search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uttarpradesh"

    உ.பி. முதல் மந்திரி அளித்த காசோலை வங்கியில் திருப்பி அனுப்பப்பட்டதால் பத்தாம் வகுப்பில் 7வது இடம் பிடித்த மாணவர் அதிர்ச்சி அடைந்தார். #UttarPradesh #BoardTopper #ChequeBounce
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 7வதி இடம் பிடித்தவர் அலோக் மிஸ்ரா.

    கடந்த மாதம் 29ம் தேதி லக்னோவில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அலோக் மிஸ்ராவை பாராட்டி, ஒரு லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கினார்.

    இதையடுத்து, மிஸ்ராவின் தந்தை அந்த காசோலையை கடந்த 5ம் தேதி வங்கியில் செலுத்தினார். ஆனால், காசோலையில் உள்ள கையெழுத்து பொருந்தவில்லை எனக்கூறி வங்கி காசோலை திருப்பி அனுப்பியது. அத்துடன், காசோலையை திருப்பி அனுப்பியதற்காக அபராத கட்டணத்தையும் மிஸ்ராவிடம் வசூலித்தது.

    இதையறிந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அந்த காசோலைக்கு பதிலாக வேறு காசோலையை வழங்கி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    முதல் மந்திரி அளித்த காசோலை வங்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh #BoardTopper #ChequeBounce
    உத்தரப்பிரதேசத்தில் எம்.பி., எம்.எல்.ஏ. இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். #UPbypolls #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த காய்ரானா எம்.பி. தொகுதி மற்றும் நூர்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் ஆளும் பா.ஜனதா படுதோல்வி அடைந்தது.

    ஏற்கனவே கோரக்பூர், புல்பூர் பாராளுமன்ற தொகுதிகளை பா.ஜனதா இழந்த நிலையில் தற்போது தொடர் தோல்வியை தழுவியிருப்பது முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். கோபமாவ் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. எகிலாம் பிரகாஷ் முதல்-மந்திரி ஆதித்யநாத்தை கண்டித்து இந்தியில் கவிதை எழுதி பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.


    அதில், “முதல்வர் இயலாதவர்” என்று மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஊழல் அரசியல்வாதிகள் கைக்கு அதிகாரம் சென்றுவிட்டது. மோடியின் பெயரைச் சொல்லி ஆட்சியைப் பிடித்தோம். ஆனால் மக்கள் பாராட்டும் அளவுக்கு பணிகள் நடைபெறவில்லை. சங்பரிவார் போன்ற இயக்கங்கள் உள்ளே நுழைந்து விட்டதால் முதல்-மந்திரி பதவி பயனற்று போனது.

    5 பாராக்கள் கொண்ட இந்த கவிதைக்கு தடம் மாறிச் சென்றது அதிகாரிகள் ஆட்சி என்ற தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

    இதேபோல் பைரியா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திரா சிங் கூறுகையில், தேர்தல் தோல்விக்கு ஊழலே காரணம். தாசில்தார் தொடங்கி போலீஸ் நிலையங்கள் வரை ஊழல் பரவி விட்டது. அதிகாரிகளும், போலீசாரும் மக்களை தொல்லைப்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டார்கள். முதல்-மந்திரி அதை தடுக்க தவறியதால் அரசு மதிப்பு மரியாதையை இழந்து விட்டது என்றார்.

    இதற்கிடையே ஈடாவா நகரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஆதித்யநாத் பேசுகையில், ஊழல்வாதிகளும், அவர்களை ஆதரிப்பவர்களும் பயங்கரவாதிகள். அவர்கள் கூட்டணி வைத்து பிரதமர் மோடிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றார். #UPbypolls #YogiAdityanath
    லக்னோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உ.பி. துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா, உலகிலேயே முதல் டெஸ்ட் டியூப் குழந்தை சீதைதான் என தெரிவித்துள்ளார். #UPDeputyCM #SitaDevi #TestTubeBaby
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோ பல்கலைக்கழகத்தில் வடபிராந்திய போட்டிகளுக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட மாநில துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    நமது இதிகாசங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகியவை நவீன அறிவியலுக்கு முன்னோடியாக விளங்கி வருகின்றன. இதிகாச காலங்களில் பயன்பட்ட புஷ்பக விமானங்களே இப்போதைய விமானங்களுக்கு முன்னோடியாக அமைந்தவை.



    திருதிராஷ்டிரன் மகாபாரத போரை ஞான திருஷ்டியில் கண்டு விளக்கிய விதமே இன்றைய நேரலை நிகழ்ச்சிக்கான முன்னோடியாகும். இப்போது கூகுள் என்ன செய்து வருகிறதோ, அதை இந்து மதத்தை சேர்ந்த நாரதர் ஏற்கனவே செய்து வந்துள்ளார்.

    இதேபோல், உலகிலேயே முதல் டெஸ்ட் டியூப் குழந்தை சீதாதேவி தான் என்பதை மறுப்பதற்கில்லை என தெரிவித்துள்ளார்.

    இவரது பேச்சு உ.பி.யில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #UPDeputyCM #SitaDevi #TestTubeBaby
    உத்தரபிரதேசத்தில் தற்போது 13 வருடத்திற்கு பிறகு கடுகு எண்ணையால் புது நோய் பரவுகிறது. இதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
    லக்னோ:

    ‘டிராப்சி’ எனப்படும் நீர்க்கோவை என்ற மர்ம நோய் உத்தரபிரதேச மாநிலத்தில் பரவி வருகிறது. இது கலப்படம் செய்யப்பட்ட கடுகு எண்ணையை பயன்படுத்துவோருக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இந்த நோய் பாதித்தவர்களின் கால்களில் வீக்கம் ஏற்படும். இந்த நோய் இறுதியாக கடந்த 2005-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் கடுமையாக பரவியது. அதில் 75 பேர் உயிரிழந்தனர்.

