search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vanathi Srinivasan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மற்றொரு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்றுள்ளார்.
    • ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க பொன்முடி மேற்கொண்ட முயற்சிகளை குறிப்பிட்டு ஐகோர்ட்டே அதிர்ச்சி தெரிவித்தது.

    கோவை:

    பாரதிய ஜனதா மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தற்போது தண்டனை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி மீதான மற்றொரு சொத்து குவிப்பு வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதை திடீரென வேலூர் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி 2022-ல் சென்னை ஐகோர்ட்டு, அலுவல் ரீதியான உத்தரவை பிறப்பித்தது. அதை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார்.

    இது பெரும் சர்ச்சையான நிலையில், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில் தான் மற்றொரு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்றுள்ளார். ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தி ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க பொன்முடி மேற்கொண்ட முயற்சிகளை குறிப்பிட்டு ஐகோர்ட்டே அதிர்ச்சி தெரிவித்தது.


     தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது அவர் மீதான ஊழல் வழக்கை, பெங்களூருவுக்கு மாற்ற தி.மு.க. தொடர்ந்த வழக்கே காரணம். இப்போது தி.மு.க அரசில் அமைச்சர்களாக உள்ள பலர் மீது ஊழல் வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே, ஏற்கெனவே தி.மு.க.வே உருவாக்கிய முன்னுதாரணத்தின் படி தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை, தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத வேறொரு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, அவர் நிருபர்களிடம் கூறுகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றபோது அவரை பதவியில் இருந்து நீக்காமல், இலாகா இல்லாத அமைச்சராக இன்று வரை தொடரச் செய்து வருகின்றனர். இது மிகப்பெரிய அவமானம். குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் அனைவரையும் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, மாநிலத்தின் முதலமைச்சர், தான் நடத்துவது நேர்மையான ஆட்சி என்பதை நிரூபிக்க வேண்டும். நீதித்துறையில் நல்ல நபர்கள், எதற்கும் பயம் இல்லாத நபர்கள் இருக்கும் போது நல்ல தீர்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்றார்.

    • 2015 சென்னை பெரு வெள்ளத்தின் போது ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
    • கோவை தெற்கு தொகுதியில் கமலை தோற்கடித்தவர் வானதி என்பது குறிப்பிடத்தக்கது.

    மாற்றம் வரவேண்டும். மாற்றத்தை கொண்டு வருவேன் என்ற கமலின் பேச்சில் ஏற்பட்ட மாற்றம் தான் இப்போது அரசியல் களத்தில் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. 2015 சென்னை பெரு வெள்ளத்தின் போது ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.

    ஆனால் இப்போது சென்னை தண்ணீரில் தத்தளிக்கும் போது அரசை விமர்சிக்கும் நேரமல்ல என்றும் இயற்கை பேரிடரில் மக்கள் தான் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்த கருத்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

    இது பற்றி பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியதாவது:-

    மாற்றத்தை கொண்டு வருகிறேன் என்று கட்சி தொடங்கியவர். பாவம் இப்போதும் ஏமாற்றம் வந்துவிட கூடாதே. எப்படியாவது ஒற்றை சீட்டாவது வேண்டுமே என்பதற்காக தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறார். வேறென்ன சொல்ல? என்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமலை தோற்கடித்தவர் வானதி என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தி.மு.க. அரசு, கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது.
    • தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    கோவை:

    பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை தர உள்ள நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

    பெட்ரோல் வீசியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந்தேதி சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த ரவுடியிடம் மேலும் 4 பெட்ரோல் குண்டுகள் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தி.மு.க. அரசு, கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    இந்தச் சூழலில் கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்வதை ஏற்க முடியாது. அவர்களை விடுவித்தால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் கிடைக்கும் என அரசியல் லாபக் கணக்கு பார்க்கக் கூடாது.

    கவர்னர் மாளிகையிலேயே ஒருவர் குண்டு வீச துணிகிறார் என்றால், அது ஒரு தனி நபரின் முயற்சியாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. எனவே, ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

    தமிழ்நாடு காவல்துறை தி.மு.க.வினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அல்லது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை கவுதமி மீது எனக்கு எப்போதுமே அன்பு, பாசம், மரியாதை உண்டு.
    • பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக கவுதமியின் அறிக்கை மனவேதனை தருகிறது.

    கோவை:

    பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நடிகை கவுதமி மீது எனக்கு எப்போதுமே அன்பு, பாசம், மரியாதை உண்டு. கட்சிக்காக தீவிரமாக உழைத்தவர். பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக கவுதமி அளித்துள்ள கடிதம் மனவேதனை தருகிறது.

    அவருடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பேசினேன். அப்போது பா.ஜனதாவுக்காக தேசிய அளவில் பணியாற்ற வாருங்கள். உங்களுக்கு பொறுப்பு வழங்குகிறோம் என்று அழைத்தேன். அப்போது கவுதமி பரவாயில்லை மாநில அளவில் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். மேலும் அவருடன் எண்ணற்ற கட்சி நிர்வாகிகள் தொடர்பில் உள்ளனர். மாநில அளவிலான கட்சி நிகழ்ச்சிகளில் கவுதமி தீவிரமாக பங்கெடுத்து வந்தார்.

    எந்த நேரத்திலும் சோர்வு பாராமல் பணியாற்றக்கூடியவர். தைரியம்-தன்னம்பிக்கை மிகுந்த பெண்மணி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கவுதமியின் உதவியாளர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக உதவி கேட்டு இருந்தார்.

    அப்போது நான் அவரிடம் அந்த நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக முழு விவரங்களையும் அனுப்பி வையுங்கள், நிச்சயமாக உதவி செய்கிறோம் என்று சொல்லி இருந்தேன்.

    இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக கவுதமியின் அறிக்கை மனவேதனை தருகிறது. நாங்கள் சட்டத்துக்கு புறம்பாக யாரையும் காப்பாற்றவோ, பாதுகாக்கவோ முற்படுவது இல்லை. கவுதமிக்கு உண்மையிலேயே என்ன பிரச்சினை என தெரியவில்லை.

    அதுபற்றி முழுமையாக தெரிந்தால்தான் நாங்கள் விளக்கம் சொல்ல முடியும்.

    பா.ஜனதா கட்சியில் நடிகை கவுதமி இருந்தது வரை அவர் கொடுத்த புகார் மீது ஆளுங்கட்சியினர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் எங்களின் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததும் அவரது புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அப்படியென்றால் நடிகை கவுதமிக்கு ஆளுங்கட்சியினர் நெருக்கடி கொடுத்து உள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது.

    நடிகர் விஜய்யின் லியோ படத்தை இன்னும் பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும்போதுதான் பார்க்க வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை அரசியல், சினிமா ஆகிய இரண்டும் ஒன்றாக கலந்தது. திரைப்படங்களில் நல்ல கருத்துகள், பொழுதுபோக்கும் அம்சங்கள் இருந்தால் அது யார் நடித்த சினிமாவாக இருந்தாலும் பார்ப்பது தவறே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசின் அதிகாரிகள் உயர்மட்டக்குழு வருகிற 13-ந் தேதி கோவை வருகிறது.
    • விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    தென்னை விவசாயிகள் மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகளின் கோரிக்கைகள், பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அரசின் அதிகாரிகள் உயர்மட்டக்குழு வருகிற 13-ந் தேதி கோவை வருகிறது.

    கோவையில் கடந்த வாரம் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதியளித்தபடி இந்த குழு தேங்காய், கொப்பரை விலை, தென்னை நார் தொழில் தொடர்பாக கோவை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு நேரில் வருகை தருவர். விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
    • 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 'லியோ' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான இந்த டிரைலர் சில மணி நேரங்களில் 31 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.


    இதே, நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் 30 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. 'லியோ' படத்தின் டிரைலரை தொடர்ந்து ரசிகர்கள் வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.




    • விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.


    லியோ போஸ்டர்

    இதையடுத்து இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சில மணி நேரங்களில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'.
    • இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.


    இதையடுத்து இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சில மணி நேரங்களில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில், இந்த டிரைலரை எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது வீட்டில் பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • தமிழகத்தில் முதல்முறையாக மாபெரும் கடனுதவி திட்டம் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
    • தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படவில்லை.

    கோவை:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கோவையில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அவர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரை பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வழியனுப்பி வைத்தார்.

    பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கொடிசியாவில் நடந்த நிகழ்ச்சியில் 1 லட்சம் வங்கி கணக்குகளுக்கு ரூ. 3749 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. முத்ரா,ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என பல்வேறு திட்டங்களில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கோவையின் வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறுதுணையாக இருக்கும்.

    தமிழகத்தில் முதல்முறையாக இந்த மாபெரும் கடனுதவி திட்டம் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய நிகழ்வில் ஒருவர் கடன் கிடைக்கவில்லை என சொன்னார், அவரது கோரிக்கையும் கேட்கப்பட்டது.

    கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் முழுக்க முழுக்க தொகுதி பிரச்சனைகளுக்காக மட்டுமே நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர். கடனுதவி வழங்கும் விழா அரசு நிகழ்ச்சி என்பதால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    கோவையில் சிட்பி வங்கி கல்வெட்டில் தமிழ் மொழி இல்லாதது குறித்து நிதி மந்திரி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். எந்த ஊரில் வங்கி திறந்தாலும் அந்த ஊரில் உள்ள மொழி கல்வெட்டில் இடம் பெற வேண்டும் என நிதி மந்திரி வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    கோவையில் தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றதால் நிதி மந்திரி மகிழ்வாக இருந்தார். அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சிகள் எதுவும் அவருக்கு இல்லை.

    கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தையும் தேசிய தலைமை தான் முடிவு செய்யும். சென்னையில் நேற்று கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் மாநில தலைவர் இல்லாமல் கோட்ட தலைவர்கள் கூட்டம் நடத்தப்படலாம்.

    தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படவில்லை. கல்லூரியின் நிகழ்ச்சி நிரலை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம். காலையில் இருந்து தொடர்ச்சியான நிகழ்வுகளில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் இடஒதுக்கீடு மசோதவை தேர்தல் நாடகம் என்று கூறுவது மிகவும் தவறானது.
    • தமிழகத்தில் சட்டவிரோத மதுவிற்பனை அதிகரித்துள்ளது.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    டெல்லியில் 5 மாநில தேர்தல் தொடர்பான மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தேசிய தலைமையின் முக்கிய தலைவர்களுடன் அந்த மாநிலங்களில் செய்ய வேண்டிய நிகழ்ச்சிகள், திட்டங்கள் குறித்து தான் விவாதிக்கப்பட்டது. மொத்தத்தில் எனது டெல்லி பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் 33 சதவீத சட்ட மசோதாவில் காங்கிரஸ் இருந்த மனநிலையிலேயே இருக்கிறார். தற்போது நடப்பது பா.ஜ.க ஆட்சி. மகளிர் சட்ட மசோதாவை கொண்டு வந்திருப்பவர் பிரதமர் மோடி.

    பா.ஜ.கவும், பிரதமர் மோடியும் எதை சொல்கிறார்களோ அதை செய்து காட்டக்கூடியவர்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதவை தேர்தல் நாடகம் என்று கூறுவது மிகவும் தவறானது. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா உரிமை கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.

    தமிழகத்தில் சட்டவிரோத மதுவிற்பனை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனை விற்பவர்கள் மீதும் எந்தவித தயவு தாட்சணையும் பார்க்காமல் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாடு முழுவதும் மக்கள், நம் நாட்டில் மற்றும் உள்ளூர் பகுதிகளில் தயாராகும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அண்மையில் டெல்லியில் நடந்த ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நம் நாட்டில் தயாரான பாரம்பரிய பொருட்களை பரிசளித்தார். அதேபோன்று நாம் நம் நாட்டில் தயாராகும் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ஓ.பி.எஸ்.சை, பா.ஜனதாவில் இணைப்பது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது தனக்கு தெரியாது என்று கூறினார்.

    • நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டணி முறிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளி வருகிறது
    • நான் மகளிர் அணி தலைவராக, எம்.எல்.ஏ.வாக எனது பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் இன்று காலை கோவையில் இருந்து விமானம் மூலமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக கோவை விமான நிலையத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வழக்கமான பணிகளுக்காகவே நான் டெல்லி செல்கிறேன். இன்று மாலை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் தொடர்பான மத்திய தேர்தல் குழு கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே நான் டெல்லி செல்கிறேன். எனவே நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் கிடையாது.

    நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டணி முறிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளி வருகிறது. ஆனால் இதுவரை அந்த மாதிரி எதுவும் நடந்துள்ளதாக எனக்கு தெரியவில்லை. அது என் வேலையும் கிடையாது.

    நான் மகளிர் அணி தலைவராக, எம்.எல்.ஏ.வாக எனது பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். மேலும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி வருகிறாரா? என்பது குறித்தும் எனக்கு தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நிருபர்கள், அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி தொடருமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல், சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்து கொள்வதாக அறிவித்துள்ள முடிவு குறித்து தேசிய தலைமை தான் கருத்து கூறும்.
    • அ.தி.மு.கவினர் கூறிய கருத்துக்களும், அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை.

    கோவை:

    சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    இதனை அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினார். இந்த நிலையில் கோவையில் நடைபெற்று வரும் பாதயாத்திரை பங்கேற்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர், இந்த விவகாரம் குறித்து கட்சியின் தேசிய தலைமை கருத்து தெரிவிக்கும் என கூறி விட்டு சென்றார்.

    இதுகுறித்து பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்து கொள்வதாக அறிவித்துள்ள முடிவு குறித்து தேசிய தலைமை தான் கருத்து கூறும்.

    தேசிய தலைமை அறிவிக்கும் வரை, நாங்கள் எந்தவித கருத்தையும் கூற முடியாது. இதுகுறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தல் தருவார்கள். அப்போது எங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறோம்.

    அ.தி.மு.கவினர் கூறிய கருத்துக்களும், அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×