search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு- வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
    X

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு- வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

    • அணைக்கு தண்ணீர்வரத்து குறைந்து காணப்படுவதாலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    • நீர்வரத்தை விட தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இன்றுடன் 2 மாதம் ஆகிறது.

    டெல்டா பாசனத்துக்கு தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதமாக தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதாலும், அணைக்கு தண்ணீர்வரத்து குறைந்து காணப்படுவதாலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.54 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 140 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    நீர்வரத்தை விட தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.எனவே கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே குறுவை சாகுபடி முழுமை பெறும்.

    Next Story
    ×