என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A Rasa"

    • நாலாந்தர பேச்சாளராக மாறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
    • வசவு வார்த்தைகளை பொது வெளியில் எந்த தயக்கமும் இல்லாமல் எடப்பாடி பேசியிருக்கிறார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை இபிஎஸ் தரம் தாழ்ந்து பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மேலும் கூறியதாவது:-

    செல்வப்பெருந்தகையை கீழ்தரமாக விமர்சித்து நாலாந்தர பேச்சாளராக மாறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

    தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

    காங்கிரஸ் கட்சியின் தலைவருடைய விசுவாசம் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு தகுதியும் இல்லை. வசவு வார்த்தைகளை பொது வெளியில் எந்த தயக்கமும் இல்லாமல் எடப்பாடி பேசியிருக்கிறார்.

    விரக்தியின் விளிம்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் ஒற்றுமையில்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமித் ஷா- செங்கோட்டையனின் ரகசிய சந்திப்பு தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.
    • இபிஸ் முதல் செங்கோட்டையன் வரை பாஜகவிடம் சரண் அடைந்துவிட்டனர்.

    அதிமுகவில் எந்த பிரச்னை என்றாலும் அமித்ஷாவை சந்திக்கிறார்கள்; அதிமுக டெல்லியில் இருந்து நடத்தப்படுகிறது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆ.ராசா கூறியதாவது:-

    மத்திய அமைச்சர் அமித் ஷாவும், செங்கோட்டையனும் சந்தித்தது ஒரு மறைமுகமான செயல்.

    செங்கோட்டையன் அதிமுகவில் இருக்கக்கூடியவர். பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்திருக்கிறார்.

    ஆனால், இருவரும் மவுனமாக உள்ளனர். எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்த ரகசிய சந்திப்பு தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.

    பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் அதிமுக எப்போதோ சென்றுவிட்டது. இபிஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் தற்போது செங்கோட்டையன் என பாஜகவிடம் சரண் அடைந்துவிட்டனர்.

    அதனால், இபிஎஸ்., அல்லது தமிழ்நாடோ அதிமுகவை இயக்கவில்லை. டெல்லியில் இருந்து அதிமுக இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
    • தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரை நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரிக்க அழைத்து சென்ற தனிப்படை போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும், தி.மு.க. அரசில் 25 கஸ்டடி மரணங்கள் நடைபெற்றுள்ளதை சுட்டிக்காட்டி காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆ.ராசா கூறுகையில், கஸ்டடி மரணம் நடந்திருக்கு, அதை தடுக்கறதுக்கு நல்ல முயற்சியை முதலமைச்சர் முடிவு எடுக்கணுமே தவிர, காவல்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவர் ஒண்ணுமே இல்லன்னு சர்வசாதாரணமாக பேசினால் என்ன அர்த்தம்?

    நான் குற்றம்சாட்டுகிறேன். நீங்க முதலமைச்சராக இருப்பதற்கு எந்தவித தார்மீக அடிப்படையும் கிடையாது. அதில் எந்தவிதமான தகுதியும் கிடையாது என்று பேசியுள்ளார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற சாத்தான்குளம் தந்தை -மகன் மரணம் தொடர்பாக ஆ.ராசா பேசியதை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

    • பொதுக் கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.
    • பொதுக்கூட்டத்திற்காக கட்டப்பட்டிருந்த ஹாலோஜன் விளக்கு கம்பம் பலத்த காற்றால் சரிந்து விழுந்தது.

    மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பங்கேற்றார்.

    அக்கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.

    இந்நிலையில், பொதுக் கூட்டத்திற்கான மேடையில் அமைக்கப்பட்டிருந்த மைக் மேஜை அருகே ஆ.ராசா பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் மேடையின் எதிரே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மின்விளக்கு தூண் திடீரென சாய்ந்தது.

    பொதுக்கூட்டத்திற்காக கட்டப்பட்டிருந்த ஹாலோஜன் விளக்கு கம்பம் பலத்த காற்றால் சரிந்து விழுந்தது.

    விளக்குத்தூண் விழுவதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஆ.ராசா அங்கிருந்த உடனடியாக விலகி ஓடி உயிர் தப்பினார்.

    மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.
    • வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஆ.ராசா பெயரில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.

    இதனிடையே வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், நீலகிரியில் மக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெயரில் நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்" என்று தெரிவித்தார்.

    • வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்த முழுமையான உண்மைகளை மத்திய பாஜக அரசு கூறவில்லை.
    • அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் வக்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    வக்பு மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது என்று தி.மு.க எம்.பி ஆ.ராசா கூறியுள்ளார்.

    மேலும், அரசியல் நிர்ணய சபைக்கு வல்லபாய் பட்டேல் அளித்த அறிக்கையை மேற்கோள் காட்டி மக்களவையில் எம்.பி ஆ.ராசா பேசியுள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்த முழுமையான உண்மைகளை மத்திய பாஜக அரசு கூறவில்லை.

    பாராளுமன்ற கூட்டுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் வக்பு மசோதாவில் பிரதிபலிக்கவில்லை.

    சிறுபான்மையினருக்கு எதிராகவும் அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் வக்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நெற்றியில் பொட்டு வைப்பதும், கைகளில் கயிறு கட்டுவதும் சங்கிகளின் அடையாளம்.
    • யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்

    நீலகிரி மாவட்டம் உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா பேசும்போது "கடவுளை வணங்க வேண்டாம் என கூறவில்லை. கடவுள் மீது எந்த கோபமும் இல்லை. நெற்றியில் பொட்டு வைப்பதும், கைகளில் கயிறு கட்டுவதும் சங்கிகளின் அடையாளம். கரை வேட்டி கட்டிக்கொண்டு பொட்டு வைக்க வேண்டாம். நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைத்தான் செய்கிறார்கள். யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ஆ.ராசா பேச்சு தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "ஆ.ராசா பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து. எங்கள் தலைவரின் கருத்து அதுவல்ல" என்று தெரிவித்தார்.

    • நெற்றியில் பொட்டு வைப்பதும், கைகளில் கயிறு கட்டுவதும் சங்கிகளின் அடையாளம்- ஆ ராசா.
    • இந்துக்களை என்ன வேண்டுமென்றாலும் பேசலாம்... திமுக அமைப்பு ரீதியாக இந்து விரோதிகள் என தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

    நீலகிரி மாவட்டம் உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா பேசும்போது "கடவுளை வணங்க வேண்டாம் என கூறவில்லை. கடவுள் மீது எந்த கோபமும் இல்லை. நெற்றியில் பொட்டு வைப்பதும், கைகளில் கயிறு கட்டுவதும் சங்கிகளின் அடையாளம். கரை வேட்டி கட்டிக்கொண்டு பொட்டு வைக்க வேண்டாம். நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைத்தான் செய்கிறார்கள். யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்" என்றார்.

    இதற்கு பாஜக தலைவர்கள் ஹெச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். ஆ.ராசா கருத்து தொடர்பாக ஹெச். ராஜா கூறியதாவது:-

    திமுக-வில் இருக்கின்ற மாற்று மதத்தினர்களான முஸ்லிம்கள் குல்லா வைக்க வேண்டாம், கிறிஸ்தவர்கள் சிலுவை அணிய வேண்டாம் என ஆ. ராசா போன்ற இந்து விரோத சக்திகளுக்கு சொல்வதற்கு தைரியம் வருமா?.

    இந்துக்களை என்ன வேண்டுமென்றாலும் பேசலாம்... திமுக அமைப்பு ரீதியாக இந்து விரோதிகள் என தொடர்ந்து சொல்லி வருகிறேன். அல்லேலுயா சொல்கின்ற ஒருவரை அறநிலையத்துறை அமைச்சராக வைத்துள்ளனர். அறநிலையத்துறையை அழிப்பதற்கு வைத்துள்ளனர்.

    திமுக என்பது நச்சுப் பாம்பு, இந்துக்களை அழிப்பதற்கான ஒரு சக்தி என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2026 தேர்தலில் மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டனும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு ஹெச். ராஜா பதில் அளித்துள்ளார்.

    • நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைத்தான் செய்கிறார்கள்.
    • யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.

    நீலகிரி மாவட்டம் உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா பேசும்போது கூறியதாவது:-

    * கடவுளை வணங்க வேண்டாம் என கூறவில்லை. கடவுள் மீது எந்த கோபமும் இல்லை.

    * நெற்றியில் பொட்டு வைப்பதும், கைகளில் கயிறு கட்டுவதும் சங்கிகளின் அடையாளம்.

    * கரை வேட்டி கட்டிக்கொண்டு பொட்டு வைக்க வேண்டாம்.

    * கரைவேட்டி கட்டிவிட்டால் நெற்றிப்பொட்டை அழித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும்.

    * நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைத்தான் செய்கிறார்கள்.

    * யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.

    * கொள்கை இல்லாமல் போனால் அந்த கட்சி அழிந்து போய் விடும்.

    * அப்படி அழிந்து கொண்டிருக்கும் ஒரு கட்சிதான் அதிமுக.

    இவ்வாறு ஆ. ராசா பேசினார்.

    • வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.
    • ஆ.ராசா உள்பட 3 பேர் ஜனவரி 10-ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

    இதற்கிடையே, ஆ.ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகள் உள்பட 16 பேர் மீது கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ம் தேதி அன்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    அதாவது, 1999-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தது முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி கூடுதலாக ரூ.27.92 கோடி அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியது.

    இதனடிப்படையில் ஆ.ராசா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடந்தது. டெல்லி, சென்னை, திருச்சி, நீலகிரி, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 2ஜி வழக்கில் கிடைத்த சில ஆவணங்கள் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. சோதனையின் போது வருமான வரி கணக்குகள், சொத்து ஆவணங்கள், நிதிநிலை அறிக்கைகள் மற்றும் நிலையான வைப்பு ரசீதுகள் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த ஆவணங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை தற்போது முடிவிற்கு வந்துள்ளது. 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுமார் 7 ஆண்டுகள் ஆன நிலையில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆ.ராசா உள்பட 3 பேர் ஜனவரி 10-ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

    • திருநெல்வேலியில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழாவில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டார்.
    • கலைஞரின் திட்டமில்லாமல் தமிழகத்தில் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

    புகழ்பெற்ற பெரிய பதவிகளில் இருப்பவர்களை பார்த்து சில நேரங்களில் கேட்பதுண்டு. இந்த பதவிக்கு நீங்கள் வந்திருக்காவிட்டால் என்னவாக ஆகி இருப்பீர்கள் என்று. அதற்கு அவர்கள் ஏதாவது ஒரு பதிலை சொல்ல கேட்டிருப்போம். தற்போது அதில் இருந்து வித்தியாசமாக ஒரு விசயத்தை ஆ.ராசா கணித்து உள்ளார். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தேசிய பா.ஜனதா மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் இந்த பதவிக்கு எப்படி வந்தார்கள். இந்த பதவிக்கு வந்திருக்காவிட்டால் என்னவாக இருந்திருப்பார்கள் என்பதுதான் அவரது கணிப்பு.

    திருநெல்வேலியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசும்போது கூறியதாவது:-

    கலைஞரின் திட்டமில்லாமல் தமிழகத்தில் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கலைஞரின் பேனா முனை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் கவுண்டர் சமுதாயத்தை சேர்க்கவில்லை என்றால் அண்ணாமலை ஆடு மேய்த்து இருப்பார். ஐ.பி.எஸ். அதிகாரி ஆகி இருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி வெல்லமண்டி வைத்திருப்பார். வானதி சீனிவாசன் கூடை வேய்ந்திருப்பார் என்றார்.

    • தெக்கலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி மயக்கம் அடைந்த நிலையில் கிடந்தார்.
    • சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவினாசி:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நீலகிரி எம்.பி.,யும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா கோவை வந்திருந்தார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளையும் முடித்து விட்டு கடைசியாக அவிநாசியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கோவை விமான நிலையம் நோக்கி சென்றார்.

    அப்போது தெக்கலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி மயக்கம் அடைந்த நிலையில் கிடந்தார். உடனே காரை நிறுத்திய ஆ.ராசா எம்.பி., உடனடியாக தனது காரிலேயே வாலிபரை ஏற்றி கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் மயக்கமடைந்த அந்த வாலிபருக்கு உடனிருந்து சிறப்பு சிகிச்சை அளிக்க தன்னுடன் பயணித்த மருத்துவர் கோகுல் என்பவரையும் அனுப்பி வைத்ததோடு இளைஞருக்கு வழங்கப்பட உள்ள சிகிச்சை முறை குறித்தும் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசினார். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×