search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vanathi Srinivasan"

    • பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்து கொள்வதாக அறிவித்துள்ள முடிவு குறித்து தேசிய தலைமை தான் கருத்து கூறும்.
    • அ.தி.மு.கவினர் கூறிய கருத்துக்களும், அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை.

    கோவை:

    சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    இதனை அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினார். இந்த நிலையில் கோவையில் நடைபெற்று வரும் பாதயாத்திரை பங்கேற்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர், இந்த விவகாரம் குறித்து கட்சியின் தேசிய தலைமை கருத்து தெரிவிக்கும் என கூறி விட்டு சென்றார்.

    இதுகுறித்து பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்து கொள்வதாக அறிவித்துள்ள முடிவு குறித்து தேசிய தலைமை தான் கருத்து கூறும்.

    தேசிய தலைமை அறிவிக்கும் வரை, நாங்கள் எந்தவித கருத்தையும் கூற முடியாது. இதுகுறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தல் தருவார்கள். அப்போது எங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறோம்.

    அ.தி.மு.கவினர் கூறிய கருத்துக்களும், அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரதமருக்கு பா.ஜனதா அலுவலகத்தில் பிரமாண்ட வரவேற்பு
    • காலில் விழுந்தபோது, அவ்வாறு விழக்கூடாது என கண்டிப்பு

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும், அனைத்து கட்சிகள் உறுப்பினர்களுடன் ஏகபோக ஆதரவுடன் நிறைவேறியது.

    இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டதற்கு, பிரதமர் மோடியை அனைவரும் பாராட்டு வருகின்றனர். நேற்று பாராளுமன்ற பெண் எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி போட்டோ எடுத்துக் கொண்டார்.

    இன்று காலை டெல்லி பா.ஜனதா தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தாார். அப்போது, பா.ஜனதா மகளிர் அணி சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை வாழ்த்தி குரல் எழுப்பினர்.

    அப்போது தமிழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மோடி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத பிரதமர் மோடி சட்டென பின் நகர்ந்தார். அத்துடன் நோ... நோ... காலில் விழக்கூடாது என செல்லமாக கடிந்து கொண்டார்.

    வானதி சீனிவாசன் பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணி தலைவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

    • ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்தனி சித்தாந்தம், கொள்கை இருக்கும்.
    • கூட்டணிக்காக மற்றொரு கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.

    கோவை:

    பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டணி குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும். கூட்டணி பற்றி எங்களது கருத்துகளை கட்சி மேலிடத்திற்கு சொல்வோம்.

    ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்தனி சித்தாந்தம், கொள்கை இருக்கும். கூட்டணிக்காக மற்றொரு கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் தற்போது கூட்டணிக்குள் இருக்கும் சலசலப்பு சரி செய்யப்படும்.

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை எல்லா இடத்திலும் சிறப்பாக நடக்கிறது. அனைத்து இடங்களிலும் மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, "எந்த தலைவர் சிலையாக இருந்தாலும் அவமதிப்பதை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளாது. அவமதிப்பதை பா.ஜ.க. ஒரு போதும் ஆதரிக்காது என்றார்.

    • சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
    • அரசியல் ரீதியாக சாதிய குழுக்களாக மக்களை தி.மு.க. பல காலமாக பிரித்தாளுகிறது.

    சென்னை:

    சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது பேச்சுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அகில இந்திய பா.ஜனதா மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். இந்த நாட்டில் சனாதன தர்மம் என்பது யாரை குறிக்கிறது. அது இந்து மதத்தை தானே குறிக்கிறது. சனாதன தர்மம் என்பது வாழ்வியல் நெறி.

    தீண்டாமை ஒழிப்பு, சமத்துவம் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏன்? மற்ற மதங்களில் தீண்டாமை இல்லையா? மூட நம்பிக்கை இல்லையா? சமத்துவம்தான் நிலவுகிறதா? ஒரு குறிப்பிட்ட மதத்தில் பெண்கள் போதகராக வர முடியாது என்பது தெரியுமா? இன்னொரு மதத்தில் பெண்கள் ஆண்களை போல் வழிபாடு கூட நடத்த முடியாது என்பது தெரியுமா?

    மூட நம்பிக்கை, தீண்டாமை ஒழிப்பு என்று மாநாடு நடத்துவதாக இருந்தால் அந்த மதங்களின் பெயரையும் வைத்து நடத்த வேண்டியது தானே. அந்த மதங்களிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று பேசலாமே.

