என் மலர்

  செய்திகள்

  டெல்லி, உ.பி., மேற்கு வங்காளத்தில் புழுதி புயலுக்கு 19 பேர் பலி
  X

  டெல்லி, உ.பி., மேற்கு வங்காளத்தில் புழுதி புயலுக்கு 19 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தாக்கிய புழுதி புயல் மற்றும் பலத்த மழைக்கு 19 பேர் பரிதாபமாக பலியாகினர். #Duststorm
  புதுடெல்லி:

  தலைநகர் டெல்லியில் இன்று உக்கிரமான வெயில் தாக்கியது. ஆனால் மாலையில் வானிலை முற்றிலுமாக மாறியது.

  மாலையில் மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதனால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டன.  இந்நிலையில், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தாக்கிய புழுதி புயலுக்கு 15 பேர் பரிதாபமாக பலியாகினர்.

  புழுதி புயல் தாக்கியதில் தலைநகர் டெல்லியில் 2 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். பலத்த காற்று வீசியதில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

  இதேபோல், மேற்கு வங்காளத்தில் பெய்து வரும் மழையில் மின்னல் தாக்கியதில் 8 பேர் இறந்தனர். 

  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பலத்த மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Duststorm #tamilnews
  Next Story
  ×