    தற்போது 13 வருடத்திற்கு பிறகு அங்கு மீண்டும் இந்த நோய் பரவுகிறது. இதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். ஜனுப்பூர் பகுதியில் அசோக் குமார் (65) என்பவர் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

    கடந்த ஏப்ரல் 25-ந்தேதி அவரது மனைவிக்கு திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டது. பின்னர் வாந்தி, வயிற்றுப் போக்கும் உண்டானது. இதையடுத்து அவர் மரணம் அடைந்தார். அதே நோய் பாதிப்பால் மே 3-ந்தேதி அவரது மருமகளும், அதன் பின்னர் அடுத்தடுத்து 2 மகன்களும் பலியாகினர்.

    தற்போது அசோக்குமாரும் அவரது 4 வயது பேத்தி சுவாதியும் இதே நோய் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் வேகமாக பரவி வருவதால் உத்தரபிரதேச மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதை தடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளனர். #Uttarpradesh
    உ.பி.யின் மதுராவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் மாட்டு வண்டியில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #PetrolDieselPrice #Congress #Protest
    லக்னோ:

    பெட்ரோல், டீசல் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக, உ.பி.யின் மதுரா நகரில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர். உள்ளே செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதுதொடர்பாக காங்கிரசார் கூறுகையில், உலகிலேயே இந்தியாவில் தான் பெட்ரோ, டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. மத்திய அரசு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். #PetrolDieselPrice #Congress #Protest
    உத்தர பிரதேசம் மாநிலத்தில் பெய்து வரும் மழையில் நேற்று மின்னல் தாக்கியதில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. #Lightning #Fire
    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இந்த மாநிலத்தில் புழுதி புயலும் பலமாக தாக்கியது. இந்த புழுதி புயலில் சிக்கி 18 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில், உ.பி.யின் சம்பால் நகரில் நேற்று இரவு ராஜ்புரா பகுதியில் மின்னல் தாக்கியது.
    இதில் அந்த பகுதியில் உள்ள 100க்கு மேற்பட்ட குடிசை வீடுகள் தீ பிடித்து எரிந்தது.

    தகவலறிந்து அங்கு மூன்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன. அவர்கள் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். #Lightning #Fire
    டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தாக்கிய புழுதி புயல் மற்றும் பலத்த மழைக்கு 19 பேர் பரிதாபமாக பலியாகினர். #Duststorm
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் இன்று உக்கிரமான வெயில் தாக்கியது. ஆனால் மாலையில் வானிலை முற்றிலுமாக மாறியது.

    மாலையில் மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதனால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டன.



    இந்நிலையில், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தாக்கிய புழுதி புயலுக்கு 15 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    புழுதி புயல் தாக்கியதில் தலைநகர் டெல்லியில் 2 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். பலத்த காற்று வீசியதில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    இதேபோல், மேற்கு வங்காளத்தில் பெய்து வரும் மழையில் மின்னல் தாக்கியதில் 8 பேர் இறந்தனர். 

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பலத்த மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Duststorm #tamilnews
    உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடியுடன் பெய்து வரும் புயல் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #UP #Thunderstorm
    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் பல மாவட்டங்களில் முன் எச்சரிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    உ.பி.யின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆக்ரா, பிரோசாபாத், அலிகார், மதுரா மற்றும் இடாவா நகரங்களில் பெய்த பலத்த மழைக்கு 9 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடியுடன் பெய்து வரும் பலத்த மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உ.பி.யின் இடாவா நகரில் 5 பேர், மதுரா, அலிகார், ஆக்ராவில் தலா 3 பேர், பிரோசாபாத்தில் 2 பேர், ஹத்ராஸ் மற்றும் கான்பூரில் தலா ஒருவர் என மொத்தம் 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும், இந்த மழைக்கு சிக்கி 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவித்தனர்.

    மதுராவில் புயல் மழையில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை இன்று சந்தித்த துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா, புயலில் சிக்கி பலியானவர்க்ள் குடும்பத்தினருக்கு க் ல்யானபள் தலா 4 லட்சம் ரூபாய் வ்ழங்கப்ப்டும் என அறிவித்துள்ளார். மேலும், மழையில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதற்கிடையே, உ.பி.யில் மீண்டும் புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை ஆஅய்வு மையம்   எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #UP #Thunderstorm
    உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடியுடன் பெய்து வரும் பலத்த மழைக்கு 9 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #UP #Thunderstorm
    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், உபியின் மேற்கு பகுதியில் உள்ள ஆக்ரா, பிரோசாபாத், அலிகார், மதுரா மற்றும் இடாவா நகரங்களில் பெய்த பலத்த மழைக்கு 9 பேர் பலியாகினர்.



    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உ.பி.யின் பல்வேறு நகரங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மதுராவில் இடி தாக்கியதில் 3 பேரும், ஆக்ராவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் ஒருவரும், இடாவா நகரில் 4 பேர் உள்பட மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

    முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், மழையில் சிக்கிய மக்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #UP #Thunderstorm
    ×