    இந்து மதத்தில் சாதிய பாகுபாடு இருப்பதாக மிகைப்படுத்துகிறீர்களே மற்ற மதங்களில் சாதிக்கு ஒரு வழிபாட்டு தலம், மொழிக்கு ஒரு வழிபாட்டு தலம் இருக்கிறதே.

    அரசியல் ரீதியாக சாதிய குழுக்களாக மக்களை தி.மு.க. பல காலமாக பிரித்தாளுகிறது. இந்து மதத்தை பழித்தும் சிறுபான்மையினரை புகழ்ந்தும் பேசுவதால் சிறுபான்மையினர் வாக்குகளை பெற முடியும் என்று கருதுகிறார்கள். ஒரு சில தொகுதிகளில் சிறுபான்மை வாக்குகளை ஒருங்கிணைத்து வெற்றி பெறும் சூழ்நிலையை உருவாக்குகிறார்கள்.

    அமைச்சர் உதயநிதி தன் மனைவி கிறிஸ்தவர் என்றும் கிறிஸ்தவர் என்பதில் தான் பெருமைப்படுவதாகவும் கூறினார். அந்த மதம் சார்ந்த விழாக்களில் கலந்துகொண்டு உங்களால்தான் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று பகிரங்கமாகவே பேசினார்.

    சனாதன இந்து மதத்தை அழிக்கவும், இந்து மதத்துக்கு எதிராகவும் தி.மு.க. தொடர்ந்து செயல்படுவதாக நாங்கள் கூறி வருவதை உதயநிதி நிரூபித்து இருக்கிறார்.

    சனாதன தர்மம் என்ற வாழ்வியல் நெறியை சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானதாக கட்டமைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். அந்த முயற்சி ஒரு போதும் பலிக்காது.

    சனாதனத்தை ஒழிக்கப் போவதாக இன்று புறப்பட்டு இருக்கும் உதயநிதி ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் தகப்பனார், தாத்தா காலத்தில் கூட உங்கள் வீட்டு பெண்கள் கோவிலுக்கு செல்வதை தடுக்க முடியவில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையை கூட புறக்கணிக்க முடிய வில்லை.

    இந்து மதத்தினரை மற்ற மதத்துக்கு மாற்ற உதயநிதி கையாளும் யுக்தியாகவே பார்க்கிறேன். சாதி, மதம், இனம் பார்க்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்து அமைச்சர் ஆனவர் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராகவும், நம்பிக்கைக்கு எதிராகவும் செயல்படுவதை அனுமதிக்க முடியாது.

    இந்து மதத்தை அழிக்க நீங்கள் யார்? உங்களுக்கு அந்த உரிமையை தந்தது யார்? இந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க. இந்துக்களுக்கு எதிரான ஆட்சி தி.மு.க. ஆட்சி என்பதை எல்லோரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். மத ரீதியாக மக்களை பிரித்து வைத்து ஆதாயம் தேட முயற்சிக்கும் தி.மு.க.வின் முகமூடியை மக்கள் கிழித்து எறிவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைவரிடமும் கருத்து கேட்டு மத்திய அரசு முடிவு செய்யும்.
    • பா.ஜ.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது.

    திருச்சி:

    பா.ஜ.க. மாநில மகளிர் அணி செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. இதில் பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து பாஜகவின் மகளிர் அணி சார்பில் பல்வேறு பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கிறோம்.

    இதில் மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி வருகின்றனர்.

    இதேபோன்று மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை சந்தித்து இந்த திட்டத்தின் பயன்களை அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்து கூற இருக்கிறோம்.

    மேலும் பயனடைந்த பயனாளிகளுடன் செல்பி எடுத்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த இருக்கிறோம். பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் வருடம் தோறும் ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பை வழங்கி உள்ளார்.

    தேர்தல் வாக்குறுதியில் கூறியதை பிரதமர் மோடி ஏழை மக்களுக்காக செய்துள்ளார். 200 ரூபாய் கேஸ் விலையை குறைத்து இருப்பது அரசியலுக்காக அல்ல. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கியாஸ் சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைப்பேன் என்றுகூறிவிட்டு இதுவரை குறைக்கவில்லை.

    அவர்கள் மத்திய அரசு கேஸ் விலையை குறைக்க வேண்டும் என்று கூறுவதற்கு தகுதி கிடையாது. ஐ.என்.டி.ஏ. கூட்டணியை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    அவர்கள் வெற்றி பெறவும் முடியாது. எத்தனை பேர் சேர்ந்தாலும் ஒன்றும் சாதிக்கவும் முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைவரிடமும் கருத்து கேட்டு மத்திய அரசு முடிவு செய்யும். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். பா.ஜ.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.
    • ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது.

