்படுவதாலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.54 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 140 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    நீர்வரத்தை விட தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.எனவே கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே குறுவை சாகுபடி முழுமை பெறும்.

    • காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தண்ணீரை திறந்து வைத்தார்.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் 17-வது நாளாக இன்றும் நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக நீடிக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 176 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 126 கனஅடியாக சரிந்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தண்ணீரை திறந்து வைத்தார். முதலில் 3 ஆயிரம் கனஅடி வீதம் திறந்துவிடப்பட்ட தண்ணீர், அன்று இரவு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    நேற்று மதியம் வரை விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது, காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, நேற்று மதியம் முதல், அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    தண்ணீர் வரத்தை காட்டிலும், பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 94.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி 93.32 அடியாக சரிந்து உள்ளது.

    • மாயனூரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி முக்கொம்பை நோக்கி வந்தது.
    • மேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

    திருச்சி:

    காவிரி டெல்டா சாகுபடிக்காக கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவிட்டார்.

    முன்னதாக திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற பாசன வாய்க் கால்கள் தூர்வாரும் பணியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடைமடை வரை தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்த படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு தற்போது 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் சேலம் மாவட்டத்தை கடந்து நாமக்கல், ஈரோடு, ஜேடர்பாளையம், நொய்யல், கரூர், வழியாக நேற்று மதியம் கரூர் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. அப்போது 7 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே முழுவதுமாக முக்கொம்புக்கு திறந்துவிடப்பட்டது.

    அங்குள்ள பாசன வாய்க்கால்களான கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் மாயனூரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி முக்கொம்பை நோக்கி வந்தது. மாலையில் பெட்டவாய்த்தலைக்கு வந்து அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக் கொம்புக்கு நேற்று இரவு சரியாக 8.30 மணியளவில் வந்தடைந்தது.

    அதன்பிறகு முக்கொம்பில் இருந்து அந்த தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விடப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து திறக்கப்பட்ட தண்ணீரில் அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் பூக்களை தூவினர்.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி முக்கொம்பு அணைக்கு விநாடிக்கு 1,900 கனஅடி நீர் மட்டுமே வந்தது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போதைய நிலையில் முக்கொம்புக்கு 1,900 கனஅடி நீர் வருகிறது. ஒவ்வொரு மணி நேரமும் நீர்வரத்து மாறுபடும். அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் முழுவதுமாக நமக்கு வந்தடையும். தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கல்லணையை இன்று மதியம் சென்றடையும் என்றார். அங்கிருந்து நாளை அமைச்சர்கள் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார்கள்.

    கல்லணையில் திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை வரை சென்று சேரும். மேட்டூர் அணையில் இருந்து தற்போது திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர், புதுக் கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சாகுபடி நடைபெற உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

    • காவிரி ஆறு தமிழக மக்களின் தாகத்தை தீர்த்து, உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமையப்பெற்றது மேட்டூர் அணை.
    • கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்க கூடும்.

    காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் நம்பிக்கையாக திகழ்வது மேட்டூர் அணை. கர்நாடக மாநில குடகு பகுதியில் தொடங்கும் காவிரி ஆறு தமிழக மக்களின் தாகத்தை தீர்த்து, உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமையப்பெற்றது மேட்டூர் அணை.

    மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை வளப்படுத்தி தமிழக மக்களின் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள மக்களின் அரிசி தேவையை பூர்த்தி செய்ய வழிவகுக்கும் ஒரு அணை யாக அமைந்து ள்ளது.

    வழக்க மாக காவேரி டெல்டா பாசன பகுதிக்கு ஜூன் 12 தண்ணீர் திறந்து விடப்படும்.இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் முன் எப்போதும் இல்லாத வகையில் மே மாதம் 24 ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் முழு மூச்சாக குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் பருவ மழை தொடங்குவதற்குள் குறுவை அறுவடை செய்வதற்கு ஏதுவாக பணிகளை முடுக்கிவிட்டு செய்து கொண்டுள்ளனர்.இதற்கிடையே மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு கடந்த சில நாட்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 109 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

    மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டால் திறக்கப்படும் தண்ணீர் அப்படியே கொள்ளிடத்தில் திருப்பி விடக் கூடிய வாய்ப்பு உள்ளது. கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்க கூடும்.மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் திருச்சி, தஞ்சை மாவட்டங்களை பயன்பெறும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால, மற்றும் உயர் கொண்டான் நீட்டிப்பு, புள்ளம்பாடி கா ல்வா ய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு அதனோடு இணைந்த ஏரிகளை நிரப்ப நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    தற்பொழுது டெல்டா மாவட்டங்களில் பருவநிலை சீராக இருக்கும் நிலையில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் உய்யக்கொண்டா–ன்நீட்டிப்பு வாய்களில் தண்ணீர் திறந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீராக செயல்பட்டால் இந்த பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்பி தண்ணீரை சேமிக்க வழி ஏற்படும்.எனவே பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையினர் விரைவாக செயல்பட்டு மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக திறக்கப்படும் தண்ணீரை வீணாக்காமல் ஏரிகளை நிரப்ப ஆவனசெய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தண்ணீரை திறந்துவிட்டார். #Metturdam #Cauvery #EdappadiPalaniswami
    மேட்டூர்:

    தமிழகத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை தவறியதாலும், மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததாலும் குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டது.

