என் மலர்

  நீங்கள் தேடியது "19 killed"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் மலைப்பாதை வழியே சென்ற பஸ் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். #UgandaBusAccident
  கம்பாலா:

  உகாண்டா நாட்டில் சரியான சாலைகள் இல்லாததாலும், வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

  இந்நிலையில், உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் உள்ள கப்ச்சோர்வா - பேல் நெடுஞ்சாலை அருகிலுள்ள மலைப்பாதை வழியே பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென நிலைதடுமாறிய பஸ் மலைமுகட்டில் கவிழ்ந்து விழுந்தது.  இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர். #UgandaBusAccident
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் இரு பேருந்துகள் மோதிய விபத்தில் 19 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தான் நாட்டின் தேரா காஜி கான் நகரில் சென்று கொண்டிருந்த இரு பேருந்துகள் திடீரென மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 15 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

  தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் இறந்தனர். இதையடுத்து, சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.  பேருந்துகள் மோதிய விபத்தில் 19 பேர் பலியானது குறித்து அறிந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜனாதிபதி ஆரிப் அல்வி ஆகியோர் பலியானோர் குடும்பத்துக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

  காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். #Accident
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குஜராத் மாநிலம் பாவ் நகர் பகுதியில் லாரி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #lorryaccident
  காந்திநகர்:

  குஜராத் மாநிலம் பாவ் நகர் பகுதியில் இன்று காலை சிமெண்ட் ஏற்றிச் செல்லும் லாரி சென்றுள்ளது. சிமெண்ட் மூட்டைகளுக்கு மேல்  பலர் அமர்ந்து பயணம் செயதுள்ளனர். பாவல்யாலி பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

  மேலும் இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #lorryaccident

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தாக்கிய புழுதி புயல் மற்றும் பலத்த மழைக்கு 19 பேர் பரிதாபமாக பலியாகினர். #Duststorm
  புதுடெல்லி:

  தலைநகர் டெல்லியில் இன்று உக்கிரமான வெயில் தாக்கியது. ஆனால் மாலையில் வானிலை முற்றிலுமாக மாறியது.

  மாலையில் மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதனால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டன.  இந்நிலையில், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தாக்கிய புழுதி புயலுக்கு 15 பேர் பரிதாபமாக பலியாகினர்.

  புழுதி புயல் தாக்கியதில் தலைநகர் டெல்லியில் 2 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். பலத்த காற்று வீசியதில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

  இதேபோல், மேற்கு வங்காளத்தில் பெய்து வரும் மழையில் மின்னல் தாக்கியதில் 8 பேர் இறந்தனர். 

  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பலத்த மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Duststorm #tamilnews
  ×