    கோவை:

    கோவை பீளமேட்டில் நடந்த ஓணம் விழாவில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

    அப்போது அவர் அங்குள்ள மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மலையாள சகோதர, சகோதரிகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். தமிழக முதலமைச்சர் கூட மலையாளத்தில் வாழ்த்து சொல்லி இருக்கிறார். அதுபோல, தீபாவளிக்கும் முதலமைச்சர் வாழ்த்து கூறினால் அவர் அனைவருக்குமான முதலமைச்சராக செயல்படுவார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கும்.

    ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.

    கோவை மாநகராட்சி மேயர் மற்றும் குடும்பத்தினர் மீது இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அரசின் முதன்மையான பதவியில் இருப்பவரின் குடும்பத்தின் மீது இது போன்ற புகார்கள் வருகிறபோது, மாநில அரசு இதனை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வருகிற போது எல்லாம் மக்களை மிரட்டுவது, சட்டத்தை தங்களுக்கு சாதமாக மாற்றுவது சர்வசாதாரணமாகி விட்டது. கோவை மேயர் குடும்பத்தினர் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது. ஆதாரங்கள், சாட்சியங்கள் இருப்பதை வைத்து மத்திய அரசின் துறைகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு கட்சி பாகுபாடு பார்ப்பது கிடையாது. ஆதாரத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நீட் தேர்வையும் பிரித்தாளும் அரசியல் ஆயுதமாக தி.மு.க பயன்படுத்தி வருகிறது.
    • இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் மாணவர்களைத்தான் பலிகடா ஆக்கினர்.

    கோவை.

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. 2017 முதல் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் நீட் தேர்வு நடந்து வருகிறது.

    ஆனாலும், இந்தி வெறுப்பு, திராவிட இனவாதம் போல, நீட் தேர்வையும் பிரித்தாளும் அரசியல் ஆயுதமாக தி.மு.க பயன்படுத்தி வருகிறது.

    2021ல் நடந்த தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்து முதல் கையெழுத்திடுவோம். அதற்கான ரகசியம் எனக்கு தெரியும் என தெரிவித்தனர்.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வை, உச்ச நீதிமன்ற உத்தரவில்லாமல் ரத்து செய்ய முடியாது என்பது தெரிந்தும் பொய்யான வாக்குறுதி அளித்தனர். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று நீட்ைட ரத்து செய்வோம் என கூறி மக்களையும், மாணவர்களை ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக மாணவர்களிடம் நீட் நடக்குமா, நடக்காத என்ற குழப்ப மனநிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும் போது நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும்" என முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அப்படியெனில், 2021-ல் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது அரசியல் மாற்றம் இல்லையா?

    2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வேண்டும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வேண்டும் என்பதெல்லாம் அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினுக்கும், அவரது மகன் உதயநிதிக்கும் தெரியாதா? "திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம். அதன் ரகசியம் எனக்கு தெரியும்" என்று உதயநிதி சொன்னதெல்லாம் மாணவர்களை, மக்களை ஏமாற்றும் நாடகமா?

    நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும்" என்று அமைச்சர் உதயநிதி கூறியிருக்கிறார். இதிலிருந்து நீட் தேர்வை அரசியலாக்கி குளிர்காய நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது.

    இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் மாணவர்களைத்தான் பலிகடா ஆக்கினர். இப்போதும் அதுதான் நடக்கிறது. ஆனால் இந்த முறை தமிழக மாணவர்களும், தமிழக மக்களும் ஏமாற மாட்டார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • திருநெல்வேலியில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழாவில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டார்.
    • கலைஞரின் திட்டமில்லாமல் தமிழகத்தில் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

    புகழ்பெற்ற பெரிய பதவிகளில் இருப்பவர்களை பார்த்து சில நேரங்களில் கேட்பதுண்டு. இந்த பதவிக்கு நீங்கள் வந்திருக்காவிட்டால் என்னவாக ஆகி இருப்பீர்கள் என்று. அதற்கு அவர்கள் ஏதாவது ஒரு பதிலை சொல்ல கேட்டிருப்போம். தற்போது அதில் இருந்து வித்தியாசமாக ஒரு விசயத்தை ஆ.ராசா கணித்து உள்ளார். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தேசிய பா.ஜனதா மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் இந்த பதவிக்கு எப்படி வந்தார்கள். இந்த பதவிக்கு வந்திருக்காவிட்டால் என்னவாக இருந்திருப்பார்கள் என்பதுதான் அவரது கணிப்பு.

