search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேசிய தலைமை கூறும் வரை எந்த கருத்தும் கூற முடியாது: வானதி சீனிவாசன்
    X

    தேசிய தலைமை கூறும் வரை எந்த கருத்தும் கூற முடியாது: வானதி சீனிவாசன்

    • பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்து கொள்வதாக அறிவித்துள்ள முடிவு குறித்து தேசிய தலைமை தான் கருத்து கூறும்.
    • அ.தி.மு.கவினர் கூறிய கருத்துக்களும், அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை.

    கோவை:

    சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    இதனை அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினார். இந்த நிலையில் கோவையில் நடைபெற்று வரும் பாதயாத்திரை பங்கேற்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர், இந்த விவகாரம் குறித்து கட்சியின் தேசிய தலைமை கருத்து தெரிவிக்கும் என கூறி விட்டு சென்றார்.

    இதுகுறித்து பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்து கொள்வதாக அறிவித்துள்ள முடிவு குறித்து தேசிய தலைமை தான் கருத்து கூறும்.

    தேசிய தலைமை அறிவிக்கும் வரை, நாங்கள் எந்தவித கருத்தையும் கூற முடியாது. இதுகுறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தல் தருவார்கள். அப்போது எங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறோம்.

    அ.தி.மு.கவினர் கூறிய கருத்துக்களும், அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×