    கால தாமதமாக அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பயிர்களும் கருகியது. இந்த ஆண்டும் கடந்த மாதம் 12-ந் தேதி குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க முடியவில்லை.

    இந்த சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு, ஒகேனக்கல்லை கடந்து நேராக மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து வருகிறது.

    நேற்று அணைக்கு 1 லட்சத்து 4 ஆயிரத்து 436 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 1 லட்சத்து ஆயிரத்து 227 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 109 அடியாக உயர்ந்து உள்ளது. அணை நிரம்ப இன்னும் 11 அடி தான் தேவைப்படுகிறது.

    பொதுவாக நீர்மட்டம் 90 அடியாக இருக்கும்போது நீர்வரத்தும் சீராக இருந்தால் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது 109 அடி தண்ணீர் இருப்பதால் அணையில் இருந்து 19-ந் தேதி (இன்று) பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.



    இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார்.

    இந்த தண்ணீர் அணையின் மதகு வழியாக சீறிப் பாய்ந்து வெளியேறியது. முதலில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 20 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

    முதலில் அணையின் வலதுகரை பகுதியில் மேல்மட்ட மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர்மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியும் தொடங்கி உள்ளது.

    மேட்டூர் அணை கட்டி 84 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக முதல்-அமைச்சர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, அன்பழகன், கருப்பண்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சரோஜா, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகரன், சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாலும் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி டெல்டா மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளுக்கு சென்று வந்த அனைத்து வழிகளின் கதவுகளும் பூட்டப்பட்டன. பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் உத்தரவின்றி கதவுகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



    மேட்டூர் அணையில் தண்ணீர் கடல்போல் காட்சி அளிப்பதால் அதை பார்க்க ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டு வருகின்றனர். அவர்கள் மேட்டூர் அணை பகுதிக்கு செல்லாமல் இருக்க போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery #EdappadiPalaniswami
    மேட்டூர் அணைக்கு இன்று 32 ஆயிரத்து 284 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    காவிரியின் குறுக்கே அமைந்துள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.

    84 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று முழு கொள்ளவை எட்டி நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இன்று 38 ஆயிரத்து 667 கன அடி திறந்து விடப்படுகிறது.

    124 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 115.2 அடியாக உள்ளது. இன்று தண்ணீர் வரத்து 35 ஆயிரத்து 698 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 3658 கனஅடி உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஹேரங்கி அணைக்கு இன்று காலை 14 ஆயிரத்து 973 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 11 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல ஹேமாவதி அணைக்கு 20 ஆயிரத்து 535 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு செல்கிறது.

    கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட 42 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் தமிழகத்தை நோக்கி வேகமாக வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதையும், அருவிகளில் தண்ணீர் கொட்டுவதையும் சுற்றுலா பயணிகள் கரையில் நின்று வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று 14 ஆயிரத்து 434 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 32 ஆயிரத்து 284 கன அடியாக அதிகரித்தது.


    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து நீர்மட்டம் 68.42 அடியாக அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாளைக்குள் 70 அடியை தொட்டு விடும்.

    மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தால் அணையின் நீர்மட்டம் தினமும் 1அடி அதிகரிக்கும். தற்போது 32ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் தினமும் 3அடி வீதம் உயர வாய்ப்பு உள்ளது.

    கிருஷ்ண ராஜசாகர் அணை நீர்மட்டம் 115 அடியை தாண்டி உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 40ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்னும் ஒரு வாரத்தில் அந்த அணையும் நிரம்பி விடும்.

    அதன்பின்னர் அந்த அணையில் இருந்தும் தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படும். தென்மேற்கு பருவமழை காலம் இன்னும் 2 மாதம் உள்ளது. இந்த 2 மாதங்களில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் தமிழகத்திற்கு தொடர்ச்சியாக வரும்.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் இம்மாத இறுதிக்குள் காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும்போது, அணை திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி மிகவும் தாமதமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது நீர்மட்டம் 89 அடியாக இருந்தது.

    ஆனால் அதன்பிறகு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கடந்த ஆண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் 100அடியைக்கூட எட்டமுடியாமல் போய் விட்டது. இதன் காரணமாக டெல்டா பாசனம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 21.75 அடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இன்று 68.42 அடியாக உள்ளது. சென்ற ஆண்டை விட தற்போது அணை நீர்மட்டம் அதிகமாக இருப்பதாலும், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாலும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #MetturDam
    ×