    திருநெல்வேலியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசும்போது கூறியதாவது:-

    கலைஞரின் திட்டமில்லாமல் தமிழகத்தில் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கலைஞரின் பேனா முனை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் கவுண்டர் சமுதாயத்தை சேர்க்கவில்லை என்றால் அண்ணாமலை ஆடு மேய்த்து இருப்பார். ஐ.பி.எஸ். அதிகாரி ஆகி இருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி வெல்லமண்டி வைத்திருப்பார். வானதி சீனிவாசன் கூடை வேய்ந்திருப்பார் என்றார்.

    • எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதால், பிரதமர் மோடி எரிச்சல் அடைந்துள்ளதாக முதல்வர் பேசுகிறார்.
    • உங்கள் எதிர்க்கட்சி கூட்டணிக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது.

    கோவை:

    கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் துளிர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்யாண மேடைகளை, எதிர்கட்சிகளை திட்ட பயன்படுத்தி கொள்கிறார். பிரதமர் மோடியின் மீது விமர்சனம் வைத்ததுடன், தனது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்றும் சொல்லி இருக்கிறார். அவருக்கு எதற்காக இந்த பயம் வந்திருக்கிறது என்பது தெரியவில்லை.

    அவரது ஆட்சியை, மாநில அரசை கலைப்பதற்கான காரணங்கள் கூறுவதற்கு இடம் இருக்கிறதோ? அதுவெல்லாம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் நினைக்கிறாரா?.

    எந்த ஒரு மாநில அரசையும், ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்க பாஜனதாவிற்கு விருப்பம் இல்லை. கலைத்ததும் இல்லை. எதற்காக முதல்வருக்கு இந்த பயம் வந்திருக்கிறது என்பது தெரியவில்லை.

    எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதால், பிரதமர் மோடி எரிச்சல் அடைந்துள்ளதாக முதல்வர் பேசுகிறார். உங்கள் எதிர்க்கட்சி கூட்டணிக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது.

    நீங்களே உங்களை பெரிதாக நினைத்துக் கொண்டு, பிரதமர் மோடி உங்களை பார்த்து பயப்படுவதாக நினைப்பது கற்பனை. முதல்வர் ஸ்டாலின் அந்த கற்பனை உலகத்தில் இருந்து வெளியே வந்து, தமிழகத்தில் இருக்கும் பிரச்சினைகளை பார்க்க வேண்டும்.

    பிரதமர் மோடி தங்களைப் பார்த்து பயப்படுகிறார் என பேசுவது மாநிலத்தின் பிரச்சினைகளை மூடி மறைக்கவே. தங்களின் ஆட்சிக்கு ஏதோ பிரச்சினை வரப்போகிறது என்பதைப் போல காட்ட முதல்வர் முயல்கிறார். தமிழகத்தின் ஆட்சியை நன்றாக நடத்த ஸ்டாலின் முயற்சி செய்யவேண்டும்.

    தமிழக கவர்னர் குறித்து ஜனாதிபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதம் முழுக்க முழுக்க கற்பனை. அவர், மாநிலத்தின் வரலாற்றை, நாட்டின் கலாச்சார பதிவுகளை, பண்பாட்டு தளங்களை பற்றி மாணவர்களிடமும், பொது வெளியிலும் கவர்னர் பேசுகிறார்.

    இது எந்த விதத்தில் சிக்கலை உருவாக்குகிறது. ஒரு கற்பனை கோட்டையை கட்டிக்கொண்டு யாரும் மாற்றுக்கருத்தை பேசக்கூடாது என்ற சர்வாதிகாரத்திற்குள் செல்கிறீர்களா.

    கவர்னரைப் பற்றி எழுதியிருக்க கூடிய கடிதம் உண்மை இல்லாத ஒன்று. தேவையில்லாமல் ஒவ்வொரு முறையும் அவரை விமர்சனம் செய்து, சிக்கலான நிலையை நீங்கள் தான் உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

    மாநிலத்தின் கவர்னர் எதற்கு அனுமதி கொடுப்பது? எதனால் தாமதம் என்பது குறித்து செய்தி குறிப்பாக வெளியிடப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் வெளியாகி வருகிறது. ஒவ்வொன்றிற்கும் கவர்னர் அலுவலகம் பதில் தருவதால் எரிச்சல் உங்களுக்கு வந்திருக்கிறதா.

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அக்காவும் தம்பியுமாக சேர்ந்து கட்சியை வளர்க்கின்றோம். தேசிய அரசியலில் இருப்பதால் கோவைக்கு அவர் வரும் போது இல்லாமல் இருப்பதை போன்ற சூழல் இருக்கிறது. இருவரும் அடுத்து ஒரே கூட்டத்தில் பங்கேற்பதை போல திட்டமிடுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் கோவை தொகுதியை குறிவைத்து தான் உதவிகளையும் தாராளமாக செய்யத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
    • கோவை பெண் டிரைவருக்கு கார் வாங்கி கொடுத்திருக்கிறார். இது வெறும் ரூ.13 லட்சம் தான்.

    மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல் இப்போது சினிமாவில் பிசியாக இருக்கிறார். பிக்பாஸ்-7 நிகழ்ச்சிக்கு ரூ.150 கோடிக்கும், அவர் நடிக்கும் படத்துக்கு ரூ.130 கோடிக்கும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

    இந்த கேப்பில் கோவையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தனியார் பெண் பஸ் டிரைவருக்கு ரூ.13 லட்சத்தில் சொந்த கார் வாங்கி கொடுத்தார். பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் கோவை தொகுதியை குறிவைத்து தான் உதவிகளையும் தாராளமாக செய்யத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கமலை தோற்கடித்தார்.

    அவர் கூறும்போது, கமல் தேர்தலில் ஜெயித்து இருந்தால் ரோடு போட்டாச்சா... தண்ணீர் வருகிறதா....? தெரு விளக்கு எரிகிறதா...? என்றுதான் தெருத்தெருவாக சுற்றி இருப்பார். தோற்றதால் தான் சினிமாவில் நிறைய சம்பாதிக்க முடிகிறது.

    அவர் கோவை பெண் டிரைவருக்கு கார் வாங்கி கொடுத்திருக்கிறார். இது வெறும் ரூ.13 லட்சம் தான். இன்னும் பலருக்கு நிறையவே செய்யலாம்' என்றார்.

    • கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
    • தெற்கு மாவட்ட பகுதியில் மட்டும் 20 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தெரிவித்தார்.

    கோவை:

    கோவை காந்திபுரத்தில் வி.கே.கே. மேனன் சாலையில் கடந்த மாதம் 29-ந்தேதி பாரதிய ஜனதா சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மீது தி.மு.க.வினர் புகார் செய்த வண்ணம் உள்ளனர்.

    பொள்ளாச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தாவிடம் தி.மு.க. நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசி எங்கள் கட்சியினரை இழிவுப்படுத்தி உள்ளார். அவரது பேச்சு வன்முறையை தூண்டுவதாகவும், சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பதாகவும் உள்ளது.

    அமைதி பூங்காவான தமிழகத்தில் அவருடைய பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருகட்சியினரிடையே வன்மத்தை தூண்டுவதாக உள்ளது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இதேபோல கோவை ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், சாய்பாபா காலனி என மாநகரில் உள்ள 17 போலீஸ் நிலையங்களில் தி.மு.க. பகுதி செயலாளர்கள் தனித்தனியாக புகார் செய்துள்ளனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர சூலூர் போலீஸ் நிலையத்திலும் தி.மு.க. நிர்வாகிகள் புகார் கொடுத்துள்ளனர். தெற்கு மாவட்ட பகுதியில் மட்டும் 20 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தெரிவித்தார்.

    மேலும் வடக்கு மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் மனுக்கள் கொடுக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்த அனைத்து புகார்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக ஆளுநர் உத்தரவு
    • அமைச்சரை பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

    ஆளுநர் நடவடிக்கையை முதல்வர் தனக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க வேண்டும்: வானதி சீனிவாசன்அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இலாகா இல்லாத அமைச்சராக நியமிக்க கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    இந்த நிலையில் நேற்று செந்தில் பாலாஜி மீதான வழக்கை சுட்டிக்காட்டி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். அமைச்சரை பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் கருத்து தெரிவித்தார்.

    இதற்கிடையே செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை கவர்னர் ரவி கிடப்பில் போட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

    செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான வானதி சீனிவாசன் தெரிவித்திருப்பதாவது:-

    எந்தவொரு அரசியலமைப்பு கூறுகளை காப்பாற்ற ஆளுநர் இருக்கிறாரோ, எங்கு சட்டத்தினுடைய ஆட்சி நடைபெறுவதற்கு அரசு தடையாக இருக்கிறதோ, அப்போது இதுபோன்று நடவடிக்கை எடுக்க ஆளுநர் உள்ளாக்கப்படுகிறார்.

    முதன்முதலாக செந்தில் பாலாஜி மீது அதிகமான குற்றச்சாட்டுகளை கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரம்பித்து வைத்தது இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இன்று செந்தில் பாலாஜி நீக்கப்பட்டிருக்கிறார் என்றால், இது அவர் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்க்க வேண்டும்.

    அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழாக என்னென்னவெல்லாம் அதிகாரங்கள் சட்டத்தினுடைய ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக அவர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமே தவிர, இதை அரசியலா பார்க்கக் கூடாது.

    இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

    ×