என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'கரை வேட்டி கட்டிக்கொண்டு பொட்டு வைக்க வேண்டாம்' - ஆ.ராசா பேச்சுக்கு சேகர்பாபு மறுப்பு
- நெற்றியில் பொட்டு வைப்பதும், கைகளில் கயிறு கட்டுவதும் சங்கிகளின் அடையாளம்.
- யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்
நீலகிரி மாவட்டம் உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா பேசும்போது "கடவுளை வணங்க வேண்டாம் என கூறவில்லை. கடவுள் மீது எந்த கோபமும் இல்லை. நெற்றியில் பொட்டு வைப்பதும், கைகளில் கயிறு கட்டுவதும் சங்கிகளின் அடையாளம். கரை வேட்டி கட்டிக்கொண்டு பொட்டு வைக்க வேண்டாம். நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைத்தான் செய்கிறார்கள். யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஆ.ராசா பேச்சு தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "ஆ.ராசா பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து. எங்கள் தலைவரின் கருத்து அதுவல்ல" என்று தெரிவித்தார்.
Next Story






