என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. டெல்லியில் இருந்து இயக்கப்படுகிறது- ஆ.ராசா
- அமித் ஷா- செங்கோட்டையனின் ரகசிய சந்திப்பு தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.
- இபிஸ் முதல் செங்கோட்டையன் வரை பாஜகவிடம் சரண் அடைந்துவிட்டனர்.
அதிமுகவில் எந்த பிரச்னை என்றாலும் அமித்ஷாவை சந்திக்கிறார்கள்; அதிமுக டெல்லியில் இருந்து நடத்தப்படுகிறது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆ.ராசா கூறியதாவது:-
மத்திய அமைச்சர் அமித் ஷாவும், செங்கோட்டையனும் சந்தித்தது ஒரு மறைமுகமான செயல்.
செங்கோட்டையன் அதிமுகவில் இருக்கக்கூடியவர். பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்திருக்கிறார்.
ஆனால், இருவரும் மவுனமாக உள்ளனர். எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்த ரகசிய சந்திப்பு தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.
பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் அதிமுக எப்போதோ சென்றுவிட்டது. இபிஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் தற்போது செங்கோட்டையன் என பாஜகவிடம் சரண் அடைந்துவிட்டனர்.
அதனால், இபிஎஸ்., அல்லது தமிழ்நாடோ அதிமுகவை இயக்கவில்லை. டெல்லியில் இருந்து அதிமுக